Dec 20, 2010

காந்தியை கொன்றவர்கல்தான், கர்கேரேயையும் கொன்றவர்கள் : திக் விஜய்சிங்.

போபால்/புதுடெல்லி : கர்காரேக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் விடுத்த மிரட்டல் தொடர்பாக நான் கூறிய கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

"நான் எதனைக் கூறினேனோ அதில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை." செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கவே திக்விஜய் சிங் இதனை தெரிவித்தார். மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா (ஆர் எஸ் எஸ்)அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார்.

இவர் கூறிய கருத்திற்கு சங்க்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், திக்விஜய்சிங் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. எல்.கே.அத்வானி போன்றவர்கள் பிரக்யாசிங் தாக்கூரைச் சென்று சந்தித்தால் எவரும் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால், நான் எவரையும் சென்று சந்தித்தால் என்னை முஸ்லிம் ஆதரவாளன் என்றும், தேசத்துரோகி என்றும் முத்திரைக் குத்துவார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
"நீங்கள் வெளியிட்ட அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்தீர்களா?" என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திக் விஜய்சிங், அவர்களின் ஆசி இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தார்.

About Hindutva, Sanghparivar, RSS, Fascism, Religious Terror,
"The whole business of Hindutva and its nationalism is a poison in the body politic of India. We have to accept that the poison has been injected and it will take a lot to purge it," Arundhati Roy

செய்தி:தேஜஸ்

3 comments:

வசந்த் ரெங்கசாமி said...

காங்கிரஸ்காரணுங்க நாட்டை உருப்பட விட மாட்டானுங்க.இவனை மாதிரி கோடாரி காம்பு இருக்குற வரைக்கும் இந்தியா உருப்பட்டாப்லத்தான்

Anonymous said...

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ். இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது

? said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !