Dec 1, 2011

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1).

அன்புள்ள வாசக நெஞ்சங்களே! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.

நான் இதற்க்கு முன்பு கதை எழுதியது இல்லை. இதை கதையாக  எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். வாசகர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் கருத்துக்களை ஆவணமா பதியுங்கள்!

உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம்.  நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

இரண்டாயிரத்தி பதினைந்தாம்  ஆண்டு அதை ஒரு இருண்ட காலம்  என்று சொல்லலாம். சிங்கள இனவெறி ராணுவத்தால் ஈழத்திலே நம் உறவுகள் ஒரு பாரிய இனஅழிப்புக்கு  உள்ளாக்கப்பட்டு வந்தார்கள். தமிழக மீனவர்கள்  தினம் தினம் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். வடஇந்திய ஹிந்தி அரசு தமிழகத்தின் வளங்களை சூறையாடியது.

தமிழகம் எங்கும் உயிர்கொல்லி நச்சு தொழில்சாலைகள் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டம் தோறும் அணுவுலைகள்! வால் மார்ட் முதல் ஸ்டார்பக்ஸ் வரை அந்நிய முதாளிகளின் வரவு! நமது சில்லறை வியாபாரிகளின் சாவு. தமிழர்களின் ஜீவநதிகள் எல்லாம் வறண்டு அங்கு அந்நிய முதாளிகளின் மிகபிரம்மாண்டமான ஆலைகள் என்று தமிழ் நாட்டின் சுற்று புறச்சூழல் கெட்டுமனிதர்கள் வாழ தகுதியில்லாத அளவுக்கு சுகாதார கேடுகள் நிறைந்து காணப்படுகிறது.

தமிழர்களின் கலாசாரத்தை அழித்து, பண்பாட்டை அழித்து வடஇந்திய ஹிந்தி மொழி தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கும் வறட்சி, உணவு பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை. கேரளாவும், கர்நாடகாவும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை சுத்தமாக நிறுத்தி விட்டன. தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் வளங்களை அந்நிய கார்பெரெட் நிறுவனங்கள் தங்களது தொழில் சாலைகளுக்கு பயன்படுத்தி கொண்டன.

நமது ஊர்களில் இருந்த சிறு பெட்டி கடைகள், டீ கடைகள், காய்கறி கடைகள்  காணமல் போயி அங்கு ஸ்டோர்பக், வால்மார்ட் போன்ற அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்தன. தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானார்கள். இந்த இருளை விளக்க ஒரு இளைஞசர் கூட்டம் புறப்பட்டது அவர்கள்தான் நமது கதையின் காதாநாயகர்கள்!  அவர்கள் என்ன செய்தார்கள் என்ன மாறுதல்கள் நடந்தன, எப்படி தனித்தமிழ் தேசம் கண்டார்கள் என்பதை சொல்கிற வரலாறாக மாறப்போகும் காவியம்.

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1).

இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் என்கிற அழகிய எழிலில் கொஞ்சும் ஊர்.  இந்த ஊர் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆகும். பெரியபட்டினத்தை சார்ந்த முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள்தான் நமது வரலாற்று ஆவணத்தின் காதாநாயகர்கள். ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் பள்ளி பருவம் முதல் நெருங்கிய நண்பர்கள்.

நண்பர்களுக்கு என்ன நடந்தது! எப்படி இவர்கள் வரலாறாய் மாறப்போகிறார்கள் என்பதை பற்றி அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.                                                                                       தொடரும்..........

33 comments:

விக்கியுலகம் said...

மாப்ள தொடருங்கள் காத்திருக்கிறேன்...நன்றி!

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழரே! கருத்து சொன்னமைக்கு நன்றி! இந்த கதை ( ஆவணம் ) சம்மந்தாமான கருத்துக்களையும் உங்கள் ஆலோசனைகளையும் பதியுங்கள்! நன்றி தோழரே!

தமிழ் மாறன் said...

