Feb 3, 2012

குடும்ப! ஆணவ! மதவாத அரசியலில் சிக்கித்தவிக்கும் தமிழகம்!

குடும்ப அரசியல்: திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினா, அழகிரியா என்ற விசயத்தில் பெரும் சர்ச்சை நடந்தது. அதனால் கருணாநிதி மிகவும் மனம் உடைந்து பேசினார்.

பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. என்று சொன்னார் தமிழ்  இன (ஈன) தலைவர் கருணாநிதி.


இவர் எப்படி? அண்ணாவிற்கு பின் கட்சியில் இருந்த மூத்த தலைவர்களை புறம்தள்ளி முன்னுக்கு வந்தார் என்பது யாவரும் அறிந்ததே. கட்சிக்காக மாடாய் உழைத்த எத்தனையோ உண்மையான தலைவர்கள் இருக்க மகன் அழகிரி, ஸ்டாலின், மகள் கனிமொழி, பேரன்  மாறன் என்று மொத்த குடும்பத்தையும் கொண்டு வந்தார்.

மஞ்சள் பையோடு அரசியலுக்கு வந்த கருணாநிதியின் குடும்பம் இப்போது ஆசியாவிலே பெரும் பணக்காரர்கள் வரிசையில் உயர்ந்து நிற்கிறது. இதுவெல்லாம் யார் பணம்? நிச்சயமாக உழைத்து சம்பாதித்தது இல்லை எல்லாமே மக்கள் பணம்.

ஆணவ அரசியல்: ஜெ தளுக்கி, குலுக்கி  உடலை காட்டி நடித்து பணம் சம்பாதித்து, எம்.ஜியாரை மயக்கி அரசியலுக்கு வந்தவர். இவர் பார்பனர் என்பதால் இயல்பான ஜாதி வெறி. நடிகை என்பதால் எல்லோரையும் தொட்டு நடிக்க வேண்டும் அதில் தீட்டு பார்க்க முடியாது.

அதனால் அரசியலுக்குள் வந்ததும் தனது ஆஸ்தான பார்பன குருக்கள் சொல்வதை கேட்டு சட்டமன்ற கட்டிடத்தை மாற்றினார். அமைச்சர்கள் எல்லோரையும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யவைத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் இங்கும் அங்கும் பந்தாடினார்.

தனது அரசியல் குருக்களாக கோமாளிகளான சோவையும், சுப்பிரமணிய சுவாமியையும் நியமித்தார். இப்போது தனது கூட்டணியில் உள்ள எதிர்கட்சி தலைவரையும், M.L.A களையும் தனக்கு அடங்கி போகச்சொல்லி ஆணவம் செய்கிறார். கேள்விகள் கேட்கத்தான் எதிர்கட்சி என்பதை மறந்து தனக்கு அடிமை சாசனம் எழுதச்சொல்கிறார்.

வெத்து வெட்டு விஜயகாந்து:  ஈழத்து இனஅழிப்பு, கூடங்குளம், தமிழக மீனவர் படுகொலை, எதிலும் வாய்திறக்காத எதிர்கட்சி தலைவர். பஞ்சாயத்து தேர்தலில் அம்மா கலட்டி விட்டதால் கடும் தோல்வியை சந்தித்தார். ஜெ  சொன்னமாதிரி இவர் ஆதிமுக உடன் கூட்டு சேர்ந்ததால்தான் இத்தனை சீட்டுக்களும், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தும் என்பது உண்மையே.

சினிமாவில் கைநீட்டி, நாக்கை கடித்து ரவுடி மாதிரி வசனம் பேசிய இவர் அதை அட்ச்சாரம் பிசகாமல் சட்டமன்றத்திலும் செய்து முடித்துள்ளார். இவரது சினமா வசனம் எல்லாம் அங்கே பலிக்கவில்லை. இவருக்கு ரவுடி மாதிரி பேசத்தானே தெரியும் ஆனால் திமுக, அதிமுகவில் இருப்பதில் பெரும்பான்மையினர்கள் ரவுடிகல்தானே. அதனால் இவரது பேச்சு அங்கே எடுபடவில்லை. 

காங்கிரஸ் கோமாளிகள்: இந்த கட்சியில் தொண்டர்களே கிடையாது என்கிற அளவுக்கு தலைவர்கள் நிறைந்த கட்சி. அதிமுகாவுக்கு அடுத்து அடிமைகள் நிறைந்த கட்சி என்று இதை சொல்லலாம். சோனியா எந்த திசையில் கையை காட்டினாலும் ஓடும் மாடுகள்தான் இவர்கள்.

இந்த மாடுகளோடு, மாட்டை வைத்து கட்சி நடத்தும் ஹிந்துத்துவா மாடுகளும் ஒன்றாய் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு சோனியா தெய்வம், திமுக.காரர்களுக்கு ஜெ தெய்வம். மற்றபடி இவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது.
*மண்ணின் மைந்தன்*

7 comments:

Anonymous said...

ஜெயலிலதா தனது ஆணவத்தால் அழியபோகிறார்...

Anonymous said...

சோவையும், சுப்பிரமணிய சுவாமி இவர்களை பற்றி எழுதி இவர்களை பெரிய ஆட்கள் ஆக்காதீர்கள். இவர்கள் எல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு.

.....துல்லுதுரை....

தமிழ் மாறன் said...

இந்த அரசியல் கோமாளிகளிடம் சிக்கி தமிழர்கள் தங்களது மொழி மற்றும் பாரம்பரியத்தை இழந்து வருகிறார்கள். இந்த கூத்தாடி தலைவர்களை நம்பி ஈழம் ஒரு பாரிய இன அழிப்புக்கு உள்ளானது. இந்த சுயநல தலைவர்கள் இன்னும் மக்களை எங்கே கொண்டு போயி நிறுத்த போகிறார்களோ.

அர அல said...

கேப்டன் ஒரு புஸ்வானம்

Anonymous said...

Nalla pathivu..... Valththukkal..... By: Raja

Anonymous said...

It's very nice article. Thank u.

""" manmathan"""

Seeni said...

Nalla karuththukkal
vaazhthukkal!