Jul 16, 2011

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைத்தாரா நித்யானந்தா?

July 17,பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது.

வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அதை தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.

அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங்கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்! என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.

ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம்  என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிமிடம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா.

இதை பார்த்த ஒரு நிருபர், என்னையும் மிதக்க வைக்க முடியுமா? என்று கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை.  தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’ என்று கோபமாக கேட்டார்.  வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.

4 comments:

Anonymous said...

We should never take faith as simple as chewing a gum and spit. Faith is more important than our own family's welfare in this life because beleiving in a false God will make a permanent catastrophe
for our eternal happiness on this earth and after death. Islam does not show any catagorical God or faith. There is no any particular figure for God or he is not belong to any race or language or colour or nation or sect. He is omnipotent. We dont offer anything to him but show our gratitude and devotion. He is the creator of universe. Muhammed (peace be upon him) is his last prophet and Qur'an is the final testament (book) to follow to all humanbeing.

Please wake up and dont believe in false saints and false Gods. Beleive in one and only God.

- TRUE BELIEVER

Anonymous said...

நீங்கள் கதறினாலும் கத்தினாலும் மூட நம்பிக்கைகளின் அடித்தலத்தில்தான் இந்து மதமே அமைக்கப்பட்டுள்ளது.
கடவுள்களுக்கு குடும்பங்கள் உண்டு, பிள்ளை குட்டிகள் உண்டு, அவர்களுக்குள் மாமியார் - மருமகள் சண்டைகள் உண்டு, காம உணர்வுகள் உண்டு, அண்டங்களை படைத்த கடவுளே அசுரர் என்ற படைக்கப்பட்ட படைப்பினன்களோடு யுத்தம் செய்தார்.

கடவுளுடைய மனைவியை அசுரன் கடத்தி சென்றான்.

அசுரனோடு போர் செய்ய மிருகங்கள் கடவுளுக்கு உதவி
செய்தன.

மனிதனுடைய மனைவியை கடவுள் அபகரித்து வீடு கூடினான். கடவுள் திருடினான். கடவுள் பெண்களுடன் சல்லாபம் செய்தான்.

இப்படியே அசிங்கங்களின் மொத்தம் ஒரு மதமாக எடுத்துக்காட்டப்படுமபொழுது,
நீங்கள் எப்படி சதியானண்டாக்கள், அசிமானண்டாக்கள், நித்தியானண்டாக்கள் தவறே செய்யாமல் இருக்கவேண்டும் என்று ஆசைப்படலாம் ?

- KARUPPAN

Anonymous said...

ஏய் கருப்பன் அயோக்யா! நீ யோக்கியனா இருந்தா எல்லா மதத்தையும் ஒப்பிட்டு பின்னர் ஒரு விமர்சனம் எழுது. கிருபானந்தன்

Anonymous said...

let the community which nithyanatha trust punish him severely for his mis-behavior