Dec 26, 2011

அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது!

DEC 27: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

1) ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார்
அன்னா ஹஸாரே

2) 1983-ல்
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார்.

3) 1965 ல் இந்தியா, பாகிஸ்தான்  யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார்.

4) நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில்  பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான்
அன்னா ஹஸாரே. 

அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன.  "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படி பட்ட ஒரு பெய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

35 comments:

Anonymous said...

அன்னா ஹசாரே! அன்னா ஹசாரே! இது பார்பனர்களின் மந்திர, தந்திர வார்த்தை. BY: RAJA

vizzy said...

அன்னா நீங்கள் சொன்னபடி rss ஆக தான் இருக்கட்டும் அல்லது பிராமணனாகத்தான் இருக்கட்டும் அதனால் என்ன,இந்த தேசத்தைவிட்டு ஊழல் ஒழிந்தால்போதும்.காங்கிரஸ் காரன் மட்டுமில்லாமல் நம்ம ஊர் சூனா மானாக்களுக்கும் லோக்பால் என்றால் பின்னாடி பச்சைமிளகாய் வைத்ததுபோல் இருக்கிறது.

Anonymous said...

எவனாவது ஒருத்தன் நல்லது பண்ண உங்கள மாதிரி ஆளுங்களுக்கு பொறுக்காதே!

நீ உத்தமனாக இருந்தா உடனே ஊழல மட்டுமில்ல சமூகத்துல நடக்குற அநியாயங்கள தட்டி கேட்று

அப்போ ஒத்துக்குறேன் நீயும் மனுசன்னு!

Anonymous said...

DEAR BR. VIZZY,

MINORITY COMMUNITY LIKE MUSLIMS, CHRISTIANS AND MAJORITY COMMUNITY LIKE DRAVIDIANS, MOST OPPRESSED THAN THE ABOVE SAID TWO COMMUNITIES FEEL THAT CORRUPTION, LOOTING THE PUBLIC AND GOVERNMENT PROPERTY IS SECONDARY CONCERN TO THEM BECAUSE THEY ARE IN A CONSTANT FEAR OF HINDUTVA.

WHILE THEY ARE FEARING ABOUT THEIR WHOLE LIFE FOR UNSAFE AND INSECURITY, HOW THEY WOULD THINK MONETARY BENEFIT FOR THEIR COUNTRY?

IF YOU PUT A QUESTION TO ANY NOBLE MEN ON EARTH OF ANY AGE, AS TO WHAT WOULD BE THEIR CHOICE "SECURE LIFE OR STOMACH FULL FED LIFE" OF COURSE EVEN A LAY MAN WILL SAY, "SECURE LIFE" THAT IS WHAT MINORITY COMMUNITY FEEL AND NEED NOW.

அன்புச்சகோதரர் VIZZY அவர்களுக்கு, சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள், கிருச்துவர்களைவிட பெரும்பான்மை சமுதாயமான தலித்துகள், திராவிடர்கள் அதிகமாக நசுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும் மேற்கண்ட இரு சிறுபான்மை சமுதாயங்களும் ஊழலைவிட, அரசியல்வாதிகளால் நாடு கொள்ளையடிக்கப்படுவதைவிட தங்களின் உயிருக்கும், தங்களின் பிள்ளைகுட்டிகளின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புதான் முக்கியம் என கருதுகிறார்கள்.

அப்படி நினைப்பதில் தவறொன்றுமில்லை. ஏனெனில் அவர்களின் வாழ்வு ஹிந்துத்துவாவின் நிரந்தரமான அச்சுறுத்தலில் இருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் தங்களின் உயிரை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்களா அல்லது தாங்களெல்லாம் முற்றாக அழிக்கப்பட்டு தங்களின், தங்கள் பிள்ளைகளின் கல்லறைகள் மேல் பிரும்மாண்ட அடுக்குமாடி கட்டி தாங்கள் அழிவதற்கு காரணமான ஹிந்துத்துவாவினர் வாழ்வதை விரும்புவார்களா?

