Oct 7, 2010

பாபர் மசூதியும் & அதை உடைத்த பாசிச ஹிந்துதுவாவும் குறித்த ஒரு ஆய்வு.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்பது ஏறக்குறைய இந்திய தேசத்தை ஒரு முழுமையான இந்துக்களின் தேசமாக மாற்றுவதற்கு இந்துத்துவ இந்தியாவின் சிந்தனை மடங்கள் கையாண்ட வழிமுறை, பாரதீய ஜனதாக் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவு என்பதை நானும் நீங்களும் ஒன்றும் அத்தனை கடினமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, பாரதீய ஜனதாக் கட்சியின் எந்த முதலமைச்சரும் அதன் அதிகார பீடமாகிய ஆர்.எஸ்.எஸ் காட்டும் வழிமுறைகளின் படிதான் நடந்து கொள்ள முடியும்,

இரண்டு சமூகங்களுக்கு இடையில் வழக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் அணைந்து கிடந்த நெருப்பை ஊதி ஊதிப் பெருஞ் சுடராக்கிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்கள், இந்துத்துவ வெறியர்கள் அனைவரும் ரொம்ப நல்லவுங்க என்றும்,மசூதியை உடைத்த கரசேவகர்கள் ரொம்பப் புனிதமானவர்கள் என்றும் இப்போது பல அறிஞர்கள் தங்கள் அருளுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உடைக்கப்பட்ட மசூதிக்காக குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய ஆற்றல்கள், நேராக சவுதி அரேபியப் பாலைவனத்தின் ஈச்சை மரங்களில் இருந்து குதித்து அயோத்திக்கு வந்து விட்டார்கள் அல்லது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கிரகத்து மனிதர்கள்.

இந்துத்துவ இயக்கங்கள் எத்தனை புனிதமானவை, அவை யாருக்கும் தீங்கு இழைத்திருக்குமா? குழந்தைகளோடு பாதிரியாரைக் நெருப்பில் இருந்து காப்பாற்றிய பெருந்தன்மையாளர்கள் ஆயிற்றே அவர்கள், பல கர்ப்பிணிப் பெண்களை அவர்களின் கருவைக் காப்பாற்றிய உதாரண புருஷர்கள் ஆயிற்றே அவர்கள், கலவரங்களில் கொல்லப்பட்ட பல மனிதர்களின் ஆவியை அழைத்துத் தான் இவர்களின் புனிதத்தை வேக வைக்க வேண்டும். இதே புனிதர்கள் தானே மதக் கலவரங்களை நடத்திக் காட்டினார்கள், இதே புனிதர்கள் தானே ரத யாத்திரை என்ற பெயரில் ஒரு ரத்தயாத்திரையை நடத்தி மதத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இந்த நாட்டைத் துண்டாடவும், அதில் குளிர் காயவும் பயணம் துவங்கினார்கள்.நாடுமுழுக்க குண்டுவெடிப்புகளை நடத்தி அதை முஸ்லிம்கள் தலையில் போட்டு அரசியல் நடத்தினார்கள்.

இவர்கள் மசூதியை உடைத்து ராமர் கோவில் கட்டி ஹிந்து மதத்தை பாதுகாக்க போவதாகவும், ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கபோவதாகவும் கூப்பாடு போடுகிறார்கள் அப்படிப்பட்டவர்கள் எல்லா ஹிந்த்துக்களிடமும் உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்ட இன்று முதல் மனு தர்மத்திலும், கீதையிலும் திருத்தங்கள் செய்கிறோம், வருண அமைப்பு இந்து சமூகத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது, இனி அய்யரு வீட்டுப் புள்ளைகளை பள்ளன், பறையன், சக்கிலியனுக்கும் கட்டிக் குடுப்போம் என்று எவனாவது ஒரு இந்துத்துவ அமைப்பு சொல்லட்டும் பார்க்கலாம்.ராமரு என்ன, அவரு தம்பி லெட்சுமணர், பரதரு, அவுக அப்பா தசரதரு எல்லாப் பயலுகளுக்கும் ஆளாளுக்கு ஒரு கோவிலை கட்டி கொடுப்போம். இதை ஒரு இந்து நாடு என்றே அறிவிப்போம். இதை செய்ய இந்த காஞ்சி சங்கரமடமும், அத்வானியும், வாஜ்பேயும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் தாயாரா?

