Feb 18, 2012

கூடங்குளம் ஒரு சிங்கள அணு குண்டு!

FEB 19: ஈழத்தமிழர்களையும், இந்திய தமிழர்களையும் அழிக்கவல்ல அணு குண்டே கூடங்குளம் அணு மின்நிலயம். சிங்கள பேரினவாதமும், இந்திய ஹிந்தி அரசும் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கப்பட்ட  ஒரு இனமாக ஆக்கி எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றன. 

இந்த இரண்டு பேரினவாத அரக்கர்களின் இரத்த சாட்சியே ஈழத்து இன அழிப்பும், தமிழக மீனவர் படுகொலையும், முல்லை பெரியாரும், கூடங்குளம் அணு மின்னலயமும் ஆகும். ஏன் தமிழகத்து மின்சாரத்தை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க வேண்டும்.சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெங்களூரை சேர்ந்த அகமது என்பவர், சூரிய சக்தியால் இயங்கும் சிறு காரில், தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தெரிவிக்கும் போது சூரிய சக்தி மூலம் எடுக்கப்படும் ஆற்றலை கொண்டு கார் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்த முடியும். அதனால் இயற்க்கைக்கு பேராபத்தை உண்டாக்கும் அழிவு சக்திகள் தேவையில்லை என்று தெரிவித்தார் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

கூடங்குளம் அணு மின் நிலயத்திற்கு ஒரு கேடு உண்டானால் அதனால் பாதிக்கப்படப்போவது நாம் மட்டும் இல்லை ஈழத்து சொந்தங்கலுமே. இந்திய மற்றும் இலங்கை அரசு பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தை மீண்டும் ஒரு அழிவுக்குள் தள்ளும் வேலையே இது. அது மட்டும் அல்லாமல்  கடலை நம்பி வாழும் இலட்சக்கணக்கான் தமிழக மீனவர்களின் வாழ்வாதரங்களை அழிக்கும் ஒரு தீய சக்தியே கூடங்குளம் அணு மின்நிலையம்.

இதற்க்கான ஆதாரங்களை தோழர் முத்து கிருஷ்ணன் அவர்களின் விடியோவையும், சிங்கள அணு குண்டு என்கிற விடியோவையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த விடியோக்கள் சிந்திக்கவும் இணையத்தின் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை மறக்க வேண்டாம். தமிழர்களே ஒன்று பட்டு ஒரே குரலாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்போம்.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

18 comments:

Anonymous said...

என்ன சார் தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் போது நீங்க கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்கிறீரே இது சரியா?

சுந்தர்.

Anonymous said...

1) கூடங்குளத்தில் அமைத்துக் கொண்டிருக்கிற அணுமின் நிலையத்தை முதலில் கேரளாவில்தான் நிறுவத் திட்டமிட்டிருந்தது இந்திய அரசு. ஆனால் கேரளாவில் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி பேராயக் (காங்கிரசு) கட்சி உள்ளிட்டு அனைவரும் போராடி எதிர்த்தனர். எனவே அதை அங்கு நிறுவாமல், தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவ முடிவெடுத்தது இந்திய அரசு.
......இதுல இருந்து என்ன தெரியுது தமிழன் இளிச்ச வாயன் என்று தெரியுதா இல்லையா?.......
ஆசாத் : நெல்லை

Anonymous said...

2) கேரளாவில் எதிர்த்த மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும், பேராயக் (காங்கிரசு) கட்சியும் தமிழ்நாட்டில் வாய்மூடிகளாகி விட்டன. ஊமைத் தனமாய்க் கிடக்கிறது தமிழகம். ஏன் இந்த நிலை?

......இதுல இருந்து திரியுது ஓட்டு பொருக்கி கட்சிகளை நம்பக்கூடாது என்று ........

தமிழக மக்கள் ஒருங்கிணைந்து இந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விசயங்களை தடுக்க முடியும்.

ஆசாத் :நெல்லை.

Anonymous said...

3) இதுவரை உலகில் 3 பெரிய அணு உலை விபத்துக்கள் நடந்துள்ளன.

