Mar 17, 2011

இவர்கள் ஜப்பானை தேர்வு செய்ததின் மர்மம் என்ன?

நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் பெரும் சோதனை ஒருபக்கம், அடுத்தடுத்து அணு உலைகள் வெடித்ததால் பரவும் கதிர்வீச்சால் உருவாக இருக்கும் பயங்கரம் மறுபக்கம் ஜப்பான் மக்களின் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

இந்த சோகத்திலிருந்து அவர்கள் மீண்டு வர, பெரும் உதவியைச் செய்ய களமிறங்கியுள்ளார் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி. வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.

தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர்.

முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.

சிந்திக்கவும்: முள்ளிவாய்க்கால் கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யாத இந்த துப்புகெட்ட கூட்டம் ஜப்பானுக்கு உதவி பண்ண போகுதாம். ஆறு அரை கோடி மக்களின் பணத்தில் வயிறு வழக்கும் கூட்டம் இது. தமிழர் போட்ட பிச்சையில் சுகமாக வாழும் இந்த கூட்டம் ஈழதமிழர்களுக்கு ஒரு துரும்பை கூட செய்ய முடியவில்லையாம். நமது இரத்த சொந்தங்கள் ஈழத்து மண்ணிலே பட்ட அவலங்கள்தான் எத்தனை? எத்தனை? அவர்களுக்காக இந்த கலை கூத்தாடிகள் என்ன? செய்தார்கள்.

ஜப்பான் மக்களுக்கு உதவி செய்ய உலகெங்கிலும் நூற்றுக்கணக்கில் நாடுகள் இருக்கிறது. முதலில் உங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஏதாவது உருப்படியா செய்திருக்கிறோமா? இனிமேல் செய்ய முடியுமா? என்று பாருங்கள். அதைவிட்டு விட்டு ஜப்பானுக்கு உதவ போறாராம்.

"ஒ தமிழக அரசியலில்" சாதிக்க முடியவில்லை என்று ஜப்பான் அரசியலில் குதிக்க திட்டமா. தமிழக மீனவர்கள் படும் துயரம்தான் எத்துணை? எத்துனை? இதையெல்லாம் பற்றி வாய் பேசாதவர்கள் ஜப்பானுக்கு உதவ போவதன் மர்மம் என்ன?. தமிழக மக்களின் பணத்தை சுரண்டியது பத்தாது! என்று ஜப்பானில் படங்களை திரையிட்டு பணம் சம்பாதிக்கும் உக்தியா?

ஜப்பானுக்கு இத்தனை "கோடி கொடுத்து விட்டேன்" என்று சொல்லி "வரி எய்ப்பு" நடத்த திட்டமா? அல்லது சில ஆயிரங்களை தூக்கி போட்டு விட்டு "கோடிகள்" என்று விளம்பரம் தேடும் வேசமா? ஏன் என்றால்? "கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள்" விசயத்தில் இந்த கூத்தாடிகள் முகம் வெளுத்து போனதே. தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடுபத்திற்கு இந்த கலை கூத்தாடிகள் "நான் நீ" என்று போட்டி போட்டு கொண்டு உதவிகளை அறிவித்து விட்டு கடைசியில் "ஜகா" வாங்கியது ஊர் அறிந்த உண்மை.

இந்த லேட்சனத்தில் கலை கூத்தாடி கமல் மன்மதன் அம்பு படத்தில் வெந்த புண்ணில் வேல்பாச்சுவது போல் ஈழதமிழர்களை இழிவுபடுத்தி வசனம் வேறு. இந்த கூத்தாடிகளுக்கு மானம், ரோசம், சூடு, சுரணை இருந்தா? தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிலர்களுக்கு ஏதாவது செய்யட்டும். அங்கே என்சகோதரன் முள்வேலியில் சிக்கி தவிக்கிறான் இவன் என்னவென்றால் எட்டி பார்க்கும் தொலைவில் உள்ள சொந்த மக்களின் துயர் தீர்க்காது ஜப்பானுக்கு போறாராம் ஜப்பானுக்கு. ஜப்பானுக்கு.

ஆறரை கொடி தமிழர்களிடம் இருந்து சுரண்டி எடுத்த பணத்தில் இருந்து "குறைந்த பட்சம் ஏதாவது ஈழத்து சகோதரர்களுக்கு செய்யுங்கள். தமிழக மீனவர்களுக்கு செய்யுங்கள். உடல் வசையாமல் பவுடரை பூசிக்கொண்டு கேமரா முன்னாள் நடித்து சம்பாதித்ததுதானே இந்த கோடிக்கணக்கான பணம். அந்த பணத்தில் இருந்து தமிழர்களுக்கு கொடுக்க கடமை இருக்கிறது. இவர்கள் அடிக்கும் இந்த கூத்தில் இவர்களுக்கு நாற்காலி ஆசைவேறு. நல்லது கெட்டது பகுத்து பார்க்க தெரியாத இந்த கோமாளிகள் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சுடுகாடுதான்.

ஜப்பானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. எரியிற வீட்டில் எண்ணையை ஊற்றிய கதையாக இந்த கோமாளிகள் "இதைவைத்து அரசியல் ஆதாயம்" அல்லது "பொருளாதார ஆதாயம்" அடைய பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

1 comment:

இராமசாமி சேகர் said...

எல்லாம் சினிமாக்கார வரி ஏய்ப்புத் திட்டம்தான்!
இவரோடு சேர்ந்திருக்கும் பயல்களைப்பாருங்கள்-விஜய்,சூரியா என்று.
இவர்களெல்லாம் எச்சில் கையோடு காக்கையைப்பற்றிக்கூட நினைக்கக் கூடாதென்று கங்கணத்துடன் இருப்பவர்கள்.