பாபர் மசூதி தீர்ப்பின் நீதிபதிகளில் ஒருவரான உல்லாக்கான் கூடத் தனது தீர்ப்பின் சாரத்தில், கண்டுபிடிப்புகளில் “மசூதியைக் கட்ட எந்தக் கட்டிடங்களும் இடிக்கப்படவில்லை” என்றே சொல்லி இருக்கிறார். அவர் தலைல குல்லா மட்டும் தானே போட்டீர்கள், இந்த நாட்டுக்குப் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் போட்ட மாதிரி.இவர்கள் சட்டம் படிக்காம என்ன சனாதானமா படிச்சுட்டு அலகபாத் நீதி மன்றத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வெகுஜனங்களின் மத்தியில் ஒரே அலையடிக்க ஆரம்பிச்சு அது தானா வந்து மசூதியை இடித்து விட்டதாம் இந்த ஹிந்துத்துவா நிதிபதிகள் சொல்கிறார்கள். ஆமா, அங்கே அத்வானி இல்லை, கல்யாண் சிங் இல்ல, முரளி மனோகர் ஜோஷி இல்ல, வினய் கட்டியார் இல்ல, ஏன் இந்துக்களே இல்லை என்று சொல்லி விடுங்களேன், இஸ்லாமியர்களே இந்த மசூதியை இடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீதே பழியைத் திருப்பிப் போடலாமே, அதற்கு யாராவது ஒரு ஹிந்துத்துவ அறிவு ஜீவி கட்டுரை எழுதி உங்கள் பார்பன இங்கிலீஷ் பேப்பர்ல போடுங்களேன்.

கோபுரத்தின் கும்பங்கள் (மினாராக்கள்) மாறி மசூதியாக ஊடகங்களில் உருமாற்றம் பெற்று வந்து விட்டதாம், அட என்ன ஒரு கண்டு பிடிப்பு, கோபுரம் இடிஞ்சு விழுந்தா ஊருக்கே ஆபத்து, கோபுரத்தில விரிசல் விழுந்தா பரிகாரம் பண்ணிப் பால் குடம் எடுத்தாத் தான் நாடு செழிக்கும், நல்ல மழை பெய்யும் என்று ஊளை இடும் இந்துத்துவ அறிவுத் தளத்திற்கு ஒரு மசூதியின் கும்பங்கள் (மினாராக்கள்) கோபுரத்தைப் போன்ற நம்பிக்கைகள் சார்ந்தது தான் என்பது எப்படிப் புரியும், இதுக்கு மட்டும் வெகுஜன அலையடிக்கும், ஆனால், வாங்கப்பா ஒரு தலித் நடக்கக் கூடாதுன்னு சொல்ற பாதைய நாம எல்லாரும் போயித் திறந்து விடுவோம் என்று சொல்லிப் பாருங்கள், அலையும் அடிக்காது, காற்றும் அடிக்காது, ஒரு மயிரும் அடிக்காது.

இன்னும் அந்த மசூதியின் கீழ் என்ன என்ன இருந்தது என்று சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை, நிச்சயம் ஒரு நாள் ராமர் எழுதி வச்ச உயில் இருக்கு, அவர் போட்ட சட்டங்களின் நகல் இருக்கு, அதிலே அவர் தெளிவாக இட ஒதுக்கீடு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் என்றெல்லாம் சொல்வார்கள், இந்தியா எவ்வாளவு முன்னேறி வந்தாலும் தலித்து தான் பீ அள்ளனும், சக்கிலியன் தான் செருப்புத் தைக்கணும் என்று ராமர் அவுங்க அப்பா தசரதர் எல்லாம் போட்ட சட்ட நகல் கூட அப்படியே அந்த மசூதிக்குக் கீழே பத்திரமாய் இருக்கும். இன்னும் யாரவது ஒரு அகழ்வாராய்ச்சியாளர் வந்து அவற்றை தோண்டி எடுத்து நமக்கெல்லாம் அலகாபாத் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சமர்ப்பணம் செய்வார். அதுவரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

No comments: