Feb 9, 2012

ஹலோ! நான் அயோத்தி ராமர் பேசுகிறேன்!

1) ரிங் ரிங் ..ஹலோ ... யாரு பேசுறது அத்வானியா? ஆமா நீங்க யாரு . நான்தான் ராமர் பேசுறேன். எந்த ராமரு! ன்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா?

உன் பத்திரிகை பேட்டி பார்த்தேன் "வாழ்நாளில் ராமர் கோவில் கட்டுவது தான் என்  இலட்சியம்"  என்ற வார்த்தையை கேட்டு  மெய்மறந்து விட்டேன். ஏன்பா அயோத்தியாவில் மட்டும் ராமர் கோவில் கட்டினா போதுமா?

நாடாளுமன்றத்தில் ஒரே சண்டையும், கூப்பாடுமா இருக்குது. அந்த கட்டிடம் நமக்கு தேவையா? முதலில் அதை  இடித்து விட்டு ராமர் கோவில் கட்டு. காங்கிரஸ்காரங்க நம்ம ஆளுதான் அவர்களிடம் பேசு ஒத்துகொள்வார்கள். BJPக்கு எல்லாம் கட்சி அலுவலகம் தேவையா?  அதையெல்லாம் உடைத்து விட்டு கோவில் கட்டுங்கள்.எந்த BJP அலுவுலகத்திலாவது  எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கியா? நீயெல்லாம் ஒரு பக்தனா! எல்லாம் அரசியல்தானா. சரி மனு தர்மம் இருக்கும் போது எதுக்குப்பா அம்பேத்கர்  எழுதிவைத்த சட்ட புத்தகமெல்லாம். உயர்நீதி, உச்சநீதி மன்றம் என்று சொல்லிக்கிட்டு  ஒரே பிரச்சனை. அதை இடித்துவிட்டு கோவிலை கட்டு.

சரிங்க சாமி இனி போன் பண்ணாதீங்கள் போனை ஒட்டு கேட்கிறார்கள் தெரியுமா?  இனி எதுவந்து சொல்றதா இருந்தாலும் கனவுல வந்து சொல்லுங்கள் சரியா!  எல்லாத்தையும் என்தலையிலே கட்டி விட்டுடாதீன்கள். மோடியிடம் கொஞ்சத்தை தள்ளிவிடுங்கள். 

2)  நான் ராமர் பேசுறேன் மோடியா? ஆமா! எந்த ராமரு!!  என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? சாரி சாமி கும்பிடுறேனுங்க!  இந்த நடிப்புக்கு எல்லாம் குறைச்சல் இல்ல.

இப்பத்தான் அத்வானியோட பேசினேன். போங்க சாமி அவனைபத்தி என்கிட்ட பேசாதீங்க,  நான் பிரதமரா வரலாமுன்னு பார்த்தா அவன் விடமாட்டேன்கிறான். ஒரே கட்சிக்குள்ள இருந்துகிட்டு சதி பண்றான்.

அவன் என்பெற சொல்லி கலவரம் பண்ணி தப்பிச்சிட்டான். அவன்மேல யாரும் கைவைகிறார்களா? நீதான் குஜராத் குள்ளேயே குப்பை கொட்டுற. நீ என்பெயரை சொல்லாம கலவரம் பண்ணி இப்போ போலிசு, கோர்ட்டு என்று மாட்டிகிட்டு முழிக்கிற. இனி எது செய்தாலும் என்பெயர சொல்லு.

இந்த கோர்ட்டு, சி.பி.ஐ. போலீஸ் ஸ்டேசன் எல்லாம் இருக்கிறதால் தானே உங்களை புடிச்சி வழக்கு போடுகிறார்கள். முதலில் அதையில்லாம் இடிச்சி தள்ளிவிட்டு கோவில் கட்டுங்கள்.  இப்படி எதையாவது ஒழுங்கா செய்தால்தான் உன்னை பிரதமர் ஆக்குவார்கள் புரிந்ததா அபிஷ்டு.

3) ஹலோ.. ஜெயலிலதாவா நான் அயோத்தி குழந்தை ராமர் பேசுறேன். இப்பத்தான் மோடியோட பேசினேன். நீ அவன் சொல்வதை கேட்டு ஆட்சி நடத்துகிறாய் சந்தோசம். அவனை போல் எல்லா கேஸ்களில் இருந்தும் தப்பிவிட்டாய். புதிய சட்ட மன்றத்தை வேண்டாம் என்று சொன்னாயே! அதை இடித்து  தமிழக பக்தர்கள் என்னை வழிபட  ராமர் கோவில் ஏன் கட்ட மறந்தாய்.

4) ஹலோ நான் ராமர் பேசுறேன் இந்து முன்னணி  ராமகோபால ஐயரா?  ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? சாமி கும்பிடுறேனுங்க! 

எனக்கு அயோத்தியாவில் கோவில் கட்ட போறேன்னு பொய் சொல்லிகிட்டா அலையுரே.  எதுக்குப்பா தமிழ் நாட்டில் இருந்து  அயோத்திக்கு போயி ராமர்கோவில் கட்ட கஷ்டப்படுறே. தமிழ்நாட்டில் அங்கங்கே கட்டி விடவேண்டியதுதானே. ராமர் பாலம்னு சொல்லி சேது சமுத்திரத்திட்டத்தை தடுக்கிறே. சரி எந்த கடல் கரையிலாவது  எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கியா?

கூடன்குளம் அணு மின்நிலையத்தை திறக்கணும் என்று மல்லுகட்டுற. அதனால் என்ன பிரோஜனம் உனக்கு. அதனால் ஏற்ப்படும் பாதிப்பால் கொஞ்சமான மக்களைத்தானே கொல்ல முடியும். அதனால் அங்கே ராமர் கோவில் கேட்டபோறேன் என்று சொல்லு அதைவைத்து கலவரம் நடத்தி நிறையபேரை கொல்லலாம் அதுதானே உன் ஆசை.

5)  ஹலோ நான் ராமர் பேசுறேன் இடையூரப்பாவா?  ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? நல்லா ஊர் சொத்தை கொள்ளை அடித்து முதல்வர் பதவியும் தொரந்திட்டே. திப்புசுல்தான் நாடகத்தை போடக்கூடாது என்று தடை செய்யச்சொல்லி கலவரம் செய்து பல உயிர்களை பறித்து எல்லோரும் மகாபாரதம் பார்க்கச்சொன்னோம். எல்லோரையும் மகாபாரதம் பார்க்க சொல்லிவிட்டு நாம் மட்டு காம சூத்திரா பார்கிறோமே.

6) ஹலோ நான் ராமர் பேசுறேன் பால்தாக்ரேயா? ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா?  நீ என்னப்பா என்னை மறந்துவிட்டு பிள்ளையாரை தூக்கி பிடிக்கிறே. பிள்ளையாரை தூக்கி போடு என்னை கையில் எடு அப்போதான் நீயும் முன்னுக்கு வரமுடியும். சிவாஜிக்கு கடலில் சிலைவைக்க பலகோடி செலவு செய்கிறாய். யார் அந்த சிவாஜி என்னை விட உயர்ந்தவனா?

7) ஹலோ தினமலர் பத்திரிக்கையா நான் ராமர் பேசுறேன். நல்லா நம்ம ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாருக்கு ஊதுகுழலா இருக்கீங்கள். தமிழ் நாட்டில் பத்திரிகை நடத்தி கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரா செயல்பட உங்கள் அளவுக்கு தைரியம் யாருக்கும் வராது. தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். என்ற உண்மை வெளியே வந்தபோது அந்த செய்தியை இருட்டிப்பு செய்தது சூப்பர். இந்தியா அளவுக்கு நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் தினமலர் பத்திரிகை அலுவுலகத்தை உடைத்து விட்டு ராமர் கோவில் கட்டுங்கள்.
*முரசு*

30 comments:

Anonymous said...

BHARAT MATHAA KEE JAAAAAAY

Anonymous said...

தமிழ் நாட்டில் பத்திரிகை நடத்தி கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரா செயல்பட உங்கள் அளவுக்கு தைரியம் யாருக்கும் வரும். எப்போதுமே தினமலர் தமிழர்களுக்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்க்கு சீக்கிரம் ஒரு முடிவு கெட்டவேண்டும்.

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் மோடியையும் ஒன்றும் புடுங்க முடியாது. தமிழ் தமிழர் என்று பேசும் எல்லோரும் சீக்கிரம் சிறைக்குள் போக போறே ஜாக்கிரதை.

Anonymous said...

ஈழத்திலே அழித்தோம் பார்தேதானே இன்னும் பத்தி வரல உனக்கு. கூடங்குளம் திறப்போம், ராமர் கோவில் கட்டுவோம் என்னடா புடுங்குவே.. தைரியம் இருந்த போன் நம்பர் சொல்லு. முட்டாள் பயலே.

கபிலன் said...

ஹிந்து சமயத்தவரை வெறுக்கும் பதிவு இது என்பது மட்டும் விளங்குகிறது. சரி பரவாயில்லை கட்டுரைக்கு வருவோம்.

காமெடியா நக்கல் பண்றதா நினைச்சு எழுதிருக்காங்க. ஒண்ணு மட்டும் சொல்றேன் சார்..நக்கல் பண்ற விஷயம் இப்பதிவருக்கு சுத்தமா வரல !
(அந்த விஷயத்துக்கு இவரு சரி பட மாட்டார் சார்..)

சரி..மேட்டர் எதாவது இருக்கான்னு பார்த்தா.....ஓண்ணுமே இல்லை ! வெறுப்பை உமிழும் விஷயமில்லாப் பதிவு !

Anonymous said...

Nalla pathivu.... Vaalthukkal.

Seeni said...

karpanai super!

raamar ippadi nere vanthu sonnaalum-
ivanga ketka maattaanga!

Anonymous said...

;;; ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் மோடியையும் ஒன்றும் புடுங்க முடியாது. தமிழ் தமிழர் என்று பேசும் எல்லோரும் சீக்கிரம் சிறைக்குள் போக போறே ஜாக்கிரதை.,,,RSS பார்ப்பன மோடி கும்பலுக்கு ஆண்மையிருந்தால் ராமர்கோவில் கட்டிப்பாருங்கள் நீ ஓராயிரம் கயவர்களை கொண்டு பாபர் மசூதியை இடித்தாய் ஆனால் எங்களுக்கு +++++++++ உன் கும்பலை புடுங்குவது சுலபம்தான் இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வரும்போது உங்களை எப்படி புடுங்குகின்றோம் என்று பாரு

Anonymous said...

BHARAT MATHAA KEE JAAAAAAY ,,,பாரத் மோடிக்கு அத்வானிக்கு ஆர் எஸ் எஸ் க்கு ராமகோபாலனுக்கு செருப்படி ...பாரத் செருப்புக்கு JAAAAAY

Anonymous said...

BHARAT MATHAA KEE JAAAAAAY ,,, செக்ஸ் படம் பார்க்கும் பிஜேபி க்கு செருப்படி ...பாரத் செருப்புக்கு JAAAAAY

Anonymous said...

BHARAT MATHAA KEE JAAAAAAY ,,, பாரத் தினமலர் க்கு செருப்படி ...பாரத் செருப்புக்கு JAAAAAY

Anonymous said...

கபிலன் said..ஹிந்து சமயத்தவரை வெறுக்கும் பதிவு இது என்பது மட்டும் விளங்குகிறது ,, ராமரை வழிபடுபவர்கள் மட்டும்தான் இந்துவா உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க

கபிலன் said...

"Anonymous said...
கபிலன் said..ஹிந்து சமயத்தவரை வெறுக்கும் பதிவு இது என்பது மட்டும் விளங்குகிறது ,, ராமரை வழிபடுபவர்கள் மட்டும்தான் இந்துவா உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க"

ராமரை வழிபடும் இந்துக்களும் இருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா : )

சோத்தான்கையில் உண்பதைத தான் பீச்சாங்கையில் கழுவுகிறீர்கள் என்பதை மறந்துடாதீங்க அனானி. இரு கைகளுக்கும் வேறு வித்தியாசமே கிடையாது.

முரசு said...

வாசகர்கள் ஒன்றை விளங்கி கொள்ளவேண்டும் .குறிப்பாக கபிலன் .ஹிந்து வெறியர்கள் என்பவர்கள் வேறு, ஹிந்துக்கள் என்பவர்கள் வேறு.ஹிந்துகளின் பெயரை சொல்லி
கலவவரம் undu பண்ணுவார்கள் இவர்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் ஒரும் சம்மந்தமும் கிடையாது.எந்த பாமர ஹிந்துவும் எந்த ஆத்மாவிற்கும் ஒரு போதும் பாவம் செய்ய மாட்டான்.
ஹிந்துக்கள் வேறு ஹிந்து வெறியர்கள் வேறு என்பதனை வேறு படுத்தவே இந்த பதிவு .இது சாதாரண ஹிந்துகளை வேதனை படுத்த அல்ல .
முரசு

முரசு said...