1) 1969 இல் சுவிட்சர்லாந்தில் லுசன்சு அணுஉலை வெடித்தது. இதனால் அந்த நாடு மிகப் பெரும் அழிவுகளை எதிர் கொண்டது.

2) 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா தீவில் உள்ள அணு உலை வெடித்தது. மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்கா மக்கள் அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர்.

3) 1986ல் ரஷ்யாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்தது. இதில் ரஷ்யாவின் மக்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. காரணம் காற்றில் கதிரியக்கம் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்டனர். செர்னோபிலைச் சுற்றி ஐம்பது மைல் வட்டத்திற்குள் உள்ள பகுதிகள் சுடுகாடாக மாறிப் போயின.

இன்னும் பல்லாயிரம் மக்களுக்குக் இரத்த புற்று நோய் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும் என்று பல ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் பாதிப்பு இருக்குமாம்.

இந்த நிகழ்வுக்கு பின் ரஷ்யாவில் அணு உலைகள் நிறுவுவதை அந்த அரசே நிறுத்தியுள்ளது. ஆனால் அதே ரஷ்யாவுடன் தமிழகத்தில் கூடங்குளத்தில் அணு உலைகளை அமைக்கிறது ரஷ்யா அரசு.

இதற்கு 20,000 கோடி ரூபாய் கடனாகவும், அதற்கு 17,000 கோடி வட்டியாகவும் ஆக மொத்தம் 37000 கோடி ரஷ்யாவிற்கு செலுத்தியாக வேண்டும். இந்திய அரசு. அதுவும் அவை பணத்திற்கு மாற்றுப் பொருளாக சர்க்கரை, கோதுமை, பழங்கள், பூக்கள் இவற்றைத்தான் கொண்டு செல்கின்றனர்.

ஆசாத்: நெல்லை

Anonymous said...

4) அமெரிக்காவிற்கு அருகில் அமெரிக்காவிற்குச் சொந்தமானதீவில் அணு உலைகளை உருவாக்கியது அமெரிக்க அரசு. அந்த உலையிலும் விபத்து ஏற்பட்டது. இதன் கதிரியக்கத்தைத் தடுக்க அமெரிக்க அரசால் முடியவில்லை. 7 ஆண்டுகளாக 102 கோடி டாலர்கள் செலவு செய்தது. அனுவுலையை மூட பயன்படுத்தப்பட்ட கெட்டியான கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டு மூடப்பட்டன. இருந்தாலும் கெட்டிப்படுத் தப்பட்ட கான்கிரீட் கலவையை மீறி கதிரியக்கம் பரவுகிறது என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

வல்லரசுக்கே இந்த நிலைமை என்றால்? போபால் விசவாய்வு கசிவில் அதன் நிறுவனர் அமெரிக்காவின் குடிமகன் குற்றவாளி அன்ருசனை தப்பவிட்ட இந்தியாவுக்கு என்ன நிலைமையாகும்.

போபால் மக்களுக்கே இன்னும் நிவாரணம் வழங்க முடியவில்லை. இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.

ஆசாத்: நெல்லை

Anonymous said...

5) நியூயார்க் நகருக்கு சற்று தொலைவில் லாங்ஜ லாண்டு தீவில் வேறு ஒரு அணுமின் உலையை அமெரிக்கா அமைத்தது. கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் அந்த உலை பற்றி (அபாயம்) நியூயார்க் நகர மக்களுக்குத் தெரிந்தது. நியூயார்க் நகரமே நெருப்புக் கோளமாக எழுந்தது. மக்கள் கடும் போராட்டங்கள் நடத்தினர். இப்போது அந்த அணு உலையை அப்படியே கிடப்பில் போட்டது அமெரிக்கா.

அமெரிக்காவின் மேற்கு எல்லைப் பகுதி பாலைவனப் பகுதியாகும். திவாடா என்ற அந்தப் பகுதியில் அணுக் கழிவுகளை அங்கே ஆழக் குழி தோண்டிப் புதைக்க அமெரிக்க அரசு முயன்றது. பாலைவனப் பகுதி மக்கள் எழுச்சியால் போராட்டங்களைத் தொடங்கினர். அதன்பின் தங்கள் மண்ணில் அணு உலை அமைப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாகி விட்டது.

அணுக் கழிவுகள் கக்கும் கதிர் இயக்கம் பத்தாயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று அணுவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்வதாகக் கூறி இங்கு வளரும் தலைமுறைக்குத் தீ வைத்து எரிக்கத் திட்டமிடுகின்றன. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசு அதன் ஆட்சியாளர்களின் கொள்ளைக்காக மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அவர்கள் வாழும் பகுதியிலேயே அணு உலையை நிறுவுகின்றது.

அணு உலை அமைத்து மின்சாரம் உருவாக்கம் செய்யும் திட்டங்களுக்குப் பல நாடுகள் விடை கொடுத்து வருகின்றன. அணு உலைகளே வேண்டாம் என்று அமெரிக்காவே பெருமூச்சு விடுகிறது. ஆனால் அணு உலை என்னும் கொள்ளிக் கட்டையை இந்தியா வின் தலையில் செருகிட திட்டமிடுகின்றன உலக நாடுகள்.

ஆசாத் நெல்லை.

Anonymous said...

என்னசார் புது அணு குண்டை போடுறீர்...

Seeni said...

mmm...
nalla pakirvu!

PUTHIYATHENRAL said...

சீனி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி........

PUTHIYATHENRAL said...

தோழர் ஆசாத் அவர்களே கூடங்குளம் அணு உலை குறித்து ஒரு நீளமான கருத்துக்களை கொடுத்து உண்மைக்கு சான்று பகர்ந்திருகீன்கள்.... உண்மைகள் இப்படி இருக்க ஒரு கூட்டம் பொய்களை சொல்லி திரிகிறதே என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கு.

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ,

தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

உங்கள் கருத்துகளை பார்த்தால் எனக்கு அழவா அல்லது சிரிக்கவா என்பது தெரியவில்லை . கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்லுவது தான் சரி சரி என்று நீங்கள் சத்தம் போட்டு கொண்டு இருப்பதால் உண்மையை பொய்யாய் மாற்ற முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் .

உங்கள் வாதம் சரியானது எனில் , எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்து இருக்கலாமே .... ஏன் உங்களால் பதில் கொடுக்கமுடியவில்லை ? உங்களால் முடியவும் செய்யாது . ஏன் எனில் உங்களின் போலி முகமூடிகளை தோலுரிக்கும் கேள்விகள் அவை .

எனது போன இடுகையில் நீங்கள் சொன்ன பொய்யான தகவலை நான் ஆதாரத்துடன் மறுத்து இருந்தேன் . நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லை . மிகுந்த ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட எனது பதிவுகளுக்கு நீங்கள் மதச்சாயம் பூச நினைக்கிறீர்கள் . இது உங்களின் அறியாமையா ..? அல்லது இயலாமையா என்பதும் எனக்கு விளங்கவில்லை .

மதச்சாயம் பூசி மக்களை ஏமாற்றும் சில கூட்டங்களின் முகமூடிகள் சீக்கிரம் மக்களால் கிழிக்கப்படும் . அந்த கூட்டத்தில் நீங்கள் இருக்ககூடாது என்பது தான் எனது ஆசை .

நன்றி

PUTHIYATHENRAL said...

இருதயம் அவர்களுக்கு பதில் (1).

விஞ்சானிகள் சொல்கிறார்கள் அணு உலை ஆபத்தானது என்று. உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றது. உங்கள் அபுல் கலாம் என்கிற அரசு கொடுக்கு அதை ஆபத்தில்லை என்று சொன்னால் அது உண்மையாகி விடுமா? என்ன? நீங்கள் பெரிய ஆதாரத்தை சமர்பித்தது விட்டீர்கள். ஜப்பானில் மீன் பிடிக்கிறார்கள் என்று ஒரு படத்தை போட்டு ஜப்பானில் மீன் வளம் இருக்கு என்று சொல்லி இருக்கீங்கள்.

