Feb 18, 2011

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

குஜராத்தில் அரங்கேறிய இனபடு கொலைகள் முற்றிலும் அரசு ஆதாரவுடன்
காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன் நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சியானது. இந்த இன அழிப்பில் ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் வீடு திரும்பாத நிலை உள்ளது. இந்த கொடூரங்கள், படுகொலைகள் அனைத்தும் முதல்வர் நரேந்திரமோடி ஒரு மில்டரி கமாண்டர் போல் முன்னின்று நடத்தினார் என்பது மிகவும் அதிர்ச்சியான செய்தி.

பாரதிய ஜனதாவோடு கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என்று தேர்தல் பிரசாரத்துக்கு உள்ளே அனுமதிக்க வில்லை. அமெரிக்கா தீவிரவாதி என்று மோடிக்கு விசா வழங்க வில்லை. உச்ச நீதி மன்றம் நீரோ மன்னன் என்று பட்டம் கொடுத்தது. சி.பி.ஐ ஆள் 9 மணி நேரம் விசாரிக்க பட்ட இந்திய மாநிலங்களின் ஒரே முதல்வர் மோடி...இப்படி பல பெருமைகளுக்கு சொந்தகாரர். இவரின் இத்தகைய சாதனைகள் சொல்லி மாளாது.

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் படுவதற்கும், எண்ணிலடங்கா பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதற் கும் காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரி துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய் யப்பட்டு அவரது வீட்டிலேயே எரிக்கப்பட்டதற்கும், பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அனாதைகளாய் சொந்த நாட் டில் அகதிகளாய் மாறுவதற் கும் காரணமான குஜராத் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது நரேந்திர மோடி யும் அவரது சகாக்களும் என்பதை தெகல்கா செய்தி ஊடகம் விடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளது. இத்தகைய கொடும் குற்றத்தைச் செய்த ஒருவர் இந்திய அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதற்கு கடுகளவும் அரு கதை இல்லை. நரேந்திர மோடி செய்த கொடும்குற்றங்கள் ஆதாரங்களோடு அம்பல மாகிவிட்ட நிலையில் அவர் முதல்வராகத் தொடர்வது தேசிய அவமானம். உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சகாக் களையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

2002ரூன் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு
மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் என்.ஹெச்.ஆர்.சி போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித்ததுடன் கலவரத்தில் அரசாங் கத்தின் பங்கேற்பை உறுதி
செய் துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின்
அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித
உரிமை ஆணையமும் கண்டித்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில் நீதியர சர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமி ஆகியோர் அளித்த தீர்ப் பில் ~ரோம் எரிந்து கொண்டிருக் கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு| மோடியை ஒப்பிட்டார்கள். கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு ~குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும்| என்று நீதிபதிகள் குறிப்பிட் டார்கள். அப்படி சொன்னது மட்டுமல் லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது என கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை
மாற்றவும் செய்தார்கள்.

கலவரம் நடந்த பகுதிகள் சிலவற் றிற்கு நேரடியாக சென்று குற்ற வாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள் ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளை கண்டித்த நீதிபதி களை இடம் மாற்றம்
செய்தார். சுமார் 20ரூக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு,
எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் ~நீ செய்த இந்தச் செயலுக்கு,
உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும்| என தெரிவித்தனர். ஆனால், அந்த
நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி
விடுதலையடைந்து சுதந்திரமாக உள்ளான். 2002 ல்தனக்கு எதிராக சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கிய நேரத்தில் அதிலிருந்து தப்பிக்க இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை பயங்கரவாதிகளாக தன்னை கொல்ல வந்தவர்களாக சித்தரித்து அவர்களை என்கவுண்டர்| மூலம் படுகொலை செய்தார். அது தொடர்பாக விசாரணைகள் இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட 3 பேரும் அப்பாவிகள் என்பதும் மோடி திட்டமிட்டே அவர்களை படுகொலை செய்ய தூண்டியதும் தெரிய வந்தது. இப்படி பல சாதனை களுக்கு சொந்தகாரர் மோடி.

8 comments:

Bharath.KS said...

just i wants to remember u that, he is number 1 chief minister India..

M. Farooq said...

yes, dear Bharath, he is a number one criminal amongs BJP Criminals in India.

KANNAPIRAN said...

http://www.narendramodi.in/video/163

mulakkam said...

my answer is kettavan..,
thank you for quiz program

கே. ஆர்.விஜயன் said...

அவர் நல்ல நிர்வாகி. மற்றபடி நடந்தவைகளை நியாயப்படுத்த முடியாது என்றாலும் அதற்க்கு முன் நடந்த சில சம்பவங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மதம் நம்மை ஒழுங்கு படுத்தவே அன்றி அடுத்தவருக்கு தீங்கு விழைவிக்க அல்ல. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி. உங்கள்ளுடைய கருத்து வரவேற்க படுகிறது. கண்டிப்பாக மத வெறி ஒழிப்போம் மனித நேயம் காப்போம். நாம் எல்லோரும் ஒரே தாய், தந்தையின் மக்கள்தான். உலகில் உள்ள எல்லா நிற மொழி மக்களும் சகோதரர்களே. ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துவோம். ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னும் ஒரு பயங்கரவாதம் தீர்வு ஆகாது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.