இந்த உலகத்தின் எந்த பகுதியில் வாழும், எந்த ஒரு மனிதரிடம் கேட்டுப் பாருங்கள், உயிருக்கு பயமற்ற வாழ்க்கை முக்கியமா அல்லது வயிறு நிறைய சோறு முக்கியமா என்று. எந்த ஒரு சாதாரண மனிதனும் சுலபமாகச் சொல்லும் பதில், "பயமற்ற வாழ்வு" என்பதாகத்தான் இருக்கும். இதற்கு மாற்றமாகச்சொன்னால், ஓன்று அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை அல்லது அவன் முதுகுக்குப்பின்னால் யாரோ பயங்கர ஆயுதத்தை வைத்து அதுபோல் சொல்லச் சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.


MOHAMED THAMEEM

Anonymous said...

கேரளா மக்களுக்கு ஒரு வகை ஹிஸ்டீரியா என்றால் தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களுக்கு வேறு வகையான ஹிஸ்டீரியா. இப்ப என்ன பிரபாகரன் சூப்பர் என்று சொல்லப் போகிறீர்களா...அதுக்குதானே இதெல்லாம்...

கக்கு - மாணிக்கம் said...

சிரிப்பாகத்தான் வருகிறது. ஆர். எஸ். எஸ். காரருடன் போட்டாவில் இருந்தால்அது ஒரு இழி செயலா இல்லை தேச துரோகமா? இது என்ன மனவியாதியோ தெரியவில்லை. இங்குதான் சகலமும் இருகிறதே. அதே ஆர். எஸ். எஸ் காரருடன் அதே திக்கு விசய சிங்கு இருந்த போட்டோவை அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி அம்மணி கிரண் பேடி வெளியிட்டு அந்த மகா மூதேவி திக்கு விசய சிங்கின் சாயத்தை வெளுத்து விட்ட கதையும் நடந்ததே உங்களுக்குத்தெரியாதா என்ன?

தமிழ் மாறன் said...

லோக்பால் ஊழலை ஒழிக்குமா
பொது ஊழியர் ( பப்ளிக் சர்வண்ட்) என்ப்படும் எவரையும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து வழக்கு தொடுக்க, இந்தியன் பீனல் கோட் எனப்படும் தண்டனைச் சட்டத்திலும், ஊழல் தடுப்புச் சட்டம் (1988) என்ற சட்டதிலும் வகை செய்ய்ப்பட்டிருக்கிறது. யார் பப்ளிக் சர்வண்ட் என்பதில் சர்ச்சை எப்போதும் இருந்து வருகிறது. முதலமைச்சர் பப்ளிக் சர்வண்ட் அல்ல என்று கருணாநிதி எழுபதுகளில் அவர் மீது சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டபோது வாதாடினார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. இப்போது ஜெயலலிதா மீது இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு , டான்சி வழக்கு போன்ரவற்றிலெல்லாம் முதலமைச்சரும் பப்ளிக் சர்வண்ட்டே என்ற அடிப்படையே பின்பற்றப்படுகிறது. நாடாளுமன்ற எம்.பிகள் பப்ளிக் சர்வண்ட்டா எனப்து பற்றியும் சர்ச்சைகள் இருந்தன. உச்ச நீதிமன்றம் நரசிம்மராவ் அரசு கவிழாமல் காப்பாற்ற எம்.பிகளுக்கு லஞ்சம் தரப்பட்ட வழக்கில், எம்.பிகளும் பப்ளிக் சர்வண்ட்தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு போடுவதற்கு முன்பு அந்த அரசின் ( மாநில அல்லது மத்திய அரசின்) அனுமதி பெறவேண்டும். இதே போல எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்கு முன்பு சபாநாயகரகள், அவைத் தலைவர்கள் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று சிலர் வாதாடி வருகிறார்கள். சட்டப்படி இது தேவையில்லை என்றும் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டால், அவைத் தலைவர், சபாநாயகர்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும்

தமிழ் மாறன் said...

