Jun 22, 2011

ஈழத்து சாவுகளும் சலனமில்லா எழுத்துக்களும்!

ஈரோடு தமிழன்பன்

காலை!!..... தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு!!......அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்! நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை நிரப்புகின்றன
தமிழ்ப்பிணங்கள் கொண்டு!.

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம்
குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது!
தமிழ் இயல், தமிழ் இசை, தமிழ் நாடகம்
எல்லாமே, போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்கு உள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத் தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில் உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப் பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும் அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது, நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன நட்சத்திரங்களை மீட்பது எப்படி?

-யாழினி-

3 comments:

புகல் said...

மண் மன்மோகன், இரத்த காட்டேறி சோனியா,இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்(மலையாளத்தான் நாய்), இவனுங்க மீது தமிழ்நாடு ஒரு வழக்கு பதிவு செய்து
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் ஆகியோரின் சாவுக்கு காரணமான இந்த ஈன நாய்களை கல்லை கட்டி சுறா மீனுக்கு
இறையாக போடவேண்டும், இதுடன் இலவச இனைப்பாக தமிழ்நாட்டு ஈன பிறவிகளான காங்கிரசையும் அவர்களின் தலைவனான வென்ன வெட்டி ராகுலையும்(இவரின் சாதனை தலித்துடன் உட்கார்ந்து சாப்பிட்டது) அனுப்ப வேண்டும்
துரோகிகளும்(கலைஞர், செயலலிதா) கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும்.

விரைவாக இதன் நிமித்தமாக தமிழ் பாதுகாப்பு சட்டம் இயற்றபட வேண்டும்
இல்லை என்றால் தமிழர்களை இந்த இந்திய அரசாங்கம் கொன்று அழித்துவிடும்

IS Tamil Blood Cheap in the eyes of indian government?
இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை நாயை சுடுகிற மாதிரி சுடுகிறது ஆனால் ஈன இந்திய அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை,
இலங்கை தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாய் இலங்கை படையால் அழிக்கபட்டபோது
அதைபற்றி கொஞ்சமும் கவலைபடாமல் மேலும் அவர்களை கொன்று குவிக்க பண உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு.
இப்படியாக இந்தியா செய்த துரோக பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம்,
ஆனால் இந்தியா மீது யார்க்கும் வெறுப்பு வருவதில்லை இதுற்க்கு காரணம்
இந்தியா என்ற முலைசலவை அனைவரின் மனதிலும் பதிந்துள்ளதுதான்

அதுசரி சாகும் தமிழ் மீனவனுக்கும் நமகும் என்ன உறவு நாம் ஏன் ஆழவேண்டும்
நாம் ஏன் இவன்களுக்காக போராட வேண்டும்,
இலங்கை தமிழர்கள் செத்தால் நமக்கு என்ன அவர்கள் என்ன நம் உறவுகளா இல்லை நம் சாதிகாரர்களா!!!

நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் விலகி விலகி போவதால் யாதோரு பயனும் இல்லை,
ஆட்டு மந்தைபோல் செத்துதான் மடிவோம்!!!
குறைந்த பட்சம் நாம் இதை நம் நண்பர்களோடு விவாதிக்கலாம், சனி ஞாயிறு போன்ற நாட்களில் சிறு அணிகாளாக ஊர்வலம் நடத்தலாம்.

அசைவ(வனமுறை) பிரியர்களுக்கு;
நடுவன அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கலாம்,
தமிழ் மீனவர்கள் இரண்டு இந்திய கடற்கடை அதிகாரியை கடத்தி கொண்டு போனால் போதும்
இந்திய அதிகாரி நாய்ங்க அலறி அடிச்சிகிட்டு வருவானுங்க

இப்படிக்கு pugal.na@gmail.com

Anonymous said...

Seemanpillai said... அன்பான என் இந்திய தமிழ்நாட்டு மக்களே!!!!

நீங்கள் ஏன் இன்னும் தனித்தமிழ் நாடு கேட்டு போராடவில்லை. ஏன் நீங்கள் இன்னும் பயந்த ,கோழைத்தனமான, சுயநலம் உள்ள கேடுகெட்ட இந்திய தமிழ்நாட்டு மக்களாக வெறும் சடலமாக வாழ்க்கை நடத்துகின்றீர்கள். இந்தியா என்ற நாடு சோனியா(சூனிய) காந்தி மற்றும் பார்ப்பன பரதேசிகள், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானிய போன்றோர்களின் நாடக இருக்கின்றது!!!!! இந்திய தமிழ்நாட்டு மக்களே ஆயுதம் ஏந்துங்கள் .போராடுங்கள்.. மூன்று பெண்களை திருமணம் செய்த காமுக வெறியன், உலகத்தமிழரின் முதல் துரோகி கருணாநிதியையும் அவனின் குடும்பத்தையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். இந்திய தமிழ்நாட்டு ஆண் மக்களே நீங்கள் தமிழ் ஆண் மக்களா? இந்திய தமிழ் நாட்டு காங்கிரஸ் கட்சியை அழித்துவிடுங்கள். இந்திய தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்களே ஏன் நீங்கள் இன்னும் பெண்களின் சேலைக்கு பின்னால் சுத்துகின்றீர்கள்!!!! உங்களை பெற்ற அம்மாவுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமல்லவா இந்த நடவடிக்கை!!! நவீன ஆயுதங்களை ஏந்துங்கள், முதலில் துரோகிகளை கொல்லுங்கள், எதிரிகளை அழியுங்கள், தமிழ் நாட்டை இந்தியாவின் தலை நகரமாக மாற்றுங்கள்!!! .இந்திய தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடுங்கள்,இந்திய தமிழ்நாட்டை இந்திய தலைநகரமாக மாற்றுங்கள்!!! இந்தியாவை தமிழனின் நாடாக மீண்டும் அதை மாற்றுங்கள்!!!! இவ்வாறு நான் மிகவும் மோசமாக இதை எழுதியதிட்கு என்னை மன்னியுங்கள்

PUTHIYATHENRAL said...

ஈழத்து சொந்தங்களே உங்களது உணர்வுகள் புரிகிறது உங்களது பாதிப்புகளுக்கு வெறும் வாய் வார்த்தைகளால் மருந்திட்டுவிட முடியாது. உங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிகிறேன். வாசகர் சீமன்பில்லை என்பவர் எழுதி இருந்ததை வெளியிட முடியவில்லை. அதில் சிறிது எடிட் செய்துதான் வெளியிட்டுளேன். தயவுசெய்து கெட்ட வார்த்தைகளை கொண்டு பின்னோட்டம் இடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பின்னூட்டத்தில் உங்கள் உணர்வுகளை, கோபங்களை, கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. அதை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லுங்கள். தமிழர்களுக்கு என்று ஒரு பண்பாடு உள்ளது. தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் ஆசிரயர்: புதியதென்றல்.