Dec 7, 2011

இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்!

DEC 08: ஹைதராபாத் : மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞ்சர்களுக்கு ஆந்திர அரசு 70 லட்சம் ரூபாய் நஷ்ட்ட ஈடாக வழங்க உத்தரவு பிரபித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இந்த  70 இலட்சம் ரூபாயும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை கயவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2007  ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ஹைதராபாத் ஜும்மா தொழுகை நடைபெற்ற சமயத்தில் மக்கா மஸ்ஜிதில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பல உயிர்கள் பலியாயின.

மேலும் இக்குண்டு வெடிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 70  பேரை காவல்துறை கைது செய்து அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் சென்ற வருடம் இந்தியா முழுவதும் நடந்த தொடர்  குண்டு வெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிருபிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அடைந்த துன்பத்திற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் தான் பாவமன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். காந்தியும் புத்தரும் பிறந்த குஜராத்தில் பயங்கரவாதி  மோடியின் பாசிசம் ஆட்சி செய்கிறது. அதே நேரம் ஆந்திரத்தில் இருந்து ஒரு வசந்த காற்று வீசுகிறது அதுதான் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இவர் நீதியன் காவலனாக, நேர்மையின் சின்னமாக உயர்ந்து விளங்குகிறார். இவர்தான் இந்தியாவின் ஜென்டில் மென். இவரை போன்றவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவில் மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இதுபோன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? பாபர் மசூதி மீண்டும் கட்டி கொடுக்கப்படுமா? ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபாலன், உமாபாரதி போன்றோர் தண்டிக்கப்படுவார்களா? இது நடக்குமேயானால் மீண்டும் ஒரு பிரிவினையில் இருந்து இந்தியா தப்பிக்கும். இந்தியா வல்லரசாக தேவையில்லை தனது குடிமக்களுக்கு நல்லரசாக இருந்தால் போதும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

15 comments:

Anonymous said...

//சென்ற வருடம் இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிருபிக்கப்பட்ட பின்னர்//
அப்படியா.. சொல்லவே இல்லை!

மலர்விழி said...
This comment has been removed by the author.
மலர்விழி said...
This comment has been removed by the author.
மலர்விழி said...

நடுநிலையோடு நடந்து கொண்ட முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு எனது வாழ்த்துக்கள்!. இந்நேரத்தில் என் நினைவுக்கு வருவது கருணாநிதிதான். இவர் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டதை அடுத்து அந்த காவலருக்கு ஆதரவாக கோவை காவல்துறையும், அவர்களோடு இணைந்து ஹிந்து துவாவினரும் நடத்திய கலவரத்தில் மொத்தம் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இப்படி கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களை கொன்ற காவல்துறையினருக்கு முதல்வர் கருணாநிதி பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்து, பதவி உயர்வும் கொடுத்தார். இதன் மூலம் காவல்துறையை பகைத்து கொள்ள வேண்டாம் நாளைக்கு ஆட்சி மாறினாலும் அவர்கள் தனக்கு தேவை படுவார்கள் என்று எண்ணினார். ஆனால் காவல்துறையினரிடம் இருந்து அவர்கள் செய்த அநீயாயத்திர்க்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து அந்த 70 இலட்சத்தை பிடிக்க வேண்டும் என்று ஆணையிட்ட ஆந்திர முதல்வரை பாராட்டாமல் இருக்க முடியாது. திராவிட சிந்தனையில் ஊறிய கருணாநிதியே இப்படி இருக்கும் போது முதல்வர் கிரண் குமார் ரெட்டியை எண்ணி பெருமை அடைய முடிகிறது. மனித நேயம் சாகவில்லை என்பதற்கு ஒளிரும் நம்பிக்கையே அவர். கிரேட் சல்யூட் FOR முதல்வர் கிரண் குமார் ரெட்டி.

Abdul Rahman said...

// இந்தியா வல்லரசாக தேவையில்லை. தனது குடிமக்களுக்கு நல்லரசாக இருந்தால் போதும். //
மிகச் சரியான கருத்து - பாராட்டுக்கள்.

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

மாறாத‌ இஸ்லாமும்! மாறும் உல‌க‌மும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க‌ !!!! –

முல்லை பெரியார் அணை விவகாரத்தின் விஷ வித்து என்ன?

