Nov 14, 2010

சட்டம் நம் கையில்: "சட்டத்தை எப்படி பயன்படுத்துவது" திரவிய நடராஜன்.


இதுவரை நீங்கள் விளையாடாத விளையாட்டை உங்களுக்கு சொல்லி தருகிறேன். அனுபவம் எதுவும் தேவையில்லை. அதிக பணம் எதுவும் செலவு செய்ய வேண்டாம். அதேபோல நேரத்தையும் அதிகமாக செலவு செய்ய வேண்டாம். இது மத்திய அரசால் சட்ட பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டு!. நாம் விளையாடுவதால் இந்த சமுதாயத்திற்கே பலன் கிடைக்கும். இனி விளயாட்டிற்கு வருவோம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005. ( Right to Information Act 2005.)

நம் தமிழ் நாட்டை பொறுத்த வரையில் இச்சட்டத்தை அதிக அளவில் யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், காசை விட்டெறிந்தால் காரியம் நடக்கிறது. இதுக்கு போய் நேரத்தை வேஸ்ட் பண்ண முடியுமா? என்ற மன நிலையும் ஒரு காரணம். இதுவே ஊழல் மேலும் பெருக வழி வகுக்கிறது. வட இந்தியாவை பொறுத்த வரை நன்காகவே இச்சட்டம் பயன் படுத்தப்படுகிறது.

டெல்லியில் ஒரு பழைய பேப்பர் பொறுக்கும் ஒருவர், ரேஷன் கார்டு கேட்டு விணப்பித்தார். மாதம் பல ஆகியும் கார்டு கிடைக்கவில்லை. " என்னுடைய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை , வழங்கப்படாதன் காரணம் இவை பற்றி தகவல் தரவும் " என ஆர்.டி.ஐ ஆக்ட் படி விண்ணப்பித்தார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த அதிகாரி இரண்டே நாளில் ரேஷன் கார்டை அவர் வீட்டிற்கே கொண்டு போய் கொடுத்துவிட்டு டீயும் வாங்கி கொடுத்து சமாதானம் செய்துவிட்டு வந்தார். இது ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்திற்கு இச்சட்டம் பயன்பட்டது. இனி ஊழலை வெளிக்கொண்டுவந்ததை பார்ப்போம்.

1. இச்சட்டத்தின் மூலம் தகவலை பெற்று தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் காமன் வெல்த் கேம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது.

2. மகாராஷ்டிராவில் முதலமைச்சரை பதவியிலிருந்து தூக்கி எறிந்த ஆதார்ஷ் கூட்டுறவு வீட்டு சங்க ஊழல்.
நம்மால் இந்த அளவுக்கு பெரிய ஊழலை அம்பலப்படுத்த முடியாவிட்டாலும், ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல நம் லெவலுக்கு சிறிய ஊழலை அம்பலப்படுத்தலாம். எப்படி, யாரிடம் விண்ணப்பிக்கவேண்டும், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விலா வாரியாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தொடர் பதிவாக பதிவிடப்படும். அதற்கு முன்பு இச்சட்டத்தின் நகலை இங்கு கிளிக் http://rti.gov.in/rti-act.pdf செய்து டவுன் லோடு செய்து கொள்ளவும்.ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம். வாரீர்.

நன்றி : MR. திரவிய நடராஜன்.

4 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

[url=http://cialisnowdirect.com/#vlxdd]cialis 20 mg[/url] - cialis 40 mg , http://cialisnowdirect.com/#wqzcz buy generic cialis

Anonymous said...

Young students can also be able to discover the manners to operate in unfavourable situations and several more proposals on safe driving. If you vehicle is of low mileage then also you happen to be entitled to discounts. Car insurance coverage is another expense over far better than the considerable expense of owning and maintaining a automobile, notably once you concentrate on all one other types of insurance which might be necessary in nowadays's world, thus it's only natural to need to urge cheap vehicle insurance although it is not compromising on coverage. qMcRIEI, [url=http://www.igetcheapcarinsurance.com/auto-insurance-florida-law/]auto insurance florida law[/url], oSbOEvG, [url=http://www.igetcheapcarinsurance.com/car-insurance-quotes-kmart/]car insurance quotes kmart[/url], wQhgrLH, [url=http://www.igetcheapcarinsurance.com/multiple-vehicle-insurance-discount/]multiple vehicle insurance discount[/url], OQLlMlQ,

Anonymous said...

When you get those two, they cover your home from both floods and quakes. If you've questions or are concerned about specific limitations or exclusions, meet together with your agent to understand more about the options. For the membership people they offer the insurance quotes online to their post office box if they have any changes with them. fpcLyaI, house insurance, rQpsgKu, how can i calculate homeowners insurance, iyaOWzL, best homeowners insurance leads, CcLyZxo,