லோக்பால் ஊழலை ஒழிக்குமா?

மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்க கண்காணிப்பு மற்றுக்ம் ஊழல் தடுப்பு துறைகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளது. சுமார் நான்காண்டுகளில் ( 2005-2009) இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு சுமார் 13 ஆயிரம் புகார்களில் துறை ரீதியான தண்டனை வழங்கியிருக்கிறது. எச்சரித்துக் கண்டித்தல், சமபள உயர்வை வெட்டுவது, தற்காலிக வேலை நீக்கம், இடமாற்றம், வேலையிலிருந்தே நீக்குதல் போன்ற தண்டனைகள் இவை. இவற்றில் 846 புகார்களில் சமபந்தப்பட்ட ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் மத்திய அரசின் சி.பி.ஐ எனப்படும் செண்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்ட்டிகேஷனும் லஞ்ச ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தொடுக்கிறது.

தமிழ் மாறன் said...

இவை எல்லாவற்றையும் ஒரே லோக்பால் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான் லோக்பால் மசோதாவின் நோக்கம். அப்படிக் கொண்டு வரும்போது எந்த ஊழல் புகாரையும் விசாரிக்க அந்தந்த அரசின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. லோக்பால் விசாரித்து முடித்ததும் இதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை தரப்படும். பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கு அபராதமோ சிறை தண்டனையோ விதிக்கப்படும்.லோக்பால் என்பது ஒரு தனி நபர் அல்ல. ஒரு தலைவரின் கீழுள்ள குழுவாக இருக்கும் . இந்த லோக்பால் குழுவை குடியரசுத் தலைவர் நியமிப்பார். யாரை நியமிப்பது என்பதை பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும். லோக்பால் குழுவினரை நீக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருடையது. அதை அவர் உச்ச நிதீமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் செய்வார்.

மேற்கண்ட விஷயங்களில் எல்லாம் அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவுக்கும் அண்ணா ஹசாரே அணியின் ஜன் லோக்பால் மசோதாவுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. நியமிக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள், லோக்பால் குழு உறுப்பினர்களின் வயது வரம்பு, குற்றவாளிக்கான அபராதம், சிறை தண்டனையின் அளவு இவற்றிலெல்லாம் சின்னச் சின்ன வித்யாசங்கள் இருக்கின்றன. லோக்பால் உறுப்பினர் யாரும் 45 வயதுக்குக் கீழ் இருக்கக் கூடாது என்று அண்ணா குழு சொல்கிறது. 25 வருட அனுபவம் உடையவராக இருக்கவேண்டும் என்று அரசு சொல்கிறது.

தமிழ் மாறன் said...

லோக்பால் ஊழலை ஒழிக்குமா?

முக்கியமான வேறுபாடுகள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிகள், அரசு சாராத நிறுவனங்கள், கீழ் மட்ட ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் தொடர்பானவை. பிரதமர், நீதிபதிகள் இருவரும் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அண்ணா ஹசாரே அணியின் கருத்து. அரசு இதை ஏற்கவில்லை. பிரதமர் பதவியிலிருந்து விலகியபின் அவரை உட்படுத்தலாம் என்கிறது. எம்.பிகள் அவைக்குள் ஈடுபடும் செயல்கள் தொடர்பாக விசாரிக்க முடியாது என்கிறது அரசு. அவையும் உட்பட்டவையே என்கிறது அண்ணா அணி. பொது மக்களிடமிருந்தோ அரசிடமிருந்தோ பணம் பெறும் அமைப்புகளும் லோக்பாலுக்கு உட்பட்டவை என்கிறது அரசு. இதன்படி தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பல லோக்பாலுக்கு உட்படவேண்டி வரும். அண்னா ஹசாரே அணி அவற்றை லோக்பாலுக்கு உட்படுத்தவே இல்லை. ஏன் தொண்டு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் விலக்களிக்கப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

தமிழ் மாறன் said...