தயவு செய்து பொறுமையுடன் காணொளியை முழுமையாக கேளுங்கள்.

எல்லா விசயங்களுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்க‌ள் இருப்ப‌த‌னால் தான் உலகில் நாம் ப‌ல‌ முன்னேற்ற‌ங்க‌ளை பெற்றுக்கொள்ள‌ முடிகிற‌து

இஸ்லாம் ம‌ட்டும் மாறாம‌ல் இருப்ப‌தும், மாறவும் கூடாது. ஏன்? மாற்றுவதற்கு அவசியம் எங்கே?

ஆஸ்திக‌ர்க‌ளே, நாத்திக‌ர்க‌ளே, ப‌குத்தறிவாள‌ர்க‌ளே சிந்தியுங்க‌ள்.

முல்லை பெரியார் அணை விவகாரம் மற்றும் அதை போன்ற விவகாரங்கள் உருவாக விஷ வித்து என்ன?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

***** மாறாத‌ இஸ்லாமும்! மாறும் உல‌க‌மும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க‌ !!!! – ******

.
.

Anonymous said...

இந்த நல்ல ஆந்திர முதல்வருக்கு இந்திய குடிமக்களின் சார்பாக நன்றியே தெரிவித்து கொள்கிறோம்.இந்த முதல்வரின் காலை கழுவி கருணாநிதிக்கு
குடிக்க வைக்கவேண்டும்.அப்போவதாவது புத்தி வருகிறதா?என்று பார்ப்போம்?

UNMAIKAL said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.
தினமலர் தீக்குளித்து தற்கொலை


.

Anonymous said...

Seruppaala adiththaalum dinamalam thirunthaathu.... Musthafa

Anonymous said...

தனித்தமிழ்நாடு பிரித்து ஈழப்போரில் இறந்தவர்களுக்கு நட்ட ஈடு தரவேண்டும் என்ற கோரிக்கை எங்கே?

பின்னூட்டத்தில் கிரண் ரெட்டியின் காலைக் கழுவி அந்த நீரைக் கருணாநிதி குடிக்கவேண்டும் என்ற ஆசையை ஒருவர் வெளிப்படுத்தி இருந்தார். அது மிகவும் நல்லது. உயர்சாதி ரெட்டியின் காலைக் கழுவிய தண்ணீரைக் குடி என்று சொல்கிறீர்களே.... கருணாநிதி தமிழர் என்பதால் தானே இப்படி? இலங்கை ராணுவம் சுடும் போது ஓடாமல் நெஞ்சியை நிமிர்த்தி நின்று செத்துவிட்டு இப்போது கருணாநிதி முதுகில் குத்திவிட்டார் தனித்தமிழ் நாடு வேண்டும் என்றால் அவர் என்ன செய்வார் பாவம்?

பட்டுக்கோட்டை பிரபாகர் சீ... வேலுப்பிள்ளை பிரபாகர் மீண்டு வந்து தனித் தமிழக-ஈழ ஜனாதிபதி ஆகவேண்டும் என்று கண்டிக் கதிர்காமக் கந்தனை வேண்டிக் கொள்ளுங்கள்!

முடியலடாப்பா முருகா...

Sathiyanarayanan said...

முடியலடாப்பா இந்த பார்ப்பனின் தொல்லை

Anonymous said...

சரியான் சொன்னீங்கள் சத்தியநாராயணன், இந்த பார்பனர்கள் தொல்லை தாங்கல! இவர்கள் சொல்கிறார்கள் காஞ்சி சங்கராச்சாரியாரை பின்னால் போகவேண்டும் என்று. அந்த பெண்பித்தன் ஊத்த வாயன் பின்னால் யார் போவார்கள். தலைமைக்கு என்று ஒரு அருகதை இருக்கிறது. தமிழர் பண்பாடு தெரியுமா? அல்லது இலக்கியம் தெரியுமா? அல்லது வரலாறுதான் தெரியுமா? அல்லது தமிழர்களின் வீரம்தான் புரியுமா? கோழைகள் இப்படி வந்து பின்னோட்டம் மட்டும்தான் இடுவார்கள்.
அன்புடன் - பாண்டியன்.

Anonymous said...

He is the real hero in india

Anonymous said...

Soniya and manmohan singh is 'o'

Anonymous said...

Very nice article thank u. ..... Azad.