Oct 4, 2011

இந்தியா தமிழனின் தாய்நாடா? அண்டை நாடா?

OCT 05, இந்தியா: 2011 ஜூலையில், இந்தியா இராணுவத்தின் போர் கப்பல் ஐராவதி வியட்நாம் போகும் போது சீனாவின் கடல் எல்லையை கடந்தது, அப்போது சீனா இராணுவத்தால் இனி எங்கள் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைகூடாது என்று அச்சுறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின் வியட்நாம் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கடலுக்கு எல்லைகள் கிடையாது யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார். இதே கிருஷ்ணா தமிழக மீனவர்கள் 550 பேரை இலங்கை ராணுவம் கொன்றப் போது பாராளுமன்றத்தில் பேசினார் "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடத்தானேச் செய்வார்கள் என்று" இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கிள்ளுகீரைகள் என்று.

தமிழர்கள் இனியும் பொருத்துகொண்டிருந்தால் இந்த குள்ளநரிகள் நம் தமிழ் இனத்தையே அழித்துவிடுவார்கள். இந்தியாவின் துரோகத்தை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஏதோ காசு பணம் என்றால் கூட போனால் போகுது என்று பொறுமை காக்கலாம். ஆனால் அங்கே அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. இலங்கையில் ஈழத்தமிலர்களையும், தமிழக கடலோர மீனவர்களையும் அனாதைகள் போல் இலங்கை அரசு கொன்றுகுவித்து வருகிறது. அதை சிறிதும் சட்டை செய்யாமல், கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்திய அரசு.

*உலகத்தில் எந்த இன மக்கள் செத்தாலும் இந்தியா வருத்தம், கண்டனம் தெரிவிக்கும்* ஆனால் தமிழர்கள் செத்தால் மட்டும் கவலைபடாது.* இந்தியா தமிழரின் தாய்நாடாக இருக்கவே முடியாது. இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது. இந்தியா என்பது தமிழனின் தாய் நாடு அல்ல, தாய் நாடாக இருக்க முடியாது, இந்தியா தமிழனின் ஒரு அண்டை நாடு என்பதை தமிழன் உணர வேண்டும்,

இன்று இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்யும் நாடாக இருக்கிறது. நம் வரி பணத்தில் உண்டு வாழும் இந்த அரவேக்காடு ஹிந்திக்காரனிடம் தமிழன் அடிமை போல் மண்டியிட்டு தமிழ் மக்களை காக்க மன்றாடியும் இந்தியா சிறிதும் சட்டைசெய்யவில்லை, இந்தியா சொல்கிறது..........

1. அண்டை நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது:

சரிதான்! ஆனால் ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தை அழிக்க இலங்கைக்கு பணம், போர் கருவிகள் எல்லாம் கொடுத்து உதவியதை என்னவென்று சொல்வது. இந்தியாவின் துரோகத்தை தமிழ்மக்களிடத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இலங்கைக்கு செய்த ஆயுத உதவிகளில் தமிழரின் வரிபணம் அடங்கி உள்ளது. தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களை கொல்லும் இந்தியா. யார் வீட்டு பணத்தை யார் வீட்டுக்கு கொடுப்பது

2. இலங்கை தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண் மைக்கு எதிரானவர்கள்:

இலங்கைக்கு உதவினா நாட்டுபற்று! தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் தேசதுரோகம். அப்படிப்பட்ட ஒரு தேசம் தமிழர்களுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு போலி தேசபக்தியும் தேசமும் நமக்கு வேண்டாம்.

இலங்கை கடற்படை தமிழர்களை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொல்லுகிறான். அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட சொல்ல இந்தியாவுக்கு நேரம் இல்லை. தமிழன் போலி தேசபக்தியில் மூழ்கி பாரத மாதாகீ ஜே என்று முழங்குவதால் தமிழக மீனவர்கள் கேட்க்க நாதியின்றி அனாதைகள் போல் செத்து மடிகிறார்கள். தமிழக மக்களை காபாற்ற தமிழ்நாடுஅரசு இந்திய அரசாங்கத்தின் காலை நக்கிக்கொண்டுயிருக்கிறது.

ஏன் இந்த இழிநிலை?. இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள் (தமிழ் மீனவர்கள், இலங்கை தமிழர்கள்) என்ன பலிஆடா!!!தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய் கூட பார்க்கவில்லை. இந்திய ஆதிக்கதில் தமிழ்நாடு இருக்கும்வரை இந்த நிலைதான். தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்.
- புகழ்-

தோழர் புகழ் எழுதிய கருத்துக்கள் ஒருபதிவாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

25 comments:

Anonymous said...

thani maanilam mathiya arasai aati padaikiraarhal thealugganaa makkal.aanaal thamilanin vaalkaiyoo anaathaiyaai thavikirathu.
*pungai mainthan*

Anonymous said...

Well said.
Tamilanukku nammakku etharkku enra manapanmai muthalil mara vendum.

Anonymous said...

vanakkam neenga solvadhu mutrilum sariyanadhe nandri

Anonymous said...

