Mar 6, 2012

மாவேஸ்ட் தோழர்களை வரவேற்கும் தமிழகம்!

March 07: இந்தியா என்கிற வல்லாதிக்க அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

ஈழத்தமிழர் விசயத்திலே ஆகட்டும், தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்திலே ஆகட்டும், முல்லை பெரியாறு விசயத்திலே ஆகட்டும், காவரி நதிநீர் பிரச்சனையிலே ஆகட்டும், தொடர்ந்து தமிழர்கள் இந்திய வல்லாதிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈழத்தமிழர் விவகாரத்தை உலகிலேயே பேச அதிக உரிமை படைத்த ஒரு நாடு இந்தியா மட்டும்தான். அப்படி இருந்தும் அதை பேசாமல் சிங்கள பேரினவாதத்திற்கு துணை புரிந்து ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை நடத்த காரணமாக அமைந்தது இந்தியா. தனது நாட்டில் உள்ள ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தது.

இப்பொழுது கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க போராட்ட குழுவை சார்ந்த அப்பாவி ஏழை, உழைக்கும் மக்களின் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டு அவர்களை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து மார்ச் 15  தேதி  "கூடங்குளம் சலோ " என்ற பெயரில் மனித உரிமை போராளிகள் ஒரு மாபெரும் பேரணியை ஏற்ப்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணியை  மனித உரிமை போராளி அருந்ததி ராய், பி.சுந்தரம், ஹர்ஷ் மாந்தர், அருணா ராய், ராமச்சந்திர குகா போன்றோர் ஏற்ப்பாடு செய்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது என்று சொன்ன பொறுப்பற்ற பிரதமர் மன்மோகன் சிங்க்குக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நிலைமைகள் இவ்வாறு இருக்க தமிழக அரசின் உதவியோடு கூடங்குளம் அணு மின் நிலயத்தை திறக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்ட குழுவை சார்ந்தவர்கள் மீதும், அதில் பங்கு பெறுபவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகள் பதிவாக்க காவல்துறை என்கிற அரசு ஆதிக்க இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

காந்திய வழியில் நடந்து வரும் போராட்டம் அரசு பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட போகும் நேரம் நெருங்கி விட்டது. இனி சத்தீஸ்கர் பழங்குடி மக்களை போல் ஒரு போராட்டத்தை மேற்கொள்வதை தவிர கூடங்குளம் மக்களுக்கு வேறு வழியில்லை. மேலும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை சாத்திய வழிகளில் பெறமுடியும் என்கிற எண்ண ஓட்டத்தில் மாற்று கருத்துருவாக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் மாவேஸ்ட் தோழர்களை அன்போடு வரவேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எதிரிக்கு புரியும் மொழியில் சொன்னால்தான் விளங்கும் என்றால் அதை செய்ய இனி தமிழர்கள் தயாராக உள்ளார்கள். போராடும் மக்களின் தோழர்களே! மாவோஸ்ட் நண்பர்களே! வாருங்கள் தமிழகத்தை நோக்கி. உங்களை வருக வருக என்று வரவேற்ப்பதில் தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
* புகழேந்தி *

10 comments:

Anonymous said...

வணக்கம் தோழரே... தமிழகத்தில் மாவோ நண்பர்கள் தங்கள் செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் கூட்டம் அடங்கும். இல்லையேல் இவர்கள கூடங்குளம் அணு மின் நிலயத்தை திறந்து விடுவார்கள். சரியான நேரத்தில் சரியான பதிவு. நன்றி. அன்புடன் ராஜா.

Anonymous said...

இந்தியாவை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பதிவுகள் வருகிறது. உங்களை மாதிரி லூசுகளால் அது முடியாது.

Anonymous said...

இந்தியாவை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பதிவுகள் வருகிறது. உங்களை மாதிரி லூசுகளால் அது முடியாது.

Anonymous said...

தமிழகம் நல்லா இருப்பது பிடிக்கலையா?????????????????????

ரமேஷ் வெங்கடபதி said...

வணக்கம் நண்பர்களே!

சேவின் சகா, ஃபிடல் கேஸ்ட்ரோ மாபெரும் போராளி! அவரின் ஆளுமையில் இருக்கும் க்யூபா, ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்திருக்கிறதே! அது குறித்து நம் நிலைப்பாடு என்ன?

Anonymous said...

