May 6, 2010

ஹிந்து சாமியார் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணை.

பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:

1) சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே?

நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

2) சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் நிதி மோசடி நடந்துள்ளது தானே?

நித்யானந்தா: அதில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை. சாமி சிலைகளை இங்கு தயாரித்து அமெரிக்காவில் உள்ள பக்தர்களுக்கு கொடுத்தோம். அதன் மூலம் கிடைத்த பணம் அனைத்துக்கும் கணக்கு உள்ளது. அது தனிப்பட்ட யாருக்கும் செல்லவில்லை. அந்த பணம் முழுவதும் தியான பீடத்தின் டிரஸ்டில் உள்ளது.பணத்தை பெற்றுக் கொடுக்க இடைத்தரகர்கள் யாரும் இல்லை. இதனால் சாமி சிலை விற்ற பணம் முழுவதும் நேரடியாக டிரஸ்டுக்கு வந்துள்ளது.

3) சிஐடி அதிகாரி: உங்கள் டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடி பணம் எப்படி வந்தது?

நித்யானந்தா: அந்த பணத்துக்கும், அது எப்படி வந்தது என்பதற்கும் உரிய கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு பைசாவும் யாரிடம் இருந்து, எப்படி வந்தது என்பதற்கு கணக்கு வைத்துள்ளோம். டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடியி்ல் பெரும்பாலானது பக்தர்கள் கொடுத்த அன்பளிப்பு தான். அதற்கும் கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை பார்த்துக் கொள்ளலாம்.

4) கேள்வி: தியான பீடத்துக்கு வந்த பெண்களிடம் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதே.. அது எதற்காக?

நித்யானந்தா: தியான பீடம் சார்பில் ஆழ்நிலை தியான பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும். எனது சீடர்கள் தான் அந்த ஒப்பந்தத்தை போட்டனர். அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் உண்மையிலே எனக்குத் தெரியாது. அந்த ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த ஒப்பந்தம் நம் நாட்டில் உள்ள யாருடனும் போடப்படவில்லை. அமெரிக்காவில் உள்ளவர்களுக்காக மட்டுமே போடப்பட்டாத என் சீடர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு போகிறது அந்த விசாரணைக் காட்சி வீடியோ. நித்யானந்தா-பக்தானந்தா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: இந் நிலையில் மத உணவுர்களை தூண்டியது, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவும் அவரது சீடர் பக்தானந்தாவும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இருவரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். வேறு வழக்குகளிலும் நித்யானந்தா கைது? இந் நிலையில் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளின் கீழ் அவரை கைது செய்ய கர்நாடக சிஐடி போலீசார் தீர்மானித்துள்ளனர்.இதையடுத்து அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற நித்யானந்தா முயற்சி செய்து வருகிறார்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நித்யானந்தாவிடம் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் செல்ல உள்ளது. உண்மை கண்டறியும் சோதனை சட்ட விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம், இது தொடர்பான வழக்கு எதுவும் எங்களிடம் இல்லை என்றார்.

1 comment:

Anonymous said...

அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

நிர்வாக குழு,

தகவல் வலைப்பூக்கள்.....

http://thakaval.info/blogs/news/