நீங்கள் பேசுவதுதான் சிறுபிள்ளை தனமாக இருக்கு. அணுவின் கழிவு அழிந்து போக இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும் என்று விஞ்சானிகள் சொல்கிறார்கள். சாதாரண தொழில் சாலைகளை இருந்து வெளியேறும் கழிவால் ஏற்ப்படும் நிலத்தடி நீர் மாற்றங்கள், மற்றும் சுகாதார கேடுகள் ஆகியவற்றையே சமாளிக்க முடியாமல் சாயப்பட்டறை போன்ற சிறு தொழில் செய்யும் மக்ககளின் வயிற்றில் அடித்து அதை மூட சொல்கிறார்கள். அணு உலை உங்களுக்கு ஆபத்து இல்லையோ?

சரி போபால் விஷவாய்வு கசிவுக்கு இதுவரை நிவாரணம் கொடுக்க முடியவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது அந்த மக்கள் துன்பத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இன்னும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன. அணுவின் மூல கூரான மஞ்சள் கேக் வெட்டி எடுக்கப்படும் ஜாதுகோடா பகுதி மக்களின் அவலம் உலகம் முழுவதும் நாறுகிறது. என்ன சார் பெரிசா கேள்வி கேட்டு விட்டீர்கள், பதிவு எழுதி விட்டீர்கள் உங்களால் எதற்கும் தீர்வு சொல்ல முடியாது. தங்க ஊசி என்று நீங்கள் சொல்வதால் கண்ணில் குத்தி கொள்ள முடியாது.

ஏன்? கேரளா அரசும், மற்றைய மாநில அரசுகளும் அணு உலையை எதிர்கின்றன. கேரளாவிற்கு மின்சாரம் தேவை இல்லையா? தமிழ் நாட்டு மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானதாக உள்ளதே. அதை ஏன் கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். கேரளத்தில் ஏன்? ஒரு அணு உலை அமைக்க கூடாது. கேரளத்தில் ஒரு அணு உலை கூட இல்லையே தமிழ் நாட்டில் அணு உலையை கட்டி ஏன்? கேரளத்திற்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்.

PUTHIYATHENRAL said...

இருதயம் அவர்களுக்கு பதில் (2).

ஏன் இத்தனை பேசும் நீங்கள்! அணு உலையை கட்டினால் தமிழகம் முன்னேறி விடும் என்று பேசும் பெரிய சமுதாய சிந்தனை கொண்ட தாங்கள் ஏன் சேது சமுத்திர திட்டம் குறித்து வாய் திறக்க வில்லையே. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவினர் கேட்க்கும் கேள்விகளுக்கு இதுவரை ஒழுங்கான பதில் கொடுக்க மத்திய குழுவால் முடியவில்லை. நீங்கள் உப்பு சப்பு இல்லாத காரணத்தை வைத்து பதிவு எழுதி கொண்டு ஒரு மிக பெரிய மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்துகிறீர்கள். தமிழத்தில் உள்ள அறிவு ஜீவிகளாலும் இது எதிர்க்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

நான் அதில் ஹிந்துத்துவா பற்றி கேட்ட கேள்விகள் நியாயமானதா இல்லையா? தமிழகத்தின் நலனின் மீது அக்கறை உள்ள ஹிந்து முன்னணி ராம கோபால ஐயர் இதே அணு உலையை காஞ்சி சங்கர மடத்துக்கு அருகிலேயோ அல்லது வேறு ஏதாவது புனித தளங்களுக்கு அருகிலேயோ நிறுவப்பட்டால் ஒத்து கொள்வாரா? இதில் மக்கள் பிரச்னையை வைத்து ஹிந்து முன்னணி போது நலத்தோடு வரவில்லை. அவர்கள் வந்ததன் நோக்கம் அந்த பகுதிகளில் வாழ்வதில் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதே அப்பட்டமான உண்மை.

உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்று போயி விடவில்லை. ஒரு பதிவை பார்த்ததும் அதற்க்கு பதில் எழுதுவதோடு சரி. அதற்க்கு அவர்கள் என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்று எல்லா நேரமும் பின்தொடர்வது கடினமே. அதனால் உங்களுக்கு இங்கே எங்களது ஈமெயில் முகவரி கொடுக்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் இட்ட கருத்து பதில் எழுதலாம். உடனே உங்களுக்கு மறுப்பு பதில் அனுப்பப்படும் அல்லது உங்கள் இணையத்திலேயே வந்து மறுப்பு பதியப்படும்.

