Jul 3, 2011

சிறுவனை கொன்ற ராணுவ வீரன்! இதுதான் வீரமோ?

JULY 04, சென்னை தீவுத்திடல் அருகே கொடிமரச்சாலையில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

அங்குள்ள மதில் சுவர் ஓரமாக நின்ற வாதாம் மரத்தில் ஏறி அதிலுள்ள காய்களை பறித்த அந்த பகுதியை சேர்ந்த தில்சன் (13) என்ற சிறுவன் மீது ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த சிறுவன்  தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனான். - (Today News)

சிந்திக்கவும்: இந்திய அரசு பயங்கரவாதிகளின் அட்டூழியம் தாங்க முடியல! இந்த ராணுவ வீரனுக்கு மரத்தில் ஏறி வாதாம் காய் பறிக்கும் சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சூடும் அளவுக்கு புத்தி மழுங்கி விட்டது.

சென்னை  தீவுத்திடல் என்ன பாகிஸ்தான் பார்டரிலா இருக்கு. ஒரு உதாரணதிற்கு கள்ளன்தான் திருட வந்துட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் உடனே துப்பாக்கியை எடுத்து சுட்டு கொல்வதா?

அவனும் மனிதன் தானே அவனை பிடித்து சட்டப்படி தண்டிப்பதுதானே நீதி. ராணுவ குடியிருப்பு என்றால் என்ன? இவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு! அவர்கள் குடியிருப்பு மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாம். ஒவ்வொரு குடிமக்களின் வரிபணத்தில் தானே சம்பளம் வாங்குகிறீர்கள். இந்த சிறுவனின் தந்தையும், குடும்பமும் தானே வரி கொடுக்கிறது.

நாட்டையும், நாட்டு மக்களையும் எங்கள் உயிரை கொடுத்தும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி கொடுத்துதானே வேலைக்கு வந்து மக்கள் வரிபணத்தில் தின்று உயிர் வாழ்கிறீர்கள். அப்படிபட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டாம் பாவிகளா! கொல்லாம இருந்தால் சரி.

உங்கள் ராணுவ குடியிருப்பு மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதி! அப்படி என்றால்? மற்றைய மக்களின் உயிர்கள் என்ன கிள்ளு கீரைகளா? இந்திய போலீஸ்  மற்றும்  ராணுவம் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இவர்கள் மக்களை பாதுகாத்ததை விட அழித்ததே அதிகம் என்று சொல்லலாம்.

இவர்கள் ஈவு, இரக்கம் இல்லா கொடியவர்கள்! ஒரு பட்சிளம் குழந்தையை சுட்டு கொன்ற இவன் மனித நேயம் அற்ற கொடும்பாவி. சுடுவதற்கு முன்னால் அந்த மரத்தில் ஏறுவது யார் என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு நிதானம் இல்லாத இவனெல்லாம் எப்படி நாட்டை பத்துகாக்க போகிறான்.

என்ன உங்கள் குடியிருப்பில் வைரங்களையும்,  வைடூரியங்களையும் பதுக்கி வைத்துள்ளீர்களா? பின்ன என்னடா வேண்டி கிடக்கிறது உங்கள் குடியிருப்பை மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்க. சொந்த நாட்டில் அதுவும் ஒரு குடியிருப்பு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாம். உங்களையே உங்களுக்கு பாதுகாக்க துப்பில்லை, துணிவில்லை என்றால் நீங்கள் எப்படி நாட்டை பாதுகாக்க போறிங்கள்!
 
மரத்தில் ஏறிய சிறுவனை கண்டு பயந்து துப்பாகியால் சுடும் உங்களை நம்பி இந்த நாட்டை ஒப்படைத்தால் நாடு உருப்பட மாதிரிதான். இலங்கைக்கு அமைதி படை என்று போனீர்கள், அங்குள்ள மக்களுக்கு அமைதி கிடைக்க நடவடிக்கை எடுங்கடா என்று அனுப்பினால் அந்நாட்டு தமிழ் பெண்களை கற்பழித்த கொடியவர்கள்தானே நீங்கள்.
 