வாசகர்கள் ஒன்றை விளங்கி கொள்ளவேண்டும் .குறிப்பாக கபிலன் .ஹிந்து வெறியர்கள் என்பவர்கள் வேறு, ஹிந்துக்கள் என்பவர்கள் வேறு.ஹிந்துகளின் பெயரை சொல்லி
கலவவரம் undu பண்ணுவார்கள் இவர்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் ஒரும் சம்மந்தமும் கிடையாது.எந்த பாமர ஹிந்துவும் எந்த ஆத்மாவிற்கும் ஒரு போதும் பாவம் செய்ய மாட்டான்.
ஹிந்துக்கள் வேறு ஹிந்து வெறியர்கள் வேறு என்பதனை வேறு படுத்தவே இந்த பதிவு .இது சாதாரண ஹிந்துகளை வேதனை படுத்த அல்ல .
முரசு

துரைடேனியல் said...

மதத்தின் பெயரால் (எந்த மதமாயிருந்தாலும் சரி) அரசியல் செய்வது மிகத் தவறு.

தமிழ் மாறன் said...

இந்தியாவில் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை இப்படி எல்லா துறைகளிலும் 90 சதவீதத்திற்கும் மேல் பணியில் இருப்பவர்கள் ஹிந்துக்களே. அப்படி இருக்க கோர்டில் வழக்கு நடக்கும்போது அத்வானி இலட்சக்கணக்கில் மக்களை திரட்டி கொண்டு மசூதியை உடைத்தது சரியா.

இந்த வழக்கு என்ன பாகிஸ்தான் நீதிமன்றத்திலா நடக்கிறது. அவர்கள் நமக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் என்று சொல்ல. இந்த ராமர் கோவில் விவகாரத்தை வைத்து அத்வானிக்கு பாதுகாப்பு, (வி.பி. சிங்க் ஆட்சி) கவிழ்ப்பு மறுதேர்தல் இப்படி எத்தனை கோடி செலவுகள் நாட்டு மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை கொட்டி சிறுபான்மையினர்களின் உயிரை பறித்து கடைசியாக இவர் பாபர் மசூதியை இடித்தார்.

இதை அரசியல் என்று சொல்லாமல் என்ன வென்று சொல்வது. எத்துணை ரதயாத்திரை என்கிற றேத்த யாத்திரை. அவர் ஒரு நல்ல தலைவராக இருந்திருந்தால் கோர்ட் தீர்ப்பு வரும்வரை காத்திருந்திருக்க வேண்டும். இதுபோன்ற பயங்கரவாதிகள் ஹிந்துக்களில் இல்லை. வர்ணாசிரமம், ஹிந்துத்துவா என்பது வேறு ஹிந்து மதம் என்பது வேறு.

புனிதப்போராளி said...

ஏ௧இறைவனின் சாந்தியும் சமாதானமும் நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ...இந்து மக்களிடம் இருந்து [ மோடி ,அத்வானி ,ஆர் எஸ் எஸ் ,ராமகோபாலன் ,ஹிந்து வெறியர்கள் தினமலம் ] இவர்களை தனிமைப்படுத்தி பதிவிட்டதற்கு முரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்..,,, ராமரை வைத்து அப்பாவிகளை கொல்லும் கயவர்களை இந்துமக்கள் தகுந்த தண்டனை கொடுக்கணும் கம்பராமயாணத்தில் வால்மீகியில் ௬ரப்படும் நேபாள நாட்டில் பிறந்த ராமருக்கு ஏண்டா இந்திய அயோத்தியில் கோவில்கட்டனும் ஒருவேளை அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று இருந்தாலும் குறிப்பாக மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று யார் பார்த்தது ஒருவன் பிறந்த இடத்தில்தான் கோவில் கட்டனும் என்றால் இது மனித அறிவுக்குதகுந்ததா மடையர்கள்தான் இவர்கள் இன்று இந்திய மண்ணில் புத்தகோவில்கள் இல்லாமல் ஆக்கிவிட்டீர்கள் இதை யாரிடம் போய் சொல்லுவது அதுபோல் மசூதிகள் இல்லாமல் ஆக்கணும் அதுதான் இவர்களின் திட்டம் இதை ஏ௧ இறைவனின் துணையுடன் கருவறுப்போம் by ...புனிதப்போராளி

Anonymous said...

