May 15, 2010

பிரமோத் முத்தாலிக்:ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ப்பு மகன்.


புதுடெல்லி:மதக்கலவரத்தை நடத்த பணம் வாங்கிய ஸ்ரீராம சேனாவின் தலைவன் பிரமோத் முத்தாலிக்கை வளர்த்து எடுத்தது ஹிந்துதுத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸாகும்.1963 ஆம் ஆண்டு வடக்கு கர்நாடகாவின் பகல்கோட்டில் பிறந்த முத்தாலிக் 13-ஆம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்கள் 1966 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை ராணுவப் படையான பஜ்ரங் தளில் சேர்த்துவிட்டனர்.

ஒரு வருடத்திலேயே முத்தாலிக் பஜ்ரங்தளின் தென்னிந்திய கண்வீனராக மாறினார்.
மிகப்பெரிய கனவுகளும், அர்ப்பணிப்பும், தீப்பொறி பறக்கும் பேச்சாற்றலும் உடையவர் என ஹிந்துத்துவாவின் உறுப்பினர்கள் முத்தாலிக்கை புகழுகின்றனர்.23 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் சேவையை 2004 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தார் முத்தாலிக்.

இதற்கிடையே பலமுறை சட்டத்தை மீறியதன் காரணமாக பல வழக்குகளில் சிக்கினாலும், ஒரேயொருமுறை மட்டுமே 2 மாதம் சிறைவாசத்தை அனுபவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்த்துவா அமைப்புகளிடம் போதுமான ஹிந்த்துவா சிந்தனை இல்லை என்பது முத்தாலிக்கின் குற்றச்சாட்டு.பா.ஜ.க அரசு இதர அரசுகளைப் போல் பூரண தோல்வியை சந்தித்துள்ளது எனக்கருதி, கடந்த 2007 ஆம் ஆண்டு தீவிர ஹிந்துத்துவா வெறிக்கொண்ட ஸ்ரீராம சேனாவை துவக்கினார்.

தெஹல்காவின் ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தலிக் கூறுவது, 'இயக்கத்தை வளர்ப்பதற்கான வழி கலவரங்களாகும்' என்று.2008 ஆம் ஆண்டில் ஸ்ரீராமசேனாவின் அரசியல் கட்சியான ராஷ்ட்ரிய ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை துவக்கி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அதில் படுதோல்வியை சந்தித்தது அக்கட்சி. பணமில்லாததால்தான் தேர்தலில் தோல்வியுற்றதாக கூறுகிறார் முத்தாலிக்.

வெற்றிப் பெற பணமும், மதமும், கொள்ளையும் தேவை அது எங்களுக்கு புரியவில்லை. கேடுகேட்ட அரசியல்தான் இன்றுள்ளது' என முத்தாலிக் தனது கொள்கையை விளக்குகிறார்.
தேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் ஹிந்துத்துவா முகத்தை மேலும் வலுப்படுத்த முத்தாலிக் திட்டமிடுகிறார். கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும், வடக்கு பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஸ்ரீராம சேனாவின் செயல்பாடுகள் இப்பகுதியுடன் ஒதுங்கிவிட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் எம்.எஃப்.ஹுசைனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்று அவருடைய ஓவியங்களை சேதப்படுத்தி தேசிய அளவில் பிரசித்திப் பெற முயன்றனர்.ஒரு மாதத்திற்கு பிறகு பெங்களூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து முத்தாலிக் சர்ச்சைக்கிடமான முறையில் உரை நிகழ்த்தினார். 'வெடிக்குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்த 700 ஸ்ரீராமசேனா தொண்டர்கள் தயாராக இருக்கின்றார்கள்' என்பது தான் அப்பிரகடன்ம்.

’எங்களால் இனிமேலும் பொறுக்க முடியாது. ஹிந்துத்துவத்தை பாதுகாக்க அடிக்கு அடி அல்லாத வழியில்லை. ஹிந்துக்களின் மதரீதியான ஆதிக்கம் உடைய பகுதிகளில் தொடர்ந்து தாக்கப்படுகிறோம். ஹிந்துப் பெண்களை ஏமாற்றினால் மற்ற மதங்களின் அதன் இருமடங்கை நாங்கள் திட்டமிடுவோம்’ என்று முத்தலிக் முன்னறிவிப்பு செய்தார்.

ஒரு மாதம் கழித்து 2009 ஜனவரியில் ஹுப்ளியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் கைதுச் செய்யப்பட்ட நாகராஜ், ஜம்பாகி, கிங்பின் ஆகியோர் ஸ்ரீராமசேனா தொண்டர்கள் என முத்தாலிக் ஒப்புக்கொண்டார்.பின்னர் இரவு கிளப் தாக்குதலில் மூலமாக ஊடகங்களில் ஸ்ரீராம சேனா இடம்பிடித்தது.ஹிந்துக்களின் திருமணங்களில் முஸ்லிம்கள் விருந்தினராக பங்கேற்பதை திருமணம் நடக்கும் இடங்களில் வைத்தே ஸ்ரீராமசேனா தொண்டர்கள் தடுத்தனர்.

ஹிந்துப்பெண்களிடம் பேசிய முஸ்லிம் இளைஞர்களை அடித்து உதைத்தனர். தொடர்ந்து 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் முஸ்லிம் வேட்டையை வலுப்படுத்தியதும் ஸ்ரீராமசேனாவின் ரகசிய அஜண்டாக்களாகும்.லவ் ஜிஹாதின் மூலமாக இன்னொரு கலவரத்தை நடத்த பணம் வாங்கியதாக டெஹல்காவின் ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தாலிக் வெளிப்படுத்துகிறார்.

No comments: