Dec 8, 2011

ரஜனி! கமல்! ஜெய் ஆகாஷ்! "ஆயுதப்போராட்டம்"!

DEC 09: நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஆயுதப்போராட்டம்". வெந்த புண்ணில் வேல்பாச்சும் படம் இது.

ஈழத்து போராளிகளை மையமாக வைத்து கதையை சொல்லி இருக்கும் இவர் முடிந்த அளவு போராளிகளை கேலி  சித்திரங்களாக ஆக்கி கதையை அமைத்துள்ளார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்றால் அதற்கும் தமிழனின் நீண்ட, நெடிய வரலாறுதான் கிடைத்ததா?

ஆயுத போராட்டம் என்ற பெயரை பார்த்ததும் அது தமிழர்களின் ஆயுதபோராட்டதிற்க்கு பெருமை சேர்க்கும்  படமாக  இருக்கும் என்று பார்த்தால் அதில்  வரும் காட்சிகளை பார்க்கும் போது நமக்கு வெறுப்புதான் மிஞ்சுகிறது. நமது போராளிகளின்  வீரம், விவேகம் அனைத்தையும் கேலி செய்வதாக  இந்த படம் அமைந்துள்ளது.

வரலாற்றில் வைர வரிகளாக பொறிக்கப்பட்டுள்ள இலங்கை விமான நிலைய தாக்குதலை காட்டு கூச்சல் மியூசிக்குடன் காட்டி அதன் மகிமையையும் கெடுத்துள்ளனர். உங்களுக்கு பணம், புகழ் என்ற அரிப்பு வந்தால் வழக்கம் போல மசாலா படத்தையோ, காதல் கதையையோ எடுத்து தொலைக்க வேண்டியதுதானே. ஈழத்து  மக்களின் துயரம் தாங்கிய 35 வருடகால வீர வரலாறை ஏன் கொச்சை படுத்துகிறீர்கள்.

ஈழ வரலாற்றை  பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒரு யோக்கிதை இருக்கிறது. தகுதி இல்லாத ஒருவனால் எடுக்கப்பட்ட  படம்தான் இது. அதிலும் ஜெய் ஆகாஷ் வரலாற்றை திரிக்கப்பார்கிறார். இலங்கை பயங்கரவாத அரசுக்கு  இந்திய பயங்கரவாத அரசு ஆயுதம் கொடுத்தது உதவியது என்பதை மாற்றி ஏதோ இந்தியாவை சேர்ந்த ஒரு ஆயுத கம்பனி கொடுத்தது போல் திரிபுவாதம் புரிகிறார்.

லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே!
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

25 comments:

தமிழ் மாறன் said...

வணக்கம் யாழினி நலமா இருக்கீங்களா!

லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே!

சரியா நெத்தியில் அடித்த மாதிரி சொன்னீங்கள். நன்றி!

தமிழ் மாறன் said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை பதிந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள் யாழினி!

நட்புடன் தோழி: மாலதி.

Anonymous said...

ஆமா ரஜினி என்ன சார் செய்தார். ஏன் ஒரே ரஜினியை தாக்கி பதிவு போடுறே. உங்களுக்கு சினமா பிடிக்கல என்றா நாங்க என்னையா பண்றது. அவரு தெய்வம் அவரை பற்றி தப்பா சொல்லாதே. தமிழகமே கொதிச்சி போகும்.

Anonymous said...

Rajini nallavar avarai patri pesa yaarukkum thaguthi illai. Avar mahaan.

Anonymous said...

Very good article Yalini ..... keep it up... Thank u. By: raja

Anonymous said...

Kamal nallavar avarai vittuvidungal. Avarai elukka vendaam.

""" sathish"""

Anonymous said...

thalaivara pathi thappa pesathada naaya ..unaku enna thakuthi irukku nu ippadi pesura

Anonymous said...

நம்ம ரஜினி கமல் தான் தமிழகத்தையும் தமிழர்களையும் காப்பாற்றுவார் நம்புங்கள் .இதுவரை சினிமாத்துறைதான் தமிழகத்தை ஆட்சி பண்ணிக்கொண்டு வருகிறது அப்படி இருக்கையில் நம்ம ரஜினி கமல் நம்மளை காப்பாற்ற மாட்டாரா,,,,,,நடிகனின் பின்னால் போகும் [முட்டாபயல்களா திருந்தமாட்டிர்களா] தமிழா உன் வாழ்க்கை உன் கையில்..\\\\\\\\\\\\////////////,,by ..புனிதப்போராளி

Anonymous said...

நடிகர்கள் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே!
தமிழகத்தையும் தமிழர்களையும் நம்ம ரஜினி கமல் தான்காப்பாற்றுவார் நம்புங்கள் .இதுவரை சினிமாத்துறைதான் தமிழகத்தை ஆட்சி பண்ணிக்கொண்டு வருகிறது அப்படி இருக்கையில் நம்ம ரஜினி கமல் நம்மளை காப்பாற்ற மாட்டாரா,,,,,,நடிகனின் பின்னால் போகும் [முட்டாபயல்களா திருந்தமாட்டிர்களா] தமிழா உன் வாழ்க்கை உன் கையில்..\\\\\\\\\\\\////////////,,by ..புனிதப்போராளி

ராஜ் said...

ஹலோ,
யாருங்க நீங்க....சும்மா கண்டபடி எழுதி இருக்கேங்க.....?????

நீங்க என்னமோ சொல்ல வரேங்க...ஆனா என்னனு உங்களுக்கே தெரியல...
ஜெய் ஆகாஷ் படம் எடுத்தது தப்புன்னு சொல்றீங்களா..??? இதுல்ல ரஜினி, கமல் எல்லாம் நடிச்சு இருகாங்களா...???

Anand said...

சுயலாபத்திற்காக இந்த மாதிரி படம் எடுப்பவர்களை செருப்பால அடிக்க வேண்டும்.

Anonymous said...

நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாத்துறை நன்று, நடிப்பு நன்று, நடிகனின் பின் நின்று, தமிழனின் தலைகுனிவுயன்று பத்திரிக்கை தர்மத்தின் மை நன்று;

காகிதமும் நன்று;

எழுதப்பிடித்தக் கரத்தில்;

முழுவதும் காவி

ஒட்டியிருப்பதால்;

ஒட்டியிருக்கும் செய்தி

எங்களை உரசிப்பார்க்கும்!

இல்லாதச் செய்திகள்

எங்களை வர்ணித்து;

வர்ணம் பூசி;

கர்ணம் அடிக்கும்

பத்திரிக்கைத் தர்மம்!

தொட்டியில் உள்ள

மழலையைச்

சீண்டி விட்டு – பின்

சிரித்து விட்டு;

விற்பனையில்

முத்திரைப் பதிக்க அவ்வப்போது

முகத்திரையை விலக்கும் உனை;

விலக்குவோம் – மக்களுக்கு தினமலர் [தினமலம்]

உனைப்பற்றி விளக்குவோம்!
பின் ஒதுக்குவோம் சமுதாய நலன் கருதி கருத்திடுவோர்..by.கடையநல்லூர் காரன்

தமிழ் மாறன் said...

அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு தன் பூணுலை மறைத்து கொள்ளும் இவரை பரமக்குடி பையன் என்றும், பெரியாரின் பிள்ளை என்றும் கூறி வந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த மன்மதன் அம்பு இராம பக்தர்களின்(ஹிந்துத்துவா) கைகளிலிருந்து இராவண (திராவிடர்) திசை நோக்கி குறிவைக்கப்படுகிற அம்புகளில் ஒன்று என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.

தமிழ் மாறன் said...

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப் பெரும்பகுதித் தமிழர்களுக்கு அறிமுகமானவர், நவராத்திரித் தமிழனை (சிவாஜியை ) தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்று பார்த்தவர் கமல். இந்த மன்மத அம்புவின் வாயிலாக தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை, தாய்த் தமிழை இழிவு செய்வதில் உயிரே படம் டைரக்டர் மணிரத்னம், எழுத்தாளர் சுஜாதா,சிங்கள இனவெறியர்களையும் தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.

தமிழ் மாறன் said...