ராணுவ பயிற்சி எடுக்கிறேன் என்று சொல்லி நல்ல தின்று, குடித்து, தினவெடுத்த உன் உடம்புக்கு பொம்பளை கேட்கிறதோஏன்டா உங்கள் அக்கா தங்கச்சி இவர்களும் பெண்தானே! அவர்களிடம் இப்படி நடக்க உனக்கு தோணாத போது அடுத்த வீட்டு பெண்களிடம் மட்டும் நடக்க தோணுதோ!
 
ஆடி மாதத்தில் வெறி பிடித்து அலையும் நாய்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.  கரும் புலிகளின் (-) குடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள். அவர்கள் சுத்த வீரர்கள், பெண்மையை போற்றி தங்களோடு பணியாற்றிய சக போராளிகளை சகோதரிகள் ஆக்கி, சிங்கள பெண்களின் மானமும் காத்தவர்கள்.  உங்களை போல் பெண்பித்தர்கள் இல்லை.

நீ கொன்ற சிறுவனின் உயிரை திருப்பி தரமுடியுமா உன்னால்! அந்த சிறுவனை பெற்ற தாய், தந்தை உள்ளம் எப்படி பரிதவிக்கும் அதற்க்கு உன்னால் என்ன பதில் கொடுக்க முடியும் உன் உயிரை தவிர. இது மாதிரி அநியாயமா ஒரு உயிரை கொல்பவனை அதுபோல் திருப்பி அதே இடத்தில் சுட்டு கொல்வதே சரியான தண்டனையாக இருக்கும்.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

11 comments:

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த அநியாயங்கள் இருக்கே சொல்லி மாளாது! நூற்றுகணக்கில் தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடிய கயவர்கள் இவர்கள்.

Anonymous said...

கரும் புலிகளின் (-) குடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள். அது என்ன பாஸ் (-) இப்படி போட்டு இருக்கீங்களே அந்த அடைப்புக்குள் ஏதாவது போட்டால் என்ன பயமா?

PUTHIYATHENRAL said...

நாட்டையும், குடிமக்களையும் பாதுகாப்பவன் தான் உண்மையான ராணுவ வீரன். தான் வாழும் குடியிருப்பின் பாதுகாப்பு கருதி, அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து அதன் உள்ளே நுழைந்த ஒரு சிறுவனை எதிரிகளோடு சண்டை போடுவது போல் மண்டையில் சுட்டு கொள்பவன் ராணுவ வீரன் இல்லை. இந்த பாவிகள் ஈழத்து சகோதரிகளை கற்பழித்து நாசம் செய்தவர்கள் தானே தினம் தினம் நம் கண் முன் நடக்கும் அநீதிகளை கண்டு நமக்கேன் பிரச்சனை என்று ஒதுங்காமல் எல்லோரும் துணிந்து போராட முன்வர வேண்டும். இந்த அரசு பயங்கரவாதிகள் ( இவர்களை அப்படி அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறன்) பொதுமக்களுக்கு எதிராக நடத்தும் அநியாயங்கள் ஏராளம் ஏராளம். ஏன் இவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்கிறோம் என்றால் இவர்கள் மக்களின் வரி பணத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர இப்படி அநியாங்கள் அல்ல.
அந்த தாய் கதறி அழுவதை பாருங்கள் இவனை என்ன செய்தால் தகும். இவனை ராணுவ கோர்ட் என்று சொல்லி அங்கு நிறுத்துவார்கள் அதிக பட்ச்சமாக சஸ்பண்ட் செய்வார்கள் வேற என்ன பெரிதாக செய்து கிழிய போகிறார்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

சாரி பாஸ் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல மறந்திட்டேன். சரி! கரும்புலி (-) இதை பற்றி கேட்கிறீகளா? நாகரிகம் கருதி அதில் எதுவும் எழுத முடியவில்லை. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை குடித்து என்று வைத்துகொள்ளுங்கள். கருத்து சொல்லியதற்கு நன்றி! தொடர்ந்து வருகைதாருங்கள்! கருத்துக்கள் சொல்லுங்கள் நன்றி தோழரே!

