Apr 20, 2011

ஒரு தேவாலயம் நீதி கேட்கிறது!!

APRIL 21, சென்னை கொடுங்கையூரில் உள்ள தேவாலயத்தை இடிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேவாயம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3வது பிளாக்கில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது.

ஆப்ரகாம் என்பவர் ஆலயத்தை பராமரித்து வருகிறார். இந்நிலையில், ஆலய நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியம் வழக்கு தாக்கல் செய்தது.

அதை எதிர்த்து பொதுமக்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆலயம் இருக்கும் நிலத்தை மீட்க வீட்டுவசதி வாரியத்துக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஆலய நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் வீட்டு வசதி வாரியம் இன்று இறங்கப் போவதாக தகவல் பரவியது.

இதனால் ஆலயத்துக்கு முன்பு 500&க்கும் அதிகமானோர் கூடினர்.பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், “இது கிறிஸ்தவர்களின் பரிசுத்த வாரம். இந்த வாரத்தில் ஆலயத்தை இடிக்கலாம் என தீர்ப்பு வந்திருப்பது வேதனைக்குரியது.

ஆலயத்தை இடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆலயம் உள்ள நிலத்தின் மதிப்பு எவ்வளவோ அதை ரொக்கமாக கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்றனர்.

சமரச பேச்சுவார்த்தையின் முடிவில் ஆலய நிர்வாகிகளுக்கு 10 நாள் அவகாசம் கொடுப்பது என்றும் அதன்பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது என்றும் அதிகாரிகள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து ஆலயத்தை இடிக்க இடைக்காலத்தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேவாலயத்தை இடிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிந்திக்கவும்: இந்திய நீதி துறையிலும், மற்றும் உள்ள துறைகளிலும் பாசிச ஹிந்துவா சிந்தனைகள் ஊடுருவி விட்டதை உணர்த்தும் சம்பவங்கள் தினம், தினம் ஏதாவது ஒரு ரூபத்தில் நடந்தேறுகிறது.

"வீட்டு வசதி வாரியம்," இந்த வாரியத்துக்கு சொந்தமான எத்தனை? இடங்களில் இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

ஒரு பட்டியல் எடுத்தோமானால் அதில் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் அடங்கும்.
அது மட்டுமா பொதுபணிதுறை, மற்றும் எத்தனை? எத்தனை அரசுக்கு சொந்தமான எல்லா இடங்களிலும் கோவில்கள்.

சாலை ஓர கோவில், தாலுகா ஆபிசில் கோவில், காவல் நிலையத்தில் கோவில், ரோட்டோர கோவில், மரத்தடி கோவில், கடற்கரை கோவில், திரும்பிய மலைகள் எல்லாம் கோவில், சாலை ஓர மயில்கர்க்களும் கோவில்.

இது மட்டுமா! ஆர்.எஸ்.எஸ். காரர்களால் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட கோவில்கள்களை பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும்.

ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்றால்? முதலில் ஒரு இடம் வாங்க வேண்டும், அடுத்து அதில் நாங்கள் பள்ளிவாசல் கட்ட போகிறோம் என்று ஒரு போர்ட் எழுதி வைக்கவேண்டும்.

இதற்க்கு யாரும் ஆட்சேபனை சொல்லிவிட கூடாது அப்படி சொன்னால் அனுமதி கிடைக்காது. அதுமட்டுமா! முறையே மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி பெற்றால் மட்டுமே பள்ளிவாசல் கட்ட முடியும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள் மட்டும்தான் இந்த சலுகைகளும்.

அதே சமயம் நகர் புறங்களில் வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் அந்த பகுதியில் ஒரு இடம் வாங்கி தொழுகை நடத்த ஒரு பள்ளிவாசலை கட்டவேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபமாக நடக்காது.

இந்த ஹிந்துத்துவாகாரர்கள் குழப்பம் செய்வார்கள். அங்கு பள்ளி கட்ட கூடாது என்று போராட்டம் நடத்துவார்கள். அதையும் மீறி முஸ்லிம்கள் ஒருசாதாரண கட்டிடம் போல் அதை கட்டி எழுப்புவார்கள் பின்னர் அதில் தொழுகை நடத்துவார்கள்.

