Jul 1, 2011

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை! உலகம் விழிக்குமா?

ஜூலை 02, ஜெனிவா:  காங்கோ நாட்டில் கடந்த மாதம் அந்நாட்டு ராணுவத்தினர் சுமார் 121 பெண்களை கற்பழித்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.

தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள நையாகிலே என்னும் கிராமத்தில்,  ஜூன் 11 முதல் 13 வரையிலான தேதிகளில் இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லே தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கூடுதல் விவரம் திரட்ட, ஐநா புலனாய்வாளர்கள் அடுத்த வாரம் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார். காங்கோவில் ராணுவத்தினரும் தீவிரவாதக் குழுக்களும் இவ்வாறு கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது அடிக்கடி நிகழ்கிறது.

சிந்திக்கவும்: நாகரிகம் வளர்ந்த காலத்தில் காட்டுமிராண்டிகள் போல்  பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கு உடனே மரணதண்டனை விதிக்கவேண்டும். சினிமா மற்றும் கல்வியில் மாற்றம் வேண்டும். ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் மனித உரிமைகள், பெண்களை போற்றுவது பற்றி கற்று கொடுக்க வேண்டும். ஆணாதிக்க உணர்வை ஒழித்து பெண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கிடல் வேண்டும். நாகரிக உலகம் இதில் கவனம் செலுத்துமா?

-யாழினி-

2 comments:

THATHACHARIYAR said...

பெண்ணடிமையா ?பெண்ணுரிமையா ?

CLICK THE LINKS AND REAF

>> 3 .
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


>> 4. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .

>> 5. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?

>>>> 6. “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லையென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.-- குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.

>> 7. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

>> 8. . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்


>> 9. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

>> 10. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..


.

PUTHIYATHENRAL said...

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! தொடந்து படியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! வாழ்த்துக்கள். நட்புடன் - புதியதென்றல்.