Anonymous said...

ஒருவேளை அவன் பைத்தியமா இருப்பானோ? சிறுவனை ஏன் சுட்டான்!

KATHIRAVAN said...

அய்யா !! அவன் ராணுவத்தில் ரொட்டி சுட்டவன் ! இந்த சிறுவனை சுட்டு பயிற்சி எடுத்துக்கிட்டான் !! இந்த மாதிரி ஆட்கள் எதிரிய சுட சொன்னால் துப்பாக்கியை மாத்தி பிடித்து தன்னைதானே சுட்டுகிடுவான் இவனை சொல்லி குற்றம்மில்லை இவனை எடுத்த இந்திய அரசாங்கத்தை சொல்லனும்.நன்றி வணக்கம் !!

அம்பாளடியாள் said...

உலகில் மனிதநேயம் செத்துக்கொண்டே போகிறது
இதில் இவனைச்சொல்லி என்ன பயன்?...அந்தத்
தாயின் மனவேதனை தீர ஒரு நல்லவழி கிட்ட
பிரார்த்திப்போம். நன்றி பகிர்வுக்கு.

Anonymous said...

குருட்டு நாயே. உன்னை ஜவான் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.

உன்னைப்போன்ற குருட்டு பிண்டங்களால்தான்
பாகிஸ்தான் காரன் பிஜேபி என்ற மற்றொரு கபோதி கட்சி ஆட்சியின்
கையாலாகாதனத்தால் 150km கார்கில் உள்ளே நுழைந்து நம் இந்திய பகுதியை பிடித்தான்.

அவனை விரட்ட நம் நாடு பல உயிரிழப்புக்கும் பொருளிழப்புக்கும் ஆளானது. உங்களுக்கெல்லாம் அப்பாவி மக்களிடம்தான் வீரத்தைக் காட்டத்தெரியும். விடுதலைக்காக போராடும் மக்களிடமும், பெண்களிடமும், சிருவர்களிடமும்தான் உங்கள் பாய்ச்சல் பழிக்கும்.

அருணாச்சல் பிரதேசம் பக்கம் போயிடாதே சைனாக்காரன் எட்டிப்பாக்குறான். போங்கடா போக்கத்த பயலுவளா - தமீம்

மதுரை சரவணன் said...

nallaa sonneengka... anaal intha aniyaangkalai yaar thaduppathu...?

PUTHIYATHENRAL said...

KATHIRAVAN said...
அய்யா !! அவன் ராணுவத்தில் ரொட்டி சுட்டவன் ! இந்த சிறுவனை சுட்டு பயிற்சி எடுத்துக்கிட்டான் !! இந்த மாதிரி ஆட்கள் எதிரிய சுட சொன்னால் துப்பாக்கியை மாத்தி பிடித்து தன்னைதானே சுட்டுகிடுவான் இவனை சொல்லி குற்றம்மில்லை இவனை எடுத்த இந்திய அரசாங்கத்தை சொல்லனும்.நன்றி வணக்கம் !!

----------------------------------

PUTHIYATHENRAL said....

சரியாக சொன்னீர்கள் தோழரே! நன்றி!

PUTHIYATHENRAL said...

மதுரை சரவணன் said...
nallaa sonneengka... anaal intha aniyaangkalai yaar thaduppathu...?

--------------------------------

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சரவணன் சார்! இதை நாமதான் செய்யணும். இது போல் நடக்கும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக கட்சி பாகுபாடுகளை மறந்து கட்சிகளும், பொது ஜனங்களும் கிளர்ந்தெழுந்தால் இவர்களை அடக்க முடியும். இவன் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இனி ஒருத்தனும் இதுபோல் செய்ய துணிய மாட்டான். இந்தியாவில் எதையும் செய்துவிட்டும் தப்பித்து கொள்ளலாம் என்ற நிலை மாறவேண்டும். இது ஒரு நாளில், ஒரு இரவில் நடக்க கூடிய காரியம் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தீமைகளுக்கு எதிராய், அநீதிகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். அதுவரை நம் போராட்டம் தொடரவேனும். நன்றி வணக்கம்.