அதை இவர்களால் தடுக்க முடியாவிட்டாலும், அதை பள்ளிவாசல் என்று அடையாளபடுத்தும் மினாராக்களை கட்ட, தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் கட்ட தங்கள் எதிர்ப்பை காட்டி அதை தடை செய்வார்கள்.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மாற்று மததத்தவர்கள் வாழும் பகுதியில் ஒரு கடையை வைப்பார்கள். அதன் முன்னால் இருக்கும் ஏதாவது ஒரு வேப்பம் மரத்திலோ அல்லது நிழல் தரும் ஏதாவது ஒரு மரத்தின் அடியிலோ சில செங்கற்களை வைத்து அதற்க்கு விபூதி பூசி மாலை போட்டு அதை கோவில்கள் ஆக்குவார்கள்.

இல்லையேல் ஒரு சூலாயூதத்தை நாட்டி அதில் ஒரு மாலையை போட்டு கோவில் ஆக்கிவிடுவார்கள். அதை பற்றி கேட்டால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வந்து விடுவார்கள். இதைவைத்து ஒரு மதக்கலவரத்தை நடத்தி விடுவார்கள். சாலைகளில் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்களின் எண்ணிக்கைகள் ஏராளம்! ஏராளம்!.

இது மட்டுமா! மாற்று மததத்தவர்கள் அதிகம் வாழும் ஊர்களில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அல்லது ரோட்டு ஓரங்களில் கோவில்களை அமைத்து அவர்களோடு பிரச்சனை செய்து வருகிறார்கள்.

மாற்று மததத்தவர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் வேலைக்கு இருந்து, குடிசைகள் அமைத்து கொண்டு அங்கு ஒரு கோவிலை அமைத்து விடுவார்கள் அதன்பின் அந்த தோட்டத்தை உரிமை கொண்டாடுவார்கள், கடைசியில் அதை விற்கவும் முடியாமல் செய்வார்கள்.

இப்படி இந்த ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பண்ணும் அநியாங்கள் எண்ணில் அடங்காதவை. மண்டைகாடு கலவரம் முதல் மீனாட்சிபுரம் கலவரம் வரை இவர்கள் நடத்திய கோர தாண்டவம்தான் எத்துணை கொடியது.

இந்தியாவில் யாருக்கு சொந்தமான இடத்தில் வேண்டுமானாலும் ஒரு கோவிலை கட்டிவிடலாம். ஆனால் அதை அப்புறப்படுத்துவது என்பதோ முடியாத ஒன்று. இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவாவின் செயல் திட்டத்தில் ஒன்று திரும்பிய திசைகள் எல்லாம் கோவில்களாக, ஹிந்துதுவாவின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்பதே.

வழிபடுவதற்கு மட்டும் கோவில்கள் கட்டப்பட்டது என்ற நிலைமாறி இந்தியாவை ஹிந்துமயமாக்கி காட்ட வேண்டும் என்ற நோக்கிலே இவர்களால் கட்டப்படுகிறது. திரும்பிய திசைகள் தோறும் கோவில்கள் வேண்டும் என்பதே இவர்கள் சிந்தனையோட்டம்.

ஆனால் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அவர்கள் கூடி வாழும் பகுதிகளில் தேவை நிமித்தம் மட்டுமே பள்ளிகளோ, ஆலயங்களோ அமைக்கிறார்கள். இவர்கள் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாற்று மதத்தவர் வாழும் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கோவில்கள் கட்டுகிறார்கள்.

ஒரு மதசார்பற்ற நாட்டின் அரசு சின்னங்களாக கோவில் கோபுரங்கள் இருப்பதும், காவல் நிலையங்களில் ஆயூத பூஜைகள் நடத்துவதும், பணியில் இருக்கும் அதிகாரிகள் அங்கு பூஜைகள் செய்வதும் நம்மால் பார்க்க முடிகிறது. அது மட்டுமா காவல் நிலையங்கள் முதல் எல்லா அரசு அலுவலகங்கள் வரை சாமி போட்டோக்கள் வைக்கபட்டுள்ளது.

ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கை கொண்டுவரும் மாற்று மதத்துக்காரனின் மனநிலை நிலை என்னவாக இருக்கும் யோசித்து பாருங்கள். இது ஒரு மதசார்பற்ற நாடா ? அல்லது ஒரு மதம் சார்ந்த நாடா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று நிருபிக்க முடியாத ஒரு குழப்பம் நிறைந்த வழக்காக உள்ளது. அப்படிபட்ட வழக்கில் உடனே தீர்ப்பு எல்லாருக்கும் தூக்குதண்டனை. குஜராத் கலவரம் நடத்திய மோடி கும்பல்களின் வழக்குக்கு ஆயிரம் சாட்ச்சிகள் இருந்தும் அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

சிமி, ஜிஹாத் கமிட்டி, இவைகளுக்கு தடை! ஏன்? வந்தது இந்த முஸ்லிம் இயக்கங்கள்! இந்த பாசிச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், இவர்கள் பண்ணிய கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு இதன் பின்னால் தோன்றியவைதான் இந்த இயக்கங்கள்.

சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை ஆயிரம், ஆயிரம் கலவரங்கள் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு தடை இல்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பேருக்கு மூன்று முறை தடைசெய்து விட்டு அதை விளக்கி விட்டார்கள்.

ஒரிஸ்ஸாவில் பாதிரியார் கிரஹாம் மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் இரண்டையும் தீயிட்டு கொளுத்திய கயவர்களுக்கு வந்த தீர்ப்பு ஒன்றே போதும் இவர்களது நீதி பரிபாலனை எந்த அளவுக்கு நியாயமானது, என்று புரிந்து கொள்ள முடியும்.

ஒரிசாவில் தேவாலயம் எரிப்பு, கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு இப்படி கிராமம், கிராமமாக கிறிஸ்தவ மக்களை வேட்டையாடிய ஹிந்துத்துவா கயவர்கள் அத்துணை பேர்மீதும் எந்த உருப்படியான சட்டங்களும் பாயவில்லை. தடா முதல் குண்டாஸ் வரை அத்தனை ஆள்தூக்கி சட்டங்களும் முஸ்லிம்கள் மீதே பாய்கின்றன.

முஸ்லிம்களும், கிருஸ்தவர்கள் இந்த மண்ணிலே என்ன செய்தார்கள். நீங்கள் தீண்ட தாகாதவர்கள் என்றவர்களை மதித்தார்கள். கல்வி இல்லாத கிராமங்கள் தோறும் பள்ளி கூடங்கள் அமைத்தார்கள். அன்னை தெரேசா போன்றோர் செய்த தொண்டுகள் மூலம் அந்த மதங்கள் பரவியது.

இந்த ஹிந்துத்துவா கூட்டம் கிறிஸ்தவர்கள் மேல் பலி போடுகிறார்கள் வெளிநாடுகளில் இருந்து பணத்தை கொடுத்து மக்களை மாற்றி விட்டார்கள் என்று. இவர்களுக்கு ஒரு கேள்வி? உங்கள் உயர்குல பிராமண வந்தேறி கூட்டம் தலித் மக்களோடு திருமண சம்மந்தம் செய்து கொள்ளுமா.

காஞ்சி சங்கராச்சாரி தனது வீட்டில் உள்ள யாரவது ஒருவருக்கு ஒரு தலித் குடும்பத்தில் திருமண பந்தம் செய்வாரா? இன்று ஹிந்து மதத்தை காக்க அவதாரம் எடுத்தவர்கள் என்று சொல்லும் உங்களிடம் இல்லாத பணமா? ஏன் உங்களால் அதை செய்ய முடியவில்லை.

