Feb 9, 2011

யார்? பயங்கரவாதி!!! போலீசா? பொதுமக்களா?

புதுடெல்லி,பிப்.10: போலி என்கவுண்டர் கதையை உருவாக்கி டெல்லி போலீசார் தீவிரவாதிகளாக சித்தரித்த ஏழு முஸ்லிம்களை விடுதலைச்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மோதல் கதையும், இதர குற்றச்சாட்டுகளும் போலீஸ் நிலையத்தில் வைத்து தயாராகியுள்ளது ('carefully scripted in office'.) என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் தர், அப்துல் மஜீத் பட், அப்துல் கய்யூம் கான், பிரேந்தர் குமார் சிங் ஆகியோர் நிரபராதிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விரேந்தர் பட் தீர்ப்பளித்தார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நான்கு போலீஸ்காரர்களுக்கெதிராக விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் போலீஸ் துறைக்கு வெட்கக்கேடு எனவும், போலீஸார் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிட இந்த போலி என்கவுண்டர் கதைகள் காரணமாகும் எனவும் நீதிமன்றம் விமர்சித்தது. இத்தகைய வீழ்ச்சிகளை எளிதாக கருதிவிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.

2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் ஆகிய நான்கு பேருடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். காரில் செல்லும் பொழுது இவர்கள் போலீசாரின் சோதனைக்கு வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றதாகவும், போலீசார் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டு பின்னர் அவர்களுடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைதுச் செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ராணுவ உடைகள், கையால் வீசும் கிரேனேடுகள், சீன தயாரிப்பான ஒரே ரவுண்டில் பதினெட்டுமுறை சுடும் பிஸ்டல், 38 ஏ.கே.47, லிவ் கேட்ரிட்ஜஸ், 50 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் விமானப்படையின் பாலம் ஸ்டேசனின் வரைப்படம் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் உத்தரவின்படி இவர்கள் செயல்பட்டார்கள் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தன.
இவர்கள் நான்கு பேரையும் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் இதர மூன்று பேரையும் கைதுச் செய்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

3 comments:

Unmai Virumbi said...

MaashaAllaah! Very good news. By the way this news has been copied from www.Paalaivanathoothu.blogspot.com http://paalaivanathoothu.blogspot.com/2011/02/blog-post_3279.html

Atleast you could put the source: www.Paalaivanathoothu.blogspot.com

Unmai Virumbi said...

பாலைவனதூதில் இருந்து அப்படியே நகல் எடுத்து ஒரு வார்த்தை பிசகாமல் பிரசுரிக்கும் பொழுது குறைந்த பட்சம் நன்றி: பாலைவனதூது என்றாவது போட்டிருக்கலாம்! இது முதல் தடவையல்ல சுட்டிக்காட்டுவது!!

PUTHIYATHENRAL said...

அன்புள்ள நண்பருக்கு உங்களுக்கு நானும் பலமுறை சொல்லிவிட்டேன் உங்களுக்கும் புரியவில்லை. பளைவனதூது நடத்திய கட்டுரை போட்டியை நாங்கள் பிரசுரித்துள்ளோம். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் போட்டு ஒரு தனி செய்தியே போட்டுளோம். பார்க்க http://www.sinthikkavum.net/2011/02/blog-post_5844.html அதே நேரத்தில் தேஜஸ் நாளிதழில் இருந்து பிரசுரிக்கப்படும் செய்திகளுக்கு நாங்கள் நன்றி தேஜஸ் என்று போட்டிருப்போம். நீங்கள் சொல்லும் இந்த செய்தியில் போடாமல் விடுபட்டுள்ளது. அடுத்து ஒரு செய்தி நண்பரே ஏன் உங்களிடம் இந்த soure போடாதது ஒரு பெரிய கொலை குற்றம் போல் அடிக்கடி வந்து சொல்லி கொண்டு இருக்குறீர்களே. எங்களுக்கு புரியவில்லை. உங்களை போல் உள்ள பல நண்பர்களுக்கும் சொல்லி கொள்வது இதுதான். நல்ல செய்திகளை மக்கள் படிக்கட்டும் என்று மட்டும் நினையுங்கள். நீங்கள் என்ன செய்திகளை விற்கும் நிறுவனமா? என்செய்தியை போட்டு நீங்கள் பணம் சம்பாதித்து விடீர்கள் என்று சொல்ல. இது முழுக்க முழுக்க எங்கள் கை பணத்தை, நேரத்தை செலவழித்து எந்த விளம்பர நேக்கமும், புகழ் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கமும் இல்லாமல் நடத்தபடுகிறது. இது சம்மந்தமாக கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அதை செய்வதற்கு பாலைவன தூதுக்கு மட்டும் உரிமை உள்ளது , இதை பாலைவன தூது நண்பர்கள் தேவை பட்டால் விளக்கம் கேட்கலாம். தேஜஸ் செய்திகளை soure இல்லாமல் போட எங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளது. மேலதிக விபரம் தேவை என்றால் எழுதுங்கள் ஆசிரியர் புதியதென்றல் _ puthiyathenral @ ஜிமெயில்.com நன்றி சகோதரரே. அன்புடன் ஆசிரியர் - புதியதென்றல்.