Sariyaa sonneengal... Valththukkal. ... Mani

Anonymous said...

Nalla pathivu. Thanks. By/ raja

Anonymous said...

Thank u for posting this article. Very nice. - Arul-

suryajeeva said...

என் மண்டைக்குள்ள மணி அடிச்சு கிட்டு இருக்கிற விஷயம் என்னன்னா? இந்த பாகிஸ்தான் லேருந்து வர மீனவர்களை இந்திய அரசு கைது செய்யுது, இங்க இருந்து போற மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்யுது, இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்யுது, தமிழ் மீனவர்களை இலங்கை கைது செய்யுது... என் கேள்வி என்னன்னா, ஏன் எந்த அரசும் இப்படி வழி தவறி வரும் மீனவர்களை கண்டிச்சு திருப்பி அனுப்பாம கைது செய்றாங்கன்னு தான்... தப்பு செய்ய வருபவன் தெரிந்தே வந்து மாட்டிக் கொள்வானா என்ன? கைது செய்யப் பட்ட மீனவர்களின் குடும்பம் என்னாவது? இதெல்லாம் யோசிக்கவே மாட்டாங்களா?

Anonymous said...

Nalla pathivu.... Puththikku uraikira maathiri sonneengal thanks''''''''''. Tamilan.

Anonymous said...

நல்ல பதிவு! சரியாக சொன்னீங்கள் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயம் இது. நன்றி! வணக்கம்!

*மணிமாறன்*

Anonymous said...

சூர்யா ஜீவா சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இலங்கை பயங்கரவாத படை மட்டும் இதற்க்கு விதிவிலக்கு! அவர்கள் கைது செய்து பின்னர் விடுதலை செய்தாலும் பரவாயில்லையே ஆனால் காக்கை குருவிகளை சுடுவதை போல் மனிதர்களை சுட்டு வேட்டையாடுகிரார்களே அந்த மிருகங்கள். ஈழத்து பெண்களை கற்பழித்து கொலை செய்கிறார்களே. நட்புடன் - சாந்தி.

Anonymous said...

இந்தியா நம் தாய் நாடு இல்லை விரோதி நாடு. நமது எனிமி. ::::::::::::::: தமிழ் மறவன்.

Anonymous said...

இந்தியா நமது அண்டை நாடுதான் அதில் என்ன சந்தேகம் இருக்கிறது உங்களுக்கு. அதற்க்கு ஒரு பதிவு அவசியமா?

by : rajan.

Anonymous said...

இனிமேல் தமிழர்கள் ஒன்றை விளங்க வேண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு அதுதான் தமிழ் நாடு. இதை ஒவ்வொருவரும் புரிந்தால் நல்லது. ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே தெரிகிறது என்று சொல்லலாம். by revathi.

Adirai Seithi said...

இந்தியா நம் தாய் நாடு ...

அதிரை செய்தி
http://adiraiseithi.blogspot.com

Anonymous said...

நல்ல கருத்துள்ள கட்டுரை
ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

நன்றி

Anonymous said...

Ibnu shakir yenkira paarppanaa unakku yenna kirukkaa. Yen sammantham illaamal vanthu ularukiraai

Anonymous said...

Ibnu sHakir he is a Hindu terrorist

Anonymous said...

This article talk about tamilars why the stupid guy ibnu Shakir talk about different what he want.

Anonymous said...

Who said India is our mother country Tamil nadu is our mother country. Don't say lie mr adirai seithi... U have to thinking must.

Anonymous said...

Supper article thank u.!!!!!!!!! By ramu- Canada

Anonymous said...

Loosaa intha ibnu shakir yethetho ularu kiraan

Anonymous said...

Ibnu shakir him original name is nranthira modi.

Anonymous said...

அதிரை செய்தி சொல்லியது சரிதான் இந்தியா நமது தாய்நாடுதான் ஆனால் என்ன செய்ய நாம் மட்டும்தான் அப்படி இன்னும் நம்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் அரசுகள் அந்த நம்பிக்கையை பொய்மைபடுத்துகிறதே!!!!!!!!!!!!!!!

Anonymous said...

ஏக்கம் பிடித்த ஹிந்துத்துவா பயங்கரவாதியான இப்பனு தாஹிரே உன் பார்ப்பன புத்திக்கு முதுகில் குத்ததானே தெரியும். நீ நல்ல ஆம்பளையானால் உன் சொந்த பெயரில் எழுது எதற்கு முஸ்லிம் பெயர்தாங்கி வந்து உன் ஹிந்துத்துவா வார்நாசிரம நஞ்சை ஏக்கத்தோடு கக்குகிறாய். - ஹுசைன்.

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இப்னு ஷாகிர் அவர்களே! உங்களுக்கு என்ன வேண்டும், உங்கள் மதுகுடித்த ஆர்.எஸ்.எஸ். வானர குரங்குகள் அகண்ட பாரதம் அமைக்கும் ஏக்கத்தோடு மடியப்போகிறீர்கள். ஹிந்து ராஜ்ஜியம், அகண்ட பாரதம் என்பது எல்லாம் வெறும் கனவுதான். அது பலிக்காது.