Hai Jihadi
How are you?Who told that adam built the kabbaa in mecca?By telling this u occupied that kaaba.The same technique if used by BJP u r crying .What is this?.First give proof that adam built the kaaba

ரமேஷ் வெங்கடபதி said...

மீண்டும் சொல்கிறேன்! இந்து மதத்தை எதிர்த்து, மாற்றுமதத்தினரின் பதிவுகளைப் போட்டு,தமிழர்களை ஒன்று சேர்க்க முடியாது! காவிக்கட்சிகளை எதிர்க்கிறோம் எனும் போர்வையில்,ம் இந்து மதத்தின் மேல் வெறுப்பை உமிழ்வது அறிவார்ந்ததல்ல!

இந்த வலைப்பக்கம் தமிழர் போர்வையில் மறைந்திருக்கும், மாற்றுமதக் கூட்டம் என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது!

Anonymous said...

ரமேஷ் வெங்கடபதி அவர்களே எப்படி கபிலனை மாற்றுமதக் கூட்டம்ன்னு சொல்லுரீங்கா ஆதராம் தர முடியுமா - ஜெய்ஹிந்த்

PUTHIYATHENRAL said...

//இந்த வலைப்பக்கம் தமிழர் போர்வையில் மறைந்திருக்கும், மாற்றுமதக் கூட்டம் என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது!//

வணக்கம் ரமேஷ் வேங்கடபதி அவர்களே நலமா! நீண்ட நாட்களுக்கு பிறகு பின்னோட்டம் இடுகிறீர்கள். வருகைக்கு நன்றி. என்ன ஐயா! நம்மகூட்டம் மாற்று மதத்து கூட்டம். இப்படியெல்லாம் பிரிச்சு பேசாதீங்க ஐயா!மாற்று மதத்து கூட்டம் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? மனிதர்களாக முதலில் ஐயா!

எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஓடும் ரெத்தம் சிகப்புத்தான் ஐயா! மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவனுக்கு ஏற்றப்படும் இரத்தம் தாழ்த்தப்படவனுடையதா? முஸ்லிம் உடையதா? கிறிஸ்தவன் உடையதா? என்று பார்ப்பதில்லை ஐயா! எங்கே இருந்து கண்டு பிடித்தீர்கள் இந்த வார்த்தைகளை மாற்றுமதக் கூட்டம்.

PUTHIYATHENRAL said...

//மீண்டும் சொல்கிறேன்! இந்து மதத்தை எதிர்த்து, மாற்றுமதத்தினரின் பதிவுகளைப் போட்டு,தமிழர்களை ஒன்று சேர்க்க முடியாது!//

வணக்கம் ரமேஷ் வேங்கடபதி ஐயா! இங்கு ஹிந்து மதத்தை பற்றியோ ஹிந்துக்களைபற்றியோ எதிர்த்து பதிவில் ஒருவிடயம் கூட இல்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் செய்து வரும் அநியாயங்களையே சுட்டி கட்டுகிறோம்.

ஐயா உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கும்பல் செய்த அநியாங்களை பற்றி எழுதினால் அங்கே எங்கே ஹிந்து மதம் வருகிறது. ஹிந்துமதம் என்பது வேறு ஹிந்துத்துவா என்பது வேறு நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

தமிழர்களுக்கு என்று தனி நாடு வேண்டும் என்கிற விடயம் வேறு. நாம் ஹிந்துத்துவாவை எதிர்ப்பது என்பது வேறு. ஹிந்துத்துவாவை மட்டும் எதிர்க்கவில்லை ஐயா இந்திய அரசு பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம். மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆதிக்க மற்றும் பணக்கார கார்பரேட் நிறுவனங்களுக்கும் எதிராகத்தான் எழுதுகிறோம்.