லோக்பால் மூலம் ஊழல் ஒளிந்து விடும் என்று நீங்கள் நம்பினால் அதை விட சிறுபிள்ளைத்தனம் வேறு ஒன்றும் இல்லை. இருக்கிற சட்டங்கள் ஒழுங்காக கடைபிடிக்கப்பட்டால் போதும். இவர் ஒரு குழு அமைப்பாராம் அதில் ஆர்.எஸ்.எஸ். காரர்களை இணைத்து கொள்வாராம். பின்னர் தங்களுக்கு வேண்டாதவர்களை ஊழல் என்று சொல்லி இவருக்கு பிண்ணியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்குமாம். என்னையா காதில் பூ சுத்துறீங்கள்.

ஏன் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் இதில் இணைக்க வில்லை. உங்களுக்கு காரணம் தெரியாமல் இருக்கலாம் எங்களுக்கு வெட்ட வெளிச்சமா தெரியுது. ஏன் என்றால் தொண்டு நிறுவனம் என்ற பெயரில்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அம்பிகள் ஒளித்து கொண்டு இருகிறார்கள் அதனால் அவர்களை இதில் சேர்க்கவில்லை. அப்படி சேர்த்தால் காஞ்சி சங்கராச்சாரி முதல் சகல சாமியார்களும் இதில் உட்படுவர். அடுத்து ஏன் கார்பரேட் நிறுவனங்களை சேர்க்கவில்லை என்றால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐயர் முதல் பாபா ராம்தேவ் வரை யோகா, இயற்க்கை மருத்துவம் என்று மக்களை ஏமாற்றி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கும் இவர்களும் அந்த சட்டத்துக்குள் வந்தால் பிரச்சனை இதனால் அவர்களை மட்டும் திட்ட மிட்டு தப்பவைத்து விட்டு அன்னா ஹசாரே என்கிற ஆர்.எஸ்.எஸ். கொடுக்கு மூலமாக தங்களுக்கு வேண்டாதவர்களை கொட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்பன அம்பிகள் போட்ட திட்டம். எல்லோரையும் கிறுக்கர்கள் என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஒம் சொல்ல.

தமிழ் மாறன் said...

அன்னா நீங்கள் சொன்னபடி rss ஆக தான் இருக்கட்டும் அல்லது பிராமணனாகத்தான் இருக்கட்டும் அதனால் என்ன,இந்த தேசத்தைவிட்டு ஊழல் ஒழிந்தால்போதும்!

சரிதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்பன அம்பிகள் ஊழலை ஒழித்து விடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக இல்லை. நாம் போட்டிருக்கும் மொத்த கருத்துக்களையும் படித்து விட்டு பதில் சொல்லுங்கள். இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தள்ள கொண்டுவரும் புது சட்டம்தான் இது.

Anonymous said...

சிரிப்பாகத்தான் வருகிறது. ஆர். எஸ். எஸ். காரருடன் போட்டாவில் இருந்தால்அது ஒரு இழி செயலா இல்லை தேச துரோகமா?

கண்டிப்பாக இழிவான செயல்தான், தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர் எப்படி நாட்டு நலனில் அக்கறை கொண்டவராக இருப்பார். by RAJA

Anonymous said...

அன்னாவால் ஊழலை ஒழிக்க முடியாது. english மாறனால்தான் முடியும். பிரபாகரனால்தான் முடியும். இந்தியா உடையும். english மாறன் வாழ்க! 2012 ல் உலகம் அழியும். அப்போது பிரபாகரன் மறுபடி தோன்றுவார்...ஜெய் ஈழம். அன்னாவின் மேக்கப் கலைந்தது. இந்த வெப்சைட் நடத்துபவர்கள்தான் உலகத்திலேயே நேர்மை குஞ்சாமணிகள்! english மாறனுக்கு ஜே!