நல்ல பதிவு தோழரே! தொடருங்கள் உங்கள் வரலாற்று ஆவணத்தை! தமிழர்கள் ஒன்று படவேண்டும் அதே நேரம் தனிதமிழ் நாடு அமைக்கப்பட வேண்டும் என்பதை உங்கள் கதையின் தொடக்கமே சொல்கிறது. நீங்கள் அதற்க்கு போட்டிருக்கும் படம் ரொம்பவும் அருமை. வாழ்த்துக்கள் தோழரே.

தமிழ் மாறன் said...

*நமது ஊர்களில் இருந்த சிறு பெட்டி கடைகள், டீ கடைகள், காய்கறி கடைகள் காணமல் போயி அங்கு ஸ்டோர்பக், வால்மார்ட் போன்ற அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்தன. தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானார்கள். இந்த இருளை விளக்க ஒரு இளைஞசர் கூட்டம் புறப்பட்டது.*

இதுபோல் நமது தமிழ் இளைஞசர்கள் புறப்படுவார்கள் என்று நம்புவோம் ஆக.

தமிழ் மாறன் said...

*தமிழர்களின் கலாசாரத்தை அழித்து, பண்பாட்டை அழித்து வடஇந்திய ஹிந்தி மொழி தமிழகத்தை ஆட்சி செய்கிறது*

உண்மையான வாசகம்! அதனாலேயே வடக்கு வாழ்கிறது..... தெற்கு தேய்கிறது என்று சொல்கிறோம்.

UNMAIKAL said...

தொடருங்கள்.

ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Anonymous said...

//இருளை விளக்க ஒரு இளைஞசர் கூட்டம் புறப்பட்டது அவர்கள்தான் நமது கதையின் காதாநாயகர்கள்! அவர்கள் என்ன செய்தார்கள் என்ன மாறுதல்கள் நடந்தன, எப்படி தனித்தமிழ் தேசம் கண்டார்கள் என்பதை சொல்கிற வரலாறாக மாறப்போகும் காவியம். //

நன்றி தோழரே! இப்போ தமிழர் பிரச்சனைகளை கதையா எழுதுறீங்களா நலம் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணிகள். அன்புடன் : ராஜன். உடன்குடி.

மலர்விழி said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் தோழரே!

tamilan said...

அம்பி!!

பீடிகை ப‌ல‌ம்மாயிருக்கிற‌ச்சே நிச்ச‌ய‌ம் நன்னாத்தான் எழுதுவேள்.

நம்மாத்து ஆம்ப‌டையாளும் காத்துண்டிருக்கா.

சோதிச்சுடாதீங்கோ.

தாத்தாச்சாரிய‌ன்.

Anonymous said...

Ok my friend ...... We are waiting for ur new story....

ரசிகன் said...

தொடருங்கள், தொடர்கிறேன்.

Anonymous said...

ஆரம்பமே பேஷா ருக்கே! ஏண்டி ருக்கு! அடுத்தவாட்டி, இவாளோட தொடர்கதை வந்தால் மறந்துறாம சொல்லுடி! என்ன நோக்கு புரிந்த்சுதா? மச மசன்னு நிக்காம ப்ரு காபி ய போட்டு கொண்டாந்து தா.

கதைய படிக்க ஆரம்பிச்சதும், ஒடம்பு வெட, வெட ன்னு ஆடுதுடி.

ஸ்ரீனிவாச அம்பி

தலைத்தனையன் said...

WELCOME

STEPPING INTO NEW ERA.

GOOD EFFORT.

LET US SEE WHERE WILL YOU TAKE US TO?

Anonymous said...

Yenna thenral kathai yellam soluveengala..//// um parava yillaiye.... PaarKkalaam....

குடிமகன் said...

காத்திருக்கிறேன் உங்களுடைய வருங்கால வரலாற்றை படிக்க!

துரைடேனியல் said...

அருமை. தொடர காத்திருக்கிறேன்.

Lakshmi said...