தமிழ் சாகுமாம்... தமிழ் தெருப் பொறுக்குமாம். இதுவெல்லாம் உங்கள் மாட்சிமை தாங்கிய தசாவதாரம் கமல் ஐயா மன்மதன் அம்புவில் சொன்னதுதான். அதில் வரும் ஒரு ஈழத்தமிழர் கதாபாத்திரத்தை செருப்பு என்று சொல்வார். பண்பாடு மிக்க எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நீங்கள் காட்டுகிற நன்றி இதுதானா கமல்! செருப்புதானா கமல்! ஈழத் தமிழ் என்றால் எங்களுக்கெல்லாம் கண்ணீர்த் தமிழ்! குருதித் தமிழ்! இசைப்பிரியா என்கிற ஊடகத் தமிழ்த்தங்கை உச்சரித்த வலிசுமந்த தமிழ்! ஆனால்.. உங்களுக்கு மட்டும் எப்படி கமல்... அது எப்போதும் நகைச்சுவைத் தமிழாக மட்டுமே மாறிவிடுகிறது! பேசி நடிக்கத் தமிழ் வேண்டும். தாங்கள் நடித்த படத்திற்குக் கோடிகோடியாய்... குவிக்க.. தமிழனின் பணம் வேண்டும். தென்னாலியில் தமிழை வைத்து பிழைக்க தெரியும்... இப்படியே போகிறது நமது கமல் சார் உலகநாயகனின் புகழ், பண அரிப்பு.

தமிழ் மாறன் said...

தமிழ் சாக வேவண்டும் அவன் தமிழ் தெருப் பொறுக்க வேண்டும்.'',தெருப் பொறுக்குதல் கேவலமன்று.. கமல். அது தெருவைத் தூய்மை செய்தல்! "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகையே பெருக்கியவர்கள் நாங்கள். எங்களைப் பார்த்து செருப்பைத் தூக்கிக் காட்டிய கமல் அவர்களே.. உங்களை தமிழ்தான் காப்பாற்றியது. பசி நீக்கியது. நீங்கள் வாழ்கிற வீடு, நீங்கள் போகிற கார், நீங்கள் உடுத்துகிற உடை அனைத்திலும்.. உங்கள் பிள்ளைகள் படிக்கிற படிப்பில்.. புன்னகையில் எல்லாம் எல்லாம்...! கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எங்கள் ஈழத் தமிழ் உறவுகளின் சதைப் பிசிறுகள்... இரத்தக் கவுச்சிகள் அப்பிக் கிடக்கின்றன. மோந்து பாருங்கள். எங்கள் இரத்த வாடையை மோந்து பாருங்கள்.

தமிழ் மாறன் said...
This comment has been removed by the author.
தமிழ் மாறன் said...

//ஹலோ, யாருங்க நீங்க....சும்மா கண்டபடி எழுதி இருக்கேங்க.....????? நீங்க என்னமோ சொல்ல வரேங்க...ஆனா என்னனு உங்களுக்கே தெரியல... ஜெய் ஆகாஷ் படம் எடுத்தது தப்புன்னு சொல்றீங்களா..??? இதுல்ல ரஜினி, கமல் எல்லாம் நடிச்சு இருகாங்களா...???//

என்ன தோழர் ராஜ் இந்த படத்தில் கமல், ரஜினி எல்லாம் நடிக்கவில்லைதான் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஒன்று என்பதைதான் யாழினி சொல்லுறாங்கள். புகழ், வெறி, பணவெறி அதற்க்கு அவர்கள் எதையும் செய்யத்தயார். தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு அந்த மக்களை உங்கள் உலக நாயகன் எப்படி கேவலப்படுத்துகிறார் என்பதை மேலே நான் கொடுத்த கொசுறு செய்தியில் இருந்து தெரிந்திருபீன்கள். அடுத்து நம்ம ரஜினி ஐயா அவர் எப்படி கன்னடத்து காரர்களிடமும் தமிழர்களிடமும் காவேரி விசயத்தில் இரட்டை வேடம் போட்டார் என்பதை டி. ராஜேந்தர் பேசியிருக்கும் விடியோவை சிந்திக்கவும் இணையத்தின் முகப்பில் ஆசிரியர் புதியதென்றல் வைத்துள்ளார் தயவு செய்து போயி பாருங்கள் ஐயா! தவறா சொல்லி இருந்தால் விளக்கம் கொடுங்கள். நன்றி. நட்ப்புடன் - தமிழ் மாறன்.

Anonymous said...

