Dec 13, 2011

மோதல்களை தடுத்து நிறுத்துங்கள்! SDPI

புதுடெல்லி DEC14:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.

முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
சிந்திக்கவும்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள  SDPI  தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து  கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரி கூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு  நன்றி. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

12 comments:

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

******
80 களின் இறுதியில் ஹிந்துக்களுக்கு அநீதி!! ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து!! என்ற நூலில் ஹிந்து முன்னணி தலைவன் ராம. கோபாலய்யர் வெளியிட்டு உள்ள புளுகுகளுக்கு ஷஹீத் பழனி பாபா அவர்கள் வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பு.
*********


.

தலைத்தனையன் said...

மதம் கொண்ட மனிதனே!
வதம் கொண்டு வருவதால்

ஆரியனுக்கல்லாது
ஆருக்கடா ஆறுதல்

மலைசார் நாட்டனும்
தகைசால் தமிழ் நாட்டனும்

திராவிடத்தின் வித்தடா, இதை
திமிர் பார்பனர்க்கு ணர்த்தடா

Anonymous said...

padhivu nandrr

GOVINDARAJ,MADURAI. said...

நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு

Anonymous said...

hey naanum rowdithaan, ellaam paarthukunga naan jailukku poren, jailukku poren.............

Anonymous said...

hey naanum rowdithaan, ellaam paarthukunga naan jailukku poren, jailukku poren.....முட்டாபயல் நீ ஜெயிலுக்கு போ இல்ல ஊம்ம்ம்ம்.............போ ............நானும் ரவுடிதான் இது எப்படி இருக்கு

தமிழ் மாறன் said...

இங்கும் அங்கும் வேடம் போடாமல் நடுநிலையாக பேசும் SDPI கட்சியை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. NCHRO என்கிற மனித உரிமை அமைப்போடு சேர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி SDPI குரல் கொடுப்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே போல் SDPI கூடன் குளம் அணு மின்நிலையத்தை தொடர்ந்து உறுதியோடு எதிர்த்து வருவதும் பாராட்ட பட வேண்டிய விஷயம் ஆகும். புதிய தென்றல் புதிய செய்திகளை தமிழர்கள் அறியதருகிரீர்கள். நன்றி.

தமிழ் மாறன் said...

Blogger வணக்கம் தலைத்தனையன் உங்கள் கவிதை அருமையாக இருக்கு நன்று! நன்று!

PUTHIYATHENRAL said...

வாஞ்சூர் ஐயா பதிவு போட்டதும் முதல் கருத்தா சொல்லி இருக்கீங்கள் நன்றி!

PUTHIYATHENRAL said...

கவிதை நடையில் கருத்து சொல்லும் தலைதனையன் அவர்களுக்கு மிக்க நன்றி! நீங்கள் நல்லா கவிதையா எழுதி தூள் பண்ணுறீங்கள். முடிந்தால் சிந்திக்கவும் இணையத்திற்கும் எழுதுங்கள். நன்றி ஐயா!

PUTHIYATHENRAL said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி மதுரை கோவிந்த ராஜ் ஐயா! தொடர்ந்து வருகை தாருங்கள் உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மேலும் ஆர்வம் அளிக்கும். நன்றி.

Anonymous said...

தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும்.இது மட்டும் இல்லை முல்லை பெரியாறு அணையும் தமிழர்களுக்கு உரியதுதான் இதை எல்லாம் சீக்கிரம் கைப்பற்ற வேண்டும். நல்ல பதிவு நன்றி. முத்து குமரவேல்.