தோழர் முத்து கிருஷ்ணன் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தவர் அணு உலைகளின் ஆபத்தை குறித்து ஒரு சிறந்த காணொளியை வெளியிட்டுள்ளார். உங்களுக்கு விருப்பம் என்று சொன்னால் உங்களது கருத்துக்களுக்கு அவரை கொண்டே பதில் சொல்ல சொல்கிறோம், அல்லது கூடங்குளம் அணு எதிர்ப்பு குழுவுடன் வேண்டுமானால் பேசி உங்களது சந்தேங்களை போக்க வழி சொல்கிறோம். அல்லது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது சந்தேங்களை தெரிவியுங்கள், அல்லது ஈமெயில் மூலமாகவும் தெரிவித்து தீர்த்து கொள்ளுங்கள்.

சும்மா பதிவு எழுதுகிறோம் என்று சொல்லி வேண்டும் என்றே ஒரு அநியாயத்திற்கு துணை போக முடியாது. கண்ணு முன்னாள் ஒரு பெரிய குழி இருக்கு என்று தெரிந்தும் அதில் போயி விழுங்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கு. நாங்களும் உலக அணு உலை எதிர்ப்பு மக்களும் விஞ்சனிகளும் தெளிவாகத்தான் இருக்கிறோம் என்பதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி கொள்ள ஆசைபடுகிறோம்.

கூடங்குளம் அணு உலை எதிப்பு குழுவை சேர்ந்தவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய நிபுணர் குழுவே திணறுகிறது நீங்கள் ஒரு ஆள்தான் அதிசயமா அணு உலையை ஆதரித்து எழுதுகிறீர்கள். என்ன பெரிய கேள்விகள் கேட்டு விட்டீர்கள். முதலில் விடியோவை பார்த்து விட்டு அதற்க்கு வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அல்லது கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் கேளுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதாரங்களை சமர்பிக்கிறோம்.

அணு உலை என்கிற மக்களை கொல்லும் அரக்கனை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மொத்த மனித குலத்தின் எதிரியே.....

அர அல said...

தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் போது நீங்க கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்கிறீரே இது சரியா?

Anonymous said...

சிந்தித்து பார்க்கும் போது கூடங்குளம் அணு மின் நிலையம் தேவை இல்லை என்றே படுகிறது.முன்பு உள்ள கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

அர அல said...

சிந்தித்து பார்க்கும் போது கூடங்குளம் அணு மின் நிலையம் தேவை இல்லை என்றே படுகிறது.முன்பு உள்ள கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தமிழக மக்கள் அனைவர்களின்மிதும் உண்டாவட்டுமாக...,,, கூடங்குளம் அணுமின்நிலையத்தினால் தமிழகம் மற்றும் கேரளம்,,கர்நாடகம் ஆந்திரம் ஒளிமயமாகும் ஆனால் வருங்கால தமிழனின் வாழ்வு இழிநிலை ஆகும் இதை உணர்ந்த தமிழன் யாரும் கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்படனும் என்று சொல்லமாட்டான் விஞ்சான கண்டுபிடிப்புகள் விண்ணைமுட்டும் அளவுக்கு வந்து விட்ட இந்தக்காலத்தில் மின்சாரம் தயாரிக்க பல வழிகள் உள்ளன தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் தமிழகத்தில் தற்ப்போது தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அண்டை மாநிலத்துக்கு கொடுப்பதை நிறுத்தினால் தட்டுபாடு இல்லா மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும்..,,,, தமிழனின் நிலப்பரப்பை நச்சு[நில]பரப்பாக மாற்ற வடஇந்தியர்கள் போட்ட திட்டம்தான் அணுமின்நிலையம்,,இதுதான் கத்தியின்றி ரத்தம் இன்றி தமிழனை ஒளிமயத்துடன் இருக்க வைத்து ஒழித்துக்கட்டுவது என்று சொல்லுவது விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே ....இப்படிக்கு..,புனிதப்போராளி

Anonymous said...

கூடங்குளம் தமிழனின் சாபம்...மக்கள் சக்தி அணு சக்தியை வெல்லும் என்பதை இந்த போராட்டம் உலகுக்கு உணர்த்தும்...