Apr 16, 2011

இந்து மக்கள் கட்சியும் ஈழ போராட்டமும்!! ஒரு பார்வை!!

ஏப்ரல் 17, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ’’வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்’’ படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார்.

அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர், நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஐ.நா. சபை கண்டித்து யுத்தமும் நடத்தி வருகிறது.

அதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு கொன்று அழித்தது அவர் மீது மனித உரிமை மீறல் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரேயா இலங்கை படப்பிடிப்புக்கு சென்றது கண்டிக்கத்தக்கது. நிறைய தமிழ் படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார். அவர் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரேயா இலங்கை போனது மட்டுமின்றி அந்த நாடு அழகாக இருப்பதாகவும் படப்பிடிப்புகள் நடத்த உகந்த நாடு என்றும் புகழ்பாடி இருக்கிறார்.

ஸ்ரேயா பேச்சை வன்மையாக எதிர்க்கிறோம். இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அவரது நடிவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்ரேயா படங்களை புறக்கணிப்போம்’’என்று கூறியுள்ளார்.

சிந்திக்கவும்: அட நம்ம சங்கபரிவார் கூட்டம்! ஐயோ கண்ண கெட்டுதே! என்ன திடீர் ஈழதமிழர்கள் பாசம். உங்கள் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கூட்டங்கள் தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்தியே வந்தீர்கள்.

எப்போது வந்தது இந்த கரிசனை. ஒ... அங்கேயும் உங்கள் ஹிந்து ராம ராஜிய கனவா?. ம்..ம் நடக்கட்டும்.. நடக்கட்டும். ஒ... உங்கள் சீதையை கவர்ந்த ராவணன் வாழ்ந்த பூமி ஆயிற்றே என்ற கோபமா.

அதுதான் சேது சமுத்திர திட்டத்தை வேண்டாம் என்று சொன்னீர்களா. தலைவர் பிரபாகரன் ஒரு மீனவ சமுதாயகாரர், உங்கள் ராம ராஜிய கனவு அங்கு பலிக்காது. முதலில் ராஜ பக்சேயின் கூட்டாளிகள் ஆனா உங்கள் சங்கபரிவார் தலைவர்கள் பற்றி பேசுங்கள்.

என்ன புரியவில்லையா? மோடி நடத்திய குஜராத் இனபடுகொலை முதல் அத்வானி நடத்திய ரெத்த யாத்திரை வரை எல்லாம் ஒன்று தானே. ஈழதமிழர்களுக்கு ஆதரவாக வாருங்கள், பேசுங்கள், போராடுங்கள் ஆனால்! அதில் உண்மையோடு.

உங்கள் குருமதி படைத்த மதவாத அரசியல் கொள்கையோடு, ஆதாயம்தேடும் நோக்கோடு அல்ல. ஈழதமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது எங்கே போனீங்கள். அப்பொழுது ஏன் உங்கள் சங்பரிவார் கூட்டம் போராட்டம் நடத்தவில்லை.

ஒரு பால்தாக்ரே தன்னை தொட்டால் மும்பையே பற்றி எரியும் என்று சொல்கிறார். உங்கள் அத்வானி பாபர் மசூதி இடிப்பு முதல் பல கலவரங்கள்வரை நடத்தி விட்டு இன்னும் சுதந்திரமாக உலாவுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு இன்றும் தடை செய்யப்படாமல் இருக்கிறது. இதுவெல்லாம் ஏன்? என்று என்று உங்களுக்கு தெரியுமா? 'எந்த கட்சி ஆட்சிக்கு" வந்தாலும் இவர்கள் மேல் கைவைக்க பயப்படுகிறது.

ஏன் என்றால்? ஹிந்த்துதுவா சங்பரிவார் தலைவர்கள் மேல் கை வைத்தால் இந்தியாவே பற்றி எரியும். இவர்கள் இந்தியா முழுவதும் ஒரு கலவரத்தை நடத்திவிடுவார்கள் என்ற பயம்தான். ஈழத்தமிழர்கள் படுகொலையின் போது ஏன்? இந்தியா பற்றி எரியவில்லை.

இப்படிபட்ட பலம் வாய்ந்த இவர்கள் "ஒரு போராட்டம் நடத்தி இருந்தால் போதும்' இந்தியா அடி பணிந்து இருக்கும். இப்படியான அடாவடி தனமான பெருமைக்கும், புகழுக்கும் உரியவர்கள் இவர்கள். இப்படிப்பட்ட புகழுக்கு உரியவர்கள் ஒரு போராட்டமும் நடத்தவில்லையே ஏன்? இப்ப என்ன திடீர் நீலிக்கண்ணீர்.

இலங்கையில் நிலவும் குழப்பத்தை வைத்து அங்கும் ஹிந்து ராஜ்ஜியம் என்ற மதவாத விஷவித்தை தூவ திட்டமா? நடக்காது. எப்படி உங்களது ராமராஜியா கனவு இந்தியாவில் கலைக்கப்படுமோ அது போல்தான் இதுவும். நீங்கள் ராமராஜ்யம், ஹிந்துராஜியம் என்பதை கனவில் கூட காணமுடியாது.

அது ஒரு சாத்தியம் இல்லாத திட்டம், அமைதியை குலைக்கும் திட்டம், இதன் மூலம் இந்தியாவின் அமைதி கெடும் என்கிற கோரமானதிட்டம். உங்கள் ஹிந்துராஜியம் திட்டம் மூலம் இந்தியாவை கூறு போட அந்நிய சக்திகள் வகுத்து கொடுத்த திட்டம். அண்ணாவும், பெரியாரும் வாழ்ந்த இந்த மண்ணில் உங்கள் கனவு பலிக்காது.


நன்றி : தமிழ் செல்வன் ( மின்னஞ்சல் வழி ).

1 comment:

rajuselvaraju49 said...

y muslim never condem killing of muslim in libiya and egypt,keep your islamic fanatism to yourself,