மற்றபடி எந்த மதத்தையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. நாங்கள் மதவாதிகளும் இல்லை. அந்த போதை எங்களுக்கு வரவும் இல்லை புரிந்து கொண்டால் சரி. உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. மீண்டும் வாருங்கள் உங்கள் மனதில் இருப்பதை சொல்லுங்கள்.

Anonymous said...

//Who told that adam built the kabbaa in mecca?By telling this u occupied that kaaba.The same technique if used by BJP u r crying .What is this?.First give proof that adam built the காபா.

கவ்பாவை கட்டியது யார் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அது நடந்த காலம் மன்னர்கள் ஆண்ட காலம் அதன் சட்ட திட்டங்கள் வேறு.

நாடு சுதந்திரம் பெற்று அதற்கென்று சட்ட திட்டங்கள் இருக்கிறது. அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் எதையும் செய்யவேண்டும். இப்போது நீங்கள இருக்கும் வீட்டை என்னுடையது என்று சொல்கிறேன் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை அடிப்படையில் சொல்கிறார்கள் கொடுத்து விடுவீர்களா?

ஒன்று இரண்டு வருடம் இல்லை 450 வருடங்கள் ஒரு மதத்தினர் வழிபட்ட இடத்தை அபகரிப்பது ஒரு பயங்கரவாத செயல். அதை திருப்பி கொடுத்து விடுவதே மனிதாபிமானம்.

PUTHIYATHENRAL said...

//இந்த வலைப்பக்கம் தமிழர் போர்வையில் மறைந்திருக்கும், மாற்று மதக் கூட்டம் //

வணக்கம் ரமேஷ் வேங்கடபதி அவர்களே, இதன் ஆசிரியர் குழுவில், தமிழர் சிந்தனையாளர்கள், கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ளவர்கள், மார்க்ஸ சிந்தனை கொண்ட தோழர்கள், ஹிந்து, மற்றும் முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள்.

சாதிக்கொடுமை, சாதிப்படுகொலை, மதக்கலவரம், பெண்களுக்கெதிரா கற்பழிப்பு, வன்முறை, வரதட்சணைக் கொலை உடன் கட்டையேற்றம் போன்ற சமூக ஒடுக்கு முறைகளானாலும், நரபலி, தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம் போலி சாமியார்கள் போன்ற மூட நம்பிக்கைகளானாலும், கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை, குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச்சாவு போன்ற வர்க்கச் சுரண்டல்களானாலும், மரண தண்டனை, துப்பாக்கிச் சூடு, காவல்நிலையக் கொலை, போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும் இவைகளை அனைத்தையும் எதிர்த்து குரல் எழுப்புவதே சிந்திக்கவும் குழுமம்.

கபிலன் said...

"சாதிக்கொடுமை, சாதிப்படுகொலை, மதக்கலவரம், பெண்களுக்கெதிரா கற்பழிப்பு, வன்முறை, வரதட்சணைக் ............அரசு ஒடுக்கு முறைகளானாலும் இவைகளை அனைத்தையும் எதிர்த்து குரல் எழுப்புவதே சிந்திக்கவும் குழுமம்."


எல்லாம் சரி தாங்க சார்.

"ஹலோ நான் தான் அயோத்தி ராமர் பேசுகிறேன்!" என்பதற்கு பதிலாக
"ஹலோ நான் தான் ............................. பேசுகிறேன!" என்று தலைப்பிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பற்றி எழுதுவீங்களா?

அப்பவும் இதே நியாயம் பேசுவீங்களா...அதாவது ஹிந்து வேறு ஹிந்துத்வா வேறு, நான் சாதாரண ஹிந்துக்களைச் சொல்லவில்லை என்று காரணம் சொல்ற மாதிரி....சொல்லுவீங்களா ?

வம்பிழுப்பதற்காக இதனை சொல்லவில்லை. தங்களின் கருத்துக்களை சுயபரிசோதனை செய்து கொள்ளத் தான் சுட்டிக்காட்டினேன்..


இங்கு அடித்தால் எதிர்ப்பே வராது என்ற நினைப்பில் தெரிந்து அடிக்கிறீர்கள் என்பது என் குற்றச்சாட்டு. இது போன்ற கட்டுரைகள் யாரையும் திருத்தாது என்பது ஒருபுறம் இருக்க...பலரை மதச் சார்புடையதாக மாற்றும் என்பது தங்களுக்கு தோன்றவில்லையா ?