Anonymous said...

/லோக்பால் ஊழலை ஒழிக்குமா?/
அதெப்படி ஒழிக்கும். சரியா சொன்னீங்க...english மாறன். பீரங்கிதான் ஒழிக்கும். துப்பாக்கிதான் ஒழிக்கும். கண்ணிவெடிதான் சரி! லோக்பால் எப்படி சரி!

Anonymous said...

// அதே ஆர். எஸ். எஸ் காரருடன் அதே திக்கு விசய சிங்கு இருந்த போட்டோவை அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி அம்மணி கிரண் பேடி வெளியிட்டு ...//

திக் விஜயசிங் உத்திரபிரதேச முதல்வராக இருந்த போது நடந்த அரசு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் நானாஜி தேஷ்முக் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட படமே அது. ஆனால் நமது காந்தியவாதி அன்னா கசாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் இடம் வேலைபார்த்துள்ளார்.

நாட்டை பாதுக்காக்க நடந்த யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டவர் இவர், அதுமட்டுமல்லாமல் காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். கும்பலோடு இருக்கும் இவர் எப்படி காந்தியவாதி ஆகா முடியும். காந்தியை கொன்ற ஒரு கும்பலோடு இருந்து கொண்டு ஊழலை ஒழிக்க ஒரு மசோதா என்று சொல்வது நம்பிக்கையை உண்டாக்கவில்லை.

அதே நேரம் ஊழலை ஒழிக்க போதுமான சட்டம் இருக்கும்போது மத்திய அரசு இதே சட்டத்தை கொண்டுவர ஒப்புக்கொள்ளும் போது அதை மறுப்பதும் அதில் தொண்டு நிறுவனங்களையும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் விதிவிலக்கு கொடுத்திருப்பதில் இருந்தும் இதுவும் ஒருசார்புடையது என்பதை காட்டுகிறது. மொத்தத்தில் ஆர்.எஸ். எஸ். அம்பிகள் தாங்கள் செய்த கார்க்கில் சவப்பெட்டி ஊழல் முதல் தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க நடத்தும் நாடகமே இது. by: raja

Anonymous said...

//கேரளா மக்களுக்கு ஒரு வகை ஹிஸ்டீரியா என்றால் தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களுக்கு வேறு வகையான ஹிஸ்டீரியா. இப்ப என்ன பிரபாகரன் சூப்பர் என்று சொல்லப் போகிறீர்களா...அதுக்குதானே இதெல்லாம்//

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் பிரபாகரன் சூப்பர்தான். உலகில் வாழும் மொத்த தமிழ் மக்களின் மாவீரன் அவர். நீங்கள் எல்லாம் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினி, மினிஸ்டர், மெகாஸ்டார், எல்லா ஸ்டாரும் சும்மா வேஷம் போட்டு நடிக்கும் நடிகர்கள்.

பிரபாகரன் சுத்த வீரன்! வீரத்தின் விளைநிலம்! மொத்த தமிழினத்தின் உண்மையான் ஹீரோ! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரன்! அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படையை புறமுதுகு காட்டி ஓட செய்தவர். சிறிய படை கொண்டு சிங்கள மற்றும் சீன, பாகிஸ்தான், இந்தியா போன்ற வல்லரசுகளின் படைகளிடம் போரிட்டவர். வரலாறு எங்கும் வீரர்களாக பதியப்பட்டவர்கள் எம்குல வேந்தர்கள் இன்னும் எனவெல்லாம் சொல்லணும். அவர் என்றும் தமிழ் மக்களின் சூப்பர்தான்.

*** மாலதி ****

PUTHIYATHENRAL said...