Ranini tamil nattai kaakkum thaivam. Ungalukku puriyathu.

Thameez said...

முதலில் ஆகாஷ் எடுத்த படத்துக்கு பாராட்டுங்கள் அப்புறம் விமர்சனம் எழுதலாம். ரஜினி பற்றியும் கமல் பற்றியும் தலைப்பு போட்டால் ப்ளாக் "ஹிட்" ஆகும் என்று கவர்ச்சியான ஒரு தலைப்பை போட்டு அதற்கு எல்லாம் பதில் சொல்லி ( என்னையும் சேர்த்து ) இலங்கை வாழ் மக்களே முதலில் உங்கள் தேசத்தில் இருக்கும் பிரச்னை கவனியுங்கள். அப்புறம் தமிழ் நாட்டிற்கு வந்து இங்கே இருப்பதை விமர்சிக்கலாம். இலங்கை வாழ் தமிழர்களை முதலில் இந்த தளத்தை படிக்க "முயற்சி" செய்யுங்கள்!!

PUTHIYATHENRAL said...

தமீஷ் சார் நலமா! ஹிட் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. மக்கள் படிக்கணும் பயன் பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனாலேயே சிந்திக்கவும் எப்போதும் பாதிக்க பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும். ஹிட் தேவை என்றால் வேற வழிகளில் எழுத முடியும். யாழினி சொன்னது முற்றிலும் சரியே. லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே! இது சரியான கருத்தே இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதுகுறித்து கருத்து எழுதுங்கள் நண்பரே.

மலர்விழி said...

லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. நல்ல சொன்னீங்கள் யாழினி.

Anonymous said...

//மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே!// சத்யராஜை விட்டுவிட்டீர்களே! அவரும் கதாநாயகின் உடலை தடவிதடவித்தான் படம் நடித்தார்...சேவை செய்துட்டாராக்கும்...

கேகே நிதர்சன் said...

இந்த செய்தியை யார் எழுதினாங்களோ தெரியல ஆனா சும்மா பகுடிக்கு தேவையில்லாத கதைகளை பூச்சாண்டி காட்டி தாங்கள் கிட் ஆகிறதுக்கு கமலையும் ரஜினியையும் இங்க இழுத்து இந்த விமர்சனத்தில குளிர் காயூறீங்கப்பா?

நான் யாழ்ப்பாணத்திலதான் இருக்கிறன் உங்க தமிழ் நாட்டில காதல் படங்கள் காட்சிகள் எல்லாம் அப்பிடி இப்பிடித்தான் இருக்குது ...பாவம் ஜெய் ஆகாஸ் நிறை வருடமாக உங்க இருக்குறாதாலை பாவிபயபுள்ளை அவருக்கு அந்த விசயத்தில பெரிசாய் கவனிக்காமை விட்டுட்டார் ....அது ஒரு மசாலாப்படம் தான் சினிமா எண்டா அறுசுவை இருக்கத்தான் செய்யும் அவரையோ எவரையோ குறை காணாதீர்கள்

முதல் நீங்கள் திருந்துங்கள் ஜெய் ஆகாசை வச்சு நீங்கள் புளப்பு நடத்தேக்க அவர் ஏன் மத்தவங்களை வச்சி நடத்தக்கூடாது ?
பாவம் பொடியன் அதையாவது சமூகத்திற்கு வெளியில் கொண்டு வந்திருக்கு நீங்க யாரும் ஏதும் பண்ணியிருக்கீங்ளா ? சும்மா வீர வசனங்கள் பேசாதேங்கோ ? அப்பி ஏதும் செய்யிறதண்டா அவ்வளவு சனம் செத்து மடியேக்கை வீர வாய்ப்பேச்சை விட்டுட்டு ஈழத்தில இங்க வந்து நிண்டிருப்பீங்க ...

சும்மா நீங்க குளிர் காயுறதுக்கு எங்களை வயிட்ஸ் ஆக்குறீங்க ,மற்றது ஆகாசுக்கு தகுதிஇல்லை எண்டு சொல்லாதீங்க அவன் இங்க தாவடியிலை வளர்ந்த பையன் அவனுக்கு எல்லாம் தெரியும் ...மற்றவனை கேலி பண்ணி உங்கடை புளைப்பை கொண்டு போகதீங்கப்பா!