முதலில் உங்களிடம் இருக்கும் வர்ணாசிரம ஹிந்துத்துவா தத்துவத்தை ஒழியுங்கள், அதை நீங்கள் செய்யாமல் ஆயூத பிரயோகம் நடத்தி, மதமாற்று தடை சட்டங்கள் கொண்டுவந்து மக்களை மாற்ற முடியாது. உங்களால்தான் ஹிந்து மதத்திற்கு இழிவு.

450 வருடகால பாபர் மசூதியை உடைத்தீர்கள், அது மட்டுமல்லாமல் காசி, மதுரா, வாரணாசி, தவிர இந்தியா முழுவதும் 3500 மேற்பட்ட பள்ளிவாசல்களை உரிமை கொண்டாடுறீர்கள். நீங்கள் இந்தியாவை சுடுகாடாக மாற்றாமல் விடமாட்டீர்கள் போல் உள்ளது. அண்ணன் தம்பிகளாக!! மாமன் மச்சான்களாக பழகி வந்த இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நஞ்சை விதைதீர்கள்.

ஒருநாட்டின் பலமும், பலவீனமும் சிறுபான்மை மக்கள்தான். ஒரு நாட்டின் சிறுபான்மை மக்கள் என்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எந்த ஒரு பெருன்பான்மை சிறுபான்மையை அடக்கி, ஒடுக்குகிறதோ அங்கெல்லாம் புரட்ச்சி வெடிக்கிறது என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.

இந்த, ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கொள்கைகாரர்கள் ஒரு நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் தங்கள் இயக்கத்தை கட்டி அமைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இவர்கள் 200 வருட செயல் திட்டம் ஒன்றை போட்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவர்கள் தோன்றியது முதல் இன்றுவரை தங்களது இலக்கில் 85 வருடங்களை பயணித்துள்ளார்கள். இதில் அவர்கள் நினைத்ததை விட மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.

இதன் வெளிப்பாடே இவர்கள் எல்லா துறைகளிலும் ஊடுருவி விட்டார்கள் என்பது. இன்னும் மீதம் இருக்கும் 115 வருடங்களுக்குள் ஒரு ஹிந்து ராஜ்ஜியமும், அகண்ட பாரதமும் அமைக்க வேண்டும் என்பதே இவர்களது இலட்சியம்.

அது என்ன? அகண்ட பாரதம் என்று கேட்கிறீகளா? அதுதான் இப்பொது இருக்கும் இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மக்கா இதுவெல்லாம் சேர்த்துதான். இவர்கள் ஹிட்லரின் வழித்தோன்றல்கள். இவர்கள் தங்கள் கொள்கையை இலட்சியத்தை அடைய என்ன விலையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்த, ஹிந்து முஸ்லிம் கலவரங்களை நடத்தினால் மட்டுமே முடியும் என்ற ஒரு திட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் இவர்கள்.

தங்கள் சார்ந்துள்ள மதத்தின் மக்களை தாங்களே கொன்று விட்டு அதை மற்ற மதத்தின் மீது போட்டு கலவரம் நடத்துபவர்கள். உலகில் ஹிட்லருக்கு அடுத்து இனவெறியில் மிஞ்சி நிற்பவர்கள்.

இப்போது நாம் மேற்கண்ட செய்திக்குள் போவோம் கிறிஸ்தவ ஆலயம் 25 வருடமாக அந்த இடத்தில் உள்ளது. அந்த இடத்திற்கு உண்டான விலையும் அவர்கள் தருவதாக ஒத்து கொண்டார்கள் இருந்தும் அதை இடிக்க ஆணை வருகிறது. அதை நிறைவேற்ற அரசு இயந்திரங்கள் தயாராகின்றன. இதுதான் இந்தியாவின் மதசார்பின்மையின் இலட்ச்சணம்.

அன்புடன்: தலித் கண்ணன்.

3 comments:

Pr.Daniel Abraham said...

You said truth. We facing same type of problems. Thank you for information;

Pr.Daniel Abraham said...

You said truth. We facing same type of problems. Thank you for information;

PUTHIYATHENRAL said...

வருகை புரிந்தமைக்கு நன்றி டேனியல் அபிரகாம் அவர்களே, உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன! நன்றி மீண்டும் வாருங்கள்!