ஹிந்து வெறியனா அல்லது ஹிந்துவை எதிர்ப்பவனா ? யார் கிட்ட நாங்க சேருவோம்னு நினைக்குறீங்க...?

PUTHIYATHENRAL said...

//"ஹலோ நான் தான் அயோத்தி ராமர் பேசுகிறேன்!" என்பதற்கு பதிலாக "ஹலோ நான் தான் .................பேசுகிறேன!" என்று தலைப்பிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பற்றி எழுதுவீங்களா?//

வணக்கம் கபிலன் நலமா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பற்றி தினமலரும், தினமணியும், இந்தியா டுடேயும் தினமும் எழுதி வருகிறார்கள் எனவே எழுதப்படாத திட்ட மிட்டு மறைக்கப்படும் செய்திகள் ஹிந்துத்துவாவை பற்றியது மட்டுமே. அதனால் அதை வெளிக்கொண்டு வருவது நம்மை போன்ற நாடு நிலையான ஒவ்வொருவரின் கடமை அதையே சிந்திக்கவும் குழுமம் செய்கிறது.

PUTHIYATHENRAL said...

//இங்கு அடித்தால் எதிர்ப்பே வராது என்ற நினைப்பில் தெரிந்து அடிக்கிறீர்கள் என்பது என் குற்றச்சாட்டு//

உங்களால் எதிர்ப்பு சொல்ல முடியாத செய்தி என்று நீங்களே ஒத்து கொள்கிறீர்கள். பின் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் புரியவில்லை.

PUTHIYATHENRAL said...

//இது போன்ற கட்டுரைகள் யாரையும் திருத்தாது என்பது ஒருபுறம் இருக்க//

ஹிந்துத்துவா பற்றி மக்களுக்கு அறியாத, பெரும்பான்மை பத்திரிக்கைகளால் மறைக்கப்படும் செய்திகளை நாங்கள் சொல்கிறோம். இதில் தவறு ஒன்றும் இல்லையே. இந்த கட்டுரைகளை படித்து யார் திருந்துவார்கள் அல்லது திருந்த மாட்டார்கள் என்பதை நீங்களும், நானும் முடிவு செய்ய முடியாது. இதை மக்கள் மன்றத்தில் கொண்டு வருவது மட்டுமே நமது நோக்கம்.

PUTHIYATHENRAL said...

//ஹிந்து வெறியனா அல்லது ஹிந்துவை எதிர்ப்பவனா ? யார் கிட்ட நாங்க சேருவோம்னு நினைக்குறீங்க...?//

ஒரு கருத்தை சொல்வதுதான் நமது வேலை அதை ஏற்று கொள்வது ஏற்று கொள்ளாததும் அவர் அவர் சிந்தனை திறனை பொறுத்தது. நாங்கள் யாரோடும் சேருங்கள் என்றும் சொல்ல வில்லை அதே நேரம் யாரோடும் சேரவேண்டாம் என்றும் சொல்லவில்லை. பெரும்பான்மை என்கிற காரணத்தால் திட்ட மிட்டு மறைக்கப்படுவதும் அதே நேரம் சிறுபான்மை என்பதால் சிறிய விடயங்களை ஊதி பெரிதாக்குவதும் நடக்கிறது என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.

ஈழத்திலே பெரும்பான்மை சிங்களவர்கள் அங்குள்ள சிறுபான்மை தமிழர்களை ஒடுக்கியதன் விளைவே அங்கு நடந்த தமிழ் ஈழ சுதந்திர போராட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் உண்டான இரத்த சொறிவை வரலாறு மறக்க வில்லை. அது ஒரு சிறிய நாடாக இருந்ததால் அதனால் அதை தாங்கி கொள்ள முடிந்தது. அதே உள்நாட்டு யூத்தம் இந்தியாவில் உண்டானால் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை வைத்து கொண்டு அதை சமாளிப்பது முடியாத காரியம், பஞ்சமும் பட்டினிக்கும் உள்ளக வேண்டியதுதான்.

நீதி, நியாயங்களை எப்போதும் கொல்ல முடியாது. யார் செய்தாலும் குற்றம் என்பது குற்றமே. அதனால் தான் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் சிவபெருமானை பார்த்து சொன்னார்.