1)//எவனாவது ஒருத்தன் நல்லது பண்ண உங்கள மாதிரி ஆளுங்களுக்கு பொறுக்காதே!//

வணக்கம் தோழரே! யார் நல்லது பண்ணினாலும் அதை ஆதரிப்பவர்கள்தான் நாங்கள். ஒருத்தன் நல்லது பண்ணினால் மட்டும் இல்லை பலலேட்சம் பேர் நல்லது பண்ணினாலும் எங்களுக்கு பொறுக்கும். நல்லது பண்ண வேண்டும் என்பதே நமது இலக்கு. ஏழை எளிய மக்கள் பயன் பெறவேண்டும் என்பதே இலட்சியம்.

2) //நீ உத்தமனாக இருந்தா உடனே ஊழல மட்டுமில்ல சமூகத்துல நடக்குற அநியாயங்கள தட்டி கேட்று
அப்போ ஒத்துக்குறேன் நீயும் மனுசன்னு!//

ஐயா! சிந்திக்கவும் இணையம் எல்லாவிதமான தீமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக நியத்தின் குரலாகதான் இன்றுவரை இருந்து வந்துள்ளது. தொடர்ந்து நமது பதிவுகளை படியுங்கள். அநியாயங்களை நாங்கள் தொடர்ந்து தட்டி கேட்கிறோம். பதிவுகளை தொடர்ந்து படியுங்கள் தோழரே நன்றி.

Anonymous said...

அன்னஹசாரே ஆர் எஸ் எஸ் ஆக இருக்கட்டும் அல்லது ஐ எஸ் எஸ் ஆக இருக்கட்டும்அது பிரச்னை இல்லை.முதலில் தான் ஒரு ஆர் எஸ் எஸ் காரன் என்பதை சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும் .அங்கு தான் பிரச்சினை உள்ளது .ஆர் எஸ் எஸ் என்பதை சம்மதித்தால் முதலில் அவர்கள் செய்த ஆயுத ஊழலை பேசவேண்டும்!,அடுத்து தேச பக்தர்களின்
வேடத்தில் ஒளிந்து கொண்டு நடத்திய குண்டுவெடிப்புகளை பற்றி பேசவேண்டும் !அடுத்து சுதந்திர போராட்டத்தில் மண்ணின் மைதர்களை காட்டிகொடுத்த வந்தேறி
வாஜ்பேயே பற்றி பேசவேண்டும்!அடுத்து பிராமணர்கள் இந்தியர்களா?என்பதை பற்றி பேசவேண்டும்!அடுத்து கர்நாடகாவில் நடந்த ஊழலை பற்றி பேசவேண்டும்.
இதற்க்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற காரணத்தினால் தான் தன்னை பின்னில் இருந்து இயக்கும் ஆர் எஸ் எஸ் பேரை சொல்ல பாவம் இந்த போலி காந்திய வியாதி
பயபடுகிறார்....இதில் கூடுதல் இன்னும் விபரம் வேண்டும் என்றால் வாசகர்கள் கேளுங்கள் விவரங்கள் உடனே.

Anonymous said...

நாட்டின் முதல் பிரச்சினை ஊழல் இல்லை.ஹிந்து மத வெறியர்கள் தான் பிரச்சினை.வந்தேறிகளால் தான் பிரச்சினை .பார்பனர்களால் தான் பிரச்சினை.

Anonymous said...

அண்ணா ஹசாரே அணியின் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டால், சி.பி.ஐ, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எல்லாமே லோக்பாலின் கீழ் இயங்கும் அமைப்புகளாகிவிடும். நாடு முழுவதும் லோக்பால் இயங்குவதற்கு சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் தனியே புதிதாக வேலை செய்யவேண்டி வரும். இவர்கள் ஊழல் செய்கிறார்களா என்று கண்காணிக்க இன்னொரு துறை அமைக்க வேண்டி வரும். தனக்கு கீழ் உள்ள சி.பி.ஐ, வைத்து இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கலாம் என்பது ஆர்.எஸ்.எஸ்.யின் கனவு. இதன் மூலம் இந்தியாவில் ஹிந்துராஜ்ஜியம் உண்டாக்கலாம் என்பதே இவர்கள் நோக்கம். AZAD - NELLAI.

