Nov 28, 2010

உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார்: தமிழ் ஈழம் அமையும்:வைகோ,

சென்னை தியாகராய நகரில் 27-11-2010-இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது.

அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.

பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது. முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இந்தியா சொல்கிறது. ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.

ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.
காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.

பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

2 comments:

valipokkan said...

பழ நெடுமாறன் கெழட்டு நாயே இதுக்கு முன்னாடி நீ எத்துனை போரில் பங்கேற்றாய்..இளைன்கர்கள் போக வேண்டுமாம் 5 கட்ட போருக்கு நீ வாங்குன காசுக்கு எவண்டா பலி கடா ஆகுறது..பல ஈழ தமிழர் வீடு குழந்தைகள் சினிமா மோகம் கொண்டு அலைகிறது ..இதில் தமிழ் நாட்டு இளைன்கர்கள் பங்கேற்க வேண்டுமாம்..இந்த பரதேசிய உள்ள புடிச்சு போட்டு காய் அடிங்க..அப்போதான் அடங்குவான்..

PUTHIYATHENRAL said...

மிஸ்டர் வழிப்போக்கன் உங்களது கருத்தை வெளியிட முடியவில்லை. உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. உங்கள் விமர்சனங்கள் கடுமையாக இருக்கட்டும் பரவாயில்லை ஆனால் நாய் போன்ற வார்த்தைகள் வேண்டாம் அதனால் எங்களால் பிரசுரிக்க முடியவில்லை. வருந்துகிறேன்.