நல்லா இருக்கு தொடருங்க.

Anonymous said...

M....m.....padikla aavalaai irukirom...... By/ Ravathi

கடையநல்லூர்க்காரன் said...

கருணை வுள்ளம் கொண்ட கடவுள் நல்லருள் புரியட்டும் ......தாங்கள் இட்ட படத்தை பார்த்தவுடன் மக்கள் அறிந்து கொள்வார்கள் இது கதையல்ல நிஜம் ஒவ்வொரு தமிழனின் கனவு தொடருங்கள் வாழட்டும் தமிளும் தமிழ்மக்களும் ............வாழ்த்துக்கள்

கடையநல்லூர்க்காரன said...

முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள்தான் நமது வரலாற்று ஆவணத்தின் காதாநாயகர்கள். ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் பள்ளி பருவம் முதல் நெருங்கிய நண்பர்கள். இந்த அன்புச்சகோதரர்களை பிரித்துப்பார்க்க ஒரு பாசிசகும்பல் முயலும் அதற்க்கு இஜ் சகோதரர்கள் இடம் அளிப்பார்களா சிறிய கவலையுடனும் ஆவலுடனும் தமிழர்கள் காத்திருக்கின்றனர் தொடருங்கள் வாழ்த்துகின்றோம்

Anonymous said...

Athuthaan eni thamilarkalidam nadakkaathu. Thamilarkalidam hinduthuvaavin velai palikkaathu

PUTHIYATHENRAL said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தமிழ் மாறன்!

PUTHIYATHENRAL said...

//பீடிகை ப‌ல‌ம்மாயிருக்கிற‌ச்சே நிச்ச‌ய‌ம் நன்னாத்தான் எழுதுவேள்!// நன்றி தமிழன். உங்கள் வரவு கருத்தும் உற்ச்சாகம் அளிக்கிறது.

PUTHIYATHENRAL said...

//தொடருங்கள், தொடர்கிறேன்.// நன்றி ரசிகன் அவர்களே உங்கள் வரும் கருத்தும் ஆர்வம் தருகிறது.

PUTHIYATHENRAL said...

//WELCOME STEPPING INTO NEW ERA.GOOD EFFORT.// நன்றி தலைதளையன் சார்!

PUTHIYATHENRAL said...

//காத்திருக்கிறேன் உங்களுடைய வருங்கால வரலாற்றை படிக்க// நன்றி குடிமகன் சார்! உங்கள் வரவும் கருத்தும் உற்ச்சாகம் தருகின்றது. மீண்டும் வாருங்கள் கருத்து சொல்லுங்கள் நன்றி.

PUTHIYATHENRAL said...

டேனியல் அண்ணா வாங்க பழகுவோம் வாங்க! உங்கள் கருத்துக்கு நன்றி! மீண்டும் வாருங்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் லட்சுமி அம்மா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! நீண்ட நாள்களுக்கு பின் கருத்து சொல்றீங்கள்! மிக்க நன்றி.

PUTHIYATHENRAL said...

//தாங்கள் இட்ட படத்தை பார்த்தவுடன் மக்கள் அறிந்து கொள்வார்கள் இது கதையல்ல நிஜம் ஒவ்வொரு தமிழனின் கனவு தொடருங்கள்// நன்றி கடையநல்லூர்காரரே அழகான சொற்களை கொண்டு கருத்து சொல்லி இருக்கீங்கள். நன்றி தோழரே. உங்கள் வரவு தொடரட்டும்.

ஓசூர் ராஜன் said...

புதிய தென்றலுக்கு நன்றி! உங்கள் பதிவுகள் பூகம்பத்தை ஏற்படுத்தும் பதிவுகள்!

Anonymous said...

Sariya sonneengal rajan....it's make some think.... By bawas

Anonymous said...

You start very good job keep it up.....

Anonymous said...

Whats happened mr. Thenral when u go to posting the 2nd part. It's monthly on e or weekly on e.. We are waiting.