மலர்விழி said...

நமது தேவை மேலும் மேலும் சட்டங்களல்ல. இருப்பவற்றை சரியாக பயன்படுத்தும் மனிதர்கள்தான்.” லோக்பால்க்கு என்று தனியாக ஒரு அரசு இயந்திரமோ அல்லது அரசு பணியாலர்களையோ பயன்படுத்துவது என்பது ஒரு தனி மனித ஒழுக்கத்தை பொறுத்துத்தான் இருக்கிறது. நியமிக்க பட்ட புதிய லோக்பால் பணியாளர்களோ அல்லது அரசு பணியாளர்களோ ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம். தேவை இல்லாமல் ஒரு தன்னாச்சி அமைப்பை ஏற்படுத்தி கொள்ள மட்டுமே இந்த லோக்பால் புரட்சி பயன்படும்.

அது மட்டுமல்லாது இது ஒரு ஆபத்தான விடயமும் கூட. சுதந்திரமாக செயல்படும் சி.பி ஐ, மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை, போன்ற எல்லா துறைகளையும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது மிகவும் ஆபத்தான விடயம். இதனை வைத்து அந்த துறையை யார் கையாளுகிரார்களோ அவர்கள் மற்றவர்களை பழிவாங்க முடியும். அதுமட்டும் அல்லாமல் இந்த துறையை சேர்ந்தவர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா என்பதை கவனிக்க வேறு ஒரு துறையை நியமிக்க வேண்டும்.
நம்மவர்களின் ஊழல் பழக்கம் உண்மையிலயே அதீத சக்தி உடையது. அதற்க்கு முன் இந்த லோக்பால் என்பது கடுகு அளவு தான். லோக்பால் தான் ஒரே வழி என்பவர்கள் நிச்சயமாக கற்பனை வழம் இல்லாதவர்கள் தான். இதை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரே வழி தட்டி கேட்க பயபடாத, சுயநலம் இல்லாத குடிமகன்களை உருவாக்குவதிலே தான் உள்ளது. மொத்தத்தில் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். தீமைக்கு எதிராக, ஊழலுக்கேதிராக போராட முன்வந்தால் இது ஒழியும். நமக்கு என்ன? என்று இருந்தால் வேற்று சட்டங்கள் எதையும் தீர்க்கப்போவது இல்லை.

Anonymous said...

லோக்பால் தேவையில்லை. இருக்கும் சட்டங்களை இன்னும் விரிவுபடுத்தி திருத்தங்கள் செய்வதே போதுமானது.

_ மன்மதன் _

Anonymous said...

அண்ணா ஹசாரே அணி தாங்கள் எழுதி வைத்திருக்கும் மசோதாவை அட்சரம் பிசகாமல் அப்படியே நிறைவேற்றியாக வேண்டுமென்று அடம் அடம்பிடிப்பது அபத்தமானது ! அதிலும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்தவரை காந்தியவாதியாக அடையாளப்படுத்தி இதை செய்வது இதன் மூலம் ஒட்டுமொத்த உயர்மட்ட அதிகாரத்தையும் தன்வசம் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் திட்டமே இது. ...... நசீர் ஹுசைன்.

Anonymous said...

நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே.

இது ஒரு புதிய தகவல் இதை இதுவரை இந்த வந்தேறி பத்திரிக்கைகள் வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன்? இவர் ஒரு ராணுவ வீரர் என்பதை மறைத்து இவரை ஒரு காந்தியவாதி என்பதை மட்டும் காட்டுவதேன். இவரை ராணுவ வீரர் என்று சொன்னால் இவரை பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டிவரும் என்ற பயமா?