* புகழேந்தி* ராஜா.லூசுகள் olika தமிழகம் நல்லா இருப்பது பிடிக்கலையா

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, மார்ச் 2- மகாராஷ் டிரா மாநிலம் மாலேகானில் 2008ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என் பவரை தேசிய புல னாய்வு நிறு வனம் கைது செய்தது. இவருக்கு இந்து அமைப்புகளுடன் தொ டர்பு இருப்பது தெரிந்தது. மேலும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உட்பட சில வழக்குகளிலும் இந்து அமைப் பை சேர்ந்தவர்கள் கைது செய் யப்பட்டனர்.
நேற்று முன்தினம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி யளித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 2008ஆம் ஆண்டு நவம்பரில் மும்பையில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே, இறப்பதற்கு சில நாட்கள் முன் என்னை சந்தித்தார். குண்டு வெடிப்பு வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சிக்க வைக்குமாறு தனக்கு நெருக்கடி வருவதாக தெரிவித்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான புரோ கித்தின் ஜாமீன் மனு உச்ச நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய புலனாய்வு நிறு வனம் சார்பில் ஆஜ ரான வழக் கறிஞர், மோகன் பகவத் தின் பேட்டி குறித்தும் இது விசார ணையை பாதிக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ஆர்.எஸ். எஸ். தலைவரின் கருத்து தேவையற்றது. எப்படி இது போன்ற கருத்துகளை கூற முடி யும்? என்றனர்

PUTHIYATHENRAL said...

வணக்கம் ரமேஷ் வேங்கடாபதி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புகழேந்தி எழுதிய பதிவில் தவறிருப்பதாக எமக்கு தெரியவில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரன் வியாபாரம் செய்யவந்தேன் பேர்வழி என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து இந்திய வளங்களை சுரண்டி லண்டனுக்கு கொண்டு போனான் என்று நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்பொழுது எல்லாம் ஒரு நாட்டின் மேல் படையெடுத்து அதன் மூலம் வளங்களை சுரண்ட வேண்டிய தேவையில்லை. அதற்க்கு பதிலாக அந்த நாட்டில் இருக்கும் அரசுக்கு சில ரொட்டி துண்டுகளை தூக்கி போட்டு விட்டு அதன் மூலம் அதை செய்யமுடியும் என்பதன் அடையாளமே சத்தீஸ்கர் காடுகளில் உள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு அங்கு இருக்கும் கனிம வளங்களை சூறையாட நினைப்பது.

இதுபோல்தான் வால்மார்ட் முதல் மெக்டோனால், அணு உலைகள் வரை இது ஒரு நவீன கொள்ளை. இதனால் உழைக்கும் மக்களின் அடிப்படை தேவைகள் எந்த விதத்திலும் உயராது. மாறாக நாட்டின் பொருளாதாரம், மற்றும் வளங்கள், உழைப்பு இவையெல்லாம் அந்நிய கார்பரேட் முதலாளிகளால் உறிஞ்சப்படுகிறது.

இது எல்லாம் வெளிப்படையாக தெரிந்த உண்மைகள். அப்படி இருந்தும் உங்கள் கண்களை மறைப்பது என்ன? தேசபக்தி............. மக்கள் நலன்களுக்கு எதிராக செய்யப்படும் அழிச்சாட்டியங்களை, வன்முறைகளை, அரசு பயங்கரவாதங்களை பற்றி பேசினால் அது..... தேசதுரோகம்.... நாட்டை துண்டாடுவது,..... என்று ஒரு முத்திரையை குத்தும் அரசு இயந்திரங்களின், அரசு விட்டெரியும், பன்னாட்டு முதலாளிகள் விட்டெரியும் எலும்புத்துண்டுகளை கவ்விபிடிக்கும் பத்திரிக்கைகளின் குரலைத்தான் நீங்களும், அனானி கருத்த்திட்டவர்களும் ஒலிக்கிண்றீர்கள்.

இதை நீங்கள் தெரிந்து செய்கிரீகளா? அல்லது அறியாமையின் வெளிப்பாடா புரியவில்லை. உங்களைபோன்றோரை சொல்லி குற்றமில்லை. ஏனென்றால் அதெயெல்லாம் சிந்திக்கும் உங்கள் அறிவைதான்.... மதவாதமும்.... தேசபக்தி என்கிற ஒரு வேற்று வேதாந்தம் மறைத்திருக்கிறதே.

எங்களால் எழுதத்தான் முடியும்.... தூங்குகிற மக்களை எழுப்பி விடலாம் ஆனால் தூக்குவது போல் நடிக்கும் சில மக்களை என்ன செய்ய முடியும். அதில் நீங்கள் எந்த ரகத்தை சார்ந்தவர் என்பதை நீங்களேதான் முடிவு செய்ய வேண்டும். இந்திய மிடில் கிளாஸ் மக்களின் பிரச்சனயே இதுதான் அவர்களில் பெரும்பான்மையினர் ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து கொள்வதில்லை.

அவர்கள் அறிந்தோ அறியாமலோ செல்வந்தர்களின் குரலாக ஒலிக்கின்றனர். உண்மையில் தேச நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எல்லாம் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிப்பீர்கள். உங்களின் குருட்டு தேசபக்தி என்கிற ஒரு பொய்மைக்கு பலி ஆடுகள் ஏழை எளிய மக்களே.

சத்தீஸ்கர் பழங்குடிகளின் தேவை என்னவோ அதே தேவைத்தான் கூடங்குளம் மக்களின் தேவையும் கூட. அவர்களை வாழ விடுங்கள் என்பதே நமது கோரிக்கை. மக்கள் விருப்பங்களுக்கு எதிராக, அவர்களின் எதிர்கால நலன்களுக்கு எதிராக, எதையும் அவர்கள் திணிக்காதீர்கள்.

கூடங்குளம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். இதுவே நமது தாழ்மையான் வேண்டுகோள். இந்த கட்டுரையில் எந்த பிரிவினைவாதமும் இல்லை. மாவைஸ்ட் என்பவர்கள் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து சுவர் ஏறி குதித்தவர்கள் இல்லை. அவர்களும் இந்த நாட்டின் மக்களே.

Anonymous said...

பயிற்சி முகாம் என்ற பெயரில் பெண்களுக்கு அவமதிப்பு-மதவெறிக் கும்பல் ஆர்.எஸ்.எஸ்சின் அட்டகாசம்

செவ்வாய், 06 மார்ச் 2012 15:52

மீசையை முறுக்கிக் கொண்டு, மன்னரைப் போலவிறைப்பாக அமர்ந்து கொண்டிருக்க, பழங்குடியினப் பெண்கள் சிலர் அவரது கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

அருகில் ஆர்.எஸ். எஸ்.சின் முக்கியமான தலைவர்களும் தங்களின் முறை எப்போது வரும் என்றுகாலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்தது அயோத்தியாவில் தான்.

கம்பீரமாக அமர்ந்து கொண்டு தனது கால்களைப் பழங்குடிப் பெண்கள் கழுவுவதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் மத வெறிக் கும்பலான ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்.

பழங்குடியினப் பகுதிகளில் தங்கள் மதவெறிப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல அண்மைக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் தாய் மதத்திற்கு பழங்குடி மக்களை அழைத்து வருகிறோம் என்று கூறி பல்வேறு முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கலவர பூமியாக மாற்றப் பட்டிருக்கும் அயோத்தியாவில் பயிற்சி முகாம் நடந்துள்ளது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்க வந்திருந்தார். அவரைத் திருப்திப்படுத்த நினைத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராமர் ஜானகி கோவிலில் வைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த பழங் குடிப்பெண்களை தலைவர்களின் கால்களைக் கழுவி விடச் செய்தனர்.

கால்களைக் கழுவி விட்ட பெண்கள் அஸ்ஸாம் மற்றும் ஜார்க் கண்டு ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பழங்குடியினத்தவராவர்.

ராமாயணக் கதைகளை எப்படிச் சொல்வது என்பதற்கான பயிற்சி தருகிறோம் என்று அவர்களை அழைத்து வந்திருந்தார்கள்.

விஸ்வ இந்து பரிசத்தின் வேதாந்தியோ, உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் மோகன் பாகவதுதான் தலைவராவார். அதனால் அவரது கால்களைக் கழுவுவதில் தவறில்லை என்கிறார்.

- நன்றி : தீக்கதிர்
6.3.2012

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே கருதி வருகிறது என்று சாதுக்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

அதனால்தான் பெண்களைத் தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ். சேர்த்துக்கொள்வதில்லை.

ஆண்களோடு சரிநிகர் சமமாக அவர்கள் இருக்க முடியாது என்று கருதப்படுவதுதான் இதற்குக் காரணமாகும்.

ராஜ் கோபால் கோவிலின் பூசாரியான கவுசல் கிஷோர் சரண் கூறுகையில், மதம் என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு ஏராளமான மோசடிகளை ஆஅர்.எஸ்.எஸ். செய்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இந்த பாவம் நீண்ட நாட்களுக்கு ஆர்எஸ்.எஸ்.காரர்களை விடாது என்று குறிப்பிட்டார்.
http://www.viduthalai.in/e-paper/29395.html

banti said...

-Nice blog sharing information