Feb 17, 2011

ஹிந்துத்துவா அமைப்புகளும் & அதன் சேவைகளும்: DR. சாட்டர்ஜி!!

1. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்: டாக்டர் கேசவ் பாலிராம் ஹெக்டேவர், என்ற சித்புரம் சித்பவன் பிராமணர் தான் R.S.S. என்ற இந்த அமைப்பை நிறுவியவர். இன்று இவர்கள் பெரியதொரு சக்தியாக வளர்ந்து விட்டார்கள். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரிய வேட்டாக மாறிவிட்டார்கள். இவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் இவைபற்றி நம்மவர்கள் பலர் அறியமாட்டார்கள். இவர்களின் கொள்கைகளுள் சில:

* பெண்களை நம்பாதே!

* இவர்கள் பெண்களின் வாக்குரிமையை எதிர்கின்றார்கள் - மறுக்கின்றார்கள்.

* சித்பவன் பிராமணர்கள் மட்டுமே இந்த அமைப்பின் தலைவர்களாக இயலும். (இவர்களின் கண்கள் நீலநிறமாக இருக்கும். கீழ் சாதியினர் இவர்களை நல்ல பாம்புகள் என அழைப்பார்கள்)

* இவர்கள் கம்யூனிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்.

* இவர்களின் மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்.

* இவர்கள் திராவிட இயக்கங்களுக்குப் பகிரங்கமான வைரி.

* எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்.

* உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

* இந்த அமைப்பு சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஆக்கிடத் துடிக்கின்றது.

* வதந்திகளைப் பரப்புவதிலும், மக்களைப் பொய் சொல்லித் திருப்புவதிலும் இவர்கள் தனிப்பயிற்சிப் பெறுகின்றார்கள்.

R.S.S. ன் சாதனைகள்:
மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள். (தாயகத் தந்தை அண்ணல் காந்தி அவர்களைக் கொலை செய்ததற்கு R.S.S. காரர்கள் சொல்லும் காரணம்: அவர் பல்வேறு வகுப்பாரிடையேயும் ஒற்றுமையை வளர்த்தார். எல்லா மக்களும் சமம் எனப் போதித்தார். எல்லா மக்களையும் போலத்தான் கீழ் ஜாதி ஹிந்துக்களும் என்பதை வலியுறுத்தினார்).

* காந்தியைக் கொலை செய்த கோட்சே காலம் முதல் மலேகன், அஜ்மீர் தொடர் குண்டு வெடிப்புகள் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்
* டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விஷம் தந்து கொலை செய்ய முயன்றார்கள்
* காமராசநாடார் அவர்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.
* கொலை செய்யும் எண்ணத்தோடு கர்பூரி தாகூர் அவர்களைத் தாக்கினார்கள். ஏனெதில் அவர் சவரத் தொழிலாளி சமுதாயத்தைச் சார்ந்தவர்.
* அண்மை காலத்தில் இவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துத் தங்களது பொதுக் கொலைத் திட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

2) சிவசேனை: சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் சிவசேனாவின் தற்போதைய முழக்கம். இந்த அமைப்பு இந்தியர்களின் நலனுக்காகவோ இந்தியாவின் நலனுக்காகவோ இயங்குவதல்ல. மாறாக ஹிந்து வெறித்தனத்தின் துறுத்தி. பால் தாக்ரே என்பவர் தான் இந்த அமைப்பை நிறுவியவர்.

பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே இவர்களின் முதல் கொள்கையாக இருந்தது. இதில் இவர்களுக்கு அதிக வெற்றி கிடைத்திடவில்லை. தங்களது நிராதரவற்ற நிலையை மறைத்திடவே இவர்கள், சீக்கயர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை வெறுப்பதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஹிந்துக்களே! உங்களை மதித்து வாழும் சகோதர இந்தியர்களாகிய சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களோடு சண்டை போடுவதற்கு பதிலாக

* உங்கள் மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விட்டு உங்கள் உரிமைகளைச் சூறையாடும் ஜாதி முறையை எதிர்த்து நீங்கள் ஏன் போராடக் கூடாது?

* நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற முழக்கத்தை விட்டு, நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்று முழங்குங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

3) PAC: PROVINCIAL ARMED CONSTABULARY:

இஃதோர் ஹிந்து காவல்துறை (இவர்கள் R.S.S. சார்புடையவர்கள்) ஆனால் இந்தியக் காவல்துறை என்ற பெயரில் இயங்கி வருகின்றார்கள்.இந்திய அரசின் சம்பளத்தை அதிகமாகப் பெற்றுவரும் இந்தக் காவல்துறையில் இன்று வரை ஹிந்துவல்லாத ஒருவர் கூட நியமிக்கப் படவில்லை. பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் ஹிந்துஸ்தான் டைம் என்ற பத்திர்ககையில் இதுபற்றி இப்படி எழுதுகின்றார். மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களின் போது இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களே! இவர்கள் அனைவரும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களே!

குறிப்பாக PAC - யின் துப்பாக்கிக் குண்டுகள் தாம் முஸ்லிம்களைப் பிணங்களாக்கின. அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் அப்பட்டமான இந்த உண்மையை சுருட்டி மறைக்கின்றன. தனியார்கள் நடத்திய விசாரணை ஒன்றில் R.S.S. தலைவர்களில் ஒருவர்தான் (இவர் முன்னாள் காவல்துறை D.I.G. இந்த மீரட் படு கொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொடுத்தார் என்ற உண்மை தெரியவந்நது.

மீரட்டில் நடந்த கூட்டுப் படுகொலை குறித்து Amnesty International உலக மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையை ராய்ட்டர் செய்தி நிறுவனம் 19-11-11992 -ல் இப்படித் தருகின்றது.
Amnesty International உலக மனித உரிமைக்கழகம் மீரட்டில் தான் நடத்திய விசாரணைக்குப்பின் இப்படி முடிவு செய்துள்ளது. வகுப்புக் கலவரம் நடந்த அன்றும் மறுநாளும் முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்கு முழு பொறுப்பும் PAC ஐ சாறும். இதற்கான வலுவான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன.

வகுப்புக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து முஸ்லிம்கள் ஜெயிலில் வைத்து இறந்து போனார்கள். இதற்கு, கைது செய்த பிறகு அவர்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல் தான் காரணம். PACஐ வழி நடத்திய காவல்துறை அதிகாரிகள் (இவர்கள் அத்தனைபேரும் உயர்ஜாதி ஹிந்துக்கள்) முஸ்லிமகளை காவல்துறை ஊர்திகளில் ஏற்றிச் சென்று பின்னர் சுட்டுத் தள்ளினார்கள். பின்னர் பிணங்களை எடுத்துச் சென்று ஆறுகளிலும், குளங்களிலும் வீசினார்கள். இவை அனைத்திற்கும் தெளிவான அத்தாட்சிகள் நேரில் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை Amnesty International -ன் உலக மனித உரிமைக் கழகத்தின் இந்த அறிக்கையை பிராமணர்களின் செயதித்துறை முற்றாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. இந்த அறிக்கையையும் அது அம்பலப்டுத்திய உண்மைகளையும் மேலை நாட்டு செய்தி நிறுவனங்களின் மூலம் தான் தெரிந்திட இயன்றது.

நன்றி : DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.)

1 comment:

இந்தியன் said...

உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. முஸ்லீம் நாடுகளுக்கு நிகரா உலகில் எந்த நாட்டிலும் பெண்களின் மீது அடக்குமுறை கிடையாது. இங்க சதின்னா அங்க சவுக்கடி. எந்த முஸ்லீம் நாட்டில் சர்வ மதம் மதிக்கப்படுது. பிறரை சொல்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.