நல்ல செய்தி நன்றி. கிறிஸ்டோபர். உவரி தூத்துக்குடி மாவட்டம்.

Anonymous said...

Periya dummukku pathiri oru pathivu.

கபிலன் said...

ஆர் எஸ் எஸ் காரனாக இருந்தால் இருக்கட்டுமே...நாட்டில் இருந்து ஊழல் போகணும்...அவ்ளோ தான்..

Hotlinksin.com said...

நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.

ஊரான் said...

தமிழ்மாறன் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கேள்விகளுக்கு அசாரே ஆட்கள் பதில் சொல்ல வேண்டும். மேலும் லோக்பால் வந்தால் மட்டும் ஊழல் ஒழிந்து விடாது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அதிகார வர்க்கம் குறிப்பாக டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இருக்கும் வரை ஊழல் ஒரு போதும் ஒழியாது. மேல் மட்டத்தில் ஊழல் ஒழியாத போது கீழ்மட்டத்திலும் அதாவது கிராம நிர்வாக அலுவலர் மட்டம் வரை ஊழலை ஒழிக்க முடியாது. மற்றபடி அன்னா நடத்துவது ஒரு அரசியல். அவ்வளவே.
அன்னா அசாரே பற்றி மேலும் சில தகவல்களுக்காக:சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்! http://hooraan.blogspot.com/2011/08/blog-post_23.html

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் ...மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ..நாட்டைபாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே. உழலை ஒழிக்க புறப்பட்ட ஒரு உழல் வெள்ளை உடையணிந்த காவிக்கும்பலை சார்ந்தவன் அன்னா ஹஸாரே உண்மையை சொன்னால் கோபம் வருகின்றது RSS மடையர்களுக்கு .,,BY...புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஆர் எஸ் எஸ் காரனாக இருந்தால் இருக்கட்டுமே...நாட்டில் இருந்து ஊழல் போகணும்...அவ்ளோ தான்..உழலை விட கொடியது RSS இந்தக்கயவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் ... புனிதப்போராளி

தமிழ் மாறன் said...

//ஆர் எஸ் எஸ் காரனாக இருந்தால் இருக்கட்டுமே...நாட்டில் இருந்து ஊழல் போகணும்...அவ்ளோ தான்..//

ஊழல் ஒழியாது என்றுதான் மேலே நான் சொன்ன கருத்துக்களில் சொல்லி இருக்கிறேன். அன்னா ஹசாரே இந்திய நாட்டின் மொத்த அதிகார துறைகளையும் தன் கைவசம் எடுத்துகொள்ள பார்கிறார். இது ஒரு ஆபத்தான விடயம். மேலும் இவர்கள் ஊழல் செய்தால் இவர்களை கவனிக்க இன்னொரு குழு வேண்டும். மொத்தத்தில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதற்காக வேண்டி திருடட்டும் என்று சும்மா இருக்க முடியாது. இருக்கிற சட்டங்கள் போதுமானவை அதில் சிறிய மாறுதல்கள் கொண்டுவந்தால் போதும். மேலும் இதுபோல் உள்ள ஊழல்களை உடனுக்குடன் மக்களும், ஊடகங்களும் தட்டி கேட்க்க ஆரம்பித்தால் இவை முடிவுக்கு வந்துவிடும். நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் நண்பரே உங்கள் http://www.hotlinksin.com/ தளத்தில் செய்திகள் பகிரப்படுகின்றன. நன்றி.

Anonymous said...

[url=http://buyaccutaneorderpillsonline.com/#19181]order accutane[/url] - accutane no prescription , http://buyaccutaneorderpillsonline.com/#13316 cheap generic accutane

Anonymous said...

[url=http://buyonlinelasixone.com/#13087]lasix online[/url] - lasix cost , http://buyonlinelasixone.com/#16487 generic lasix