Nov 30, 2012

பெண்ணை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா?


DEC 01: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நத்தம் கிராமத்தில் தலித் மற்றும் வன்னிய சமூகத்திற்கு இடையே நடந்த மோதல் குறித்து விளக்கம் அளித்தார்.
 
ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இனி திருமாவளவனுடன் கூட்டணி கிடையாது, ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்
 
சிங்கபூர், அமெரிக்க மிசிசிப்பி, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாட்டில் உள்ளது போல் பெற்றோரரின் சம்மதத்துடன் பெண்ணுக்கு18, ஆணுக்கு21 வயதிலும் திருமணமும், பெற்றோர் சம்மதமின்றி பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 வயதிலும் திருமணம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இதை விடுத்து 18, 20 வரை பெண் குழந்தைகளை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா? என்றார் ராமதாஸ்.
 
கலவர சம்பவத்திற்கு நாகராஜனின் மரணம் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன் பெண்களை குறிவைத்து நடந்த ஈவ்டீசிங் கேலி கிண்டல்களும் காரணம். தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக.
 சிந்திக்கவும் 
 
டாக்டர் ராமதாஸ்: *ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும்*

பதில்: ஐயா ராமதாஸ் நீங்கள் என்ன ஒழுக்கத்தை கற்று கொடுத்தீர்கள் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு. மரம் வெட்டி கலவரம் செய்து கட்சி நடத்தத்தானே சொல்லி கொடுத்தீர்கள். உங்களது கட்சியின் தோற்றமும் வரலாறும் மறந்து விட்டதா?
*************************************
டாக்டர் ராமதாஸ்: *பெண் குழந்தைகளை 18, 20 வரை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா* 
 
பதில்: இந்த கேள்வி மொத்த தலித் மக்களையும் இழிவுபடுத்துவது ஆகும். ஆண்டாண்டு காலமாக பிராமணர்களும், மற்றைய உயர்ஜாதிகாரர்களும் தலித் மக்களை அடக்கி, ஒடுக்கியே வந்தார்கள்.  கூலி வேலை செய்யும் தலித் பெண்களை கெடுத்து நாசம் செயவதும், அவர்களை திருமணம் செய்து கொள்ளாமல் தங்களது இச்சைகளை தனித்து கொள்ளும் ஒரு போகபொருளாக பயன்படுத்தி வந்த நிலைமையே இந்தியா முழுவதும் நிலவி வந்தது.
 
இன்று ஒரு சில சம்பவங்கள் வன்னிய சமூக பெண்களை தலித் இளஞசர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றதும் இத்தனை கூச்சலும் கலவரமும் செய்கிறார்கள். அவர்கள் முறைப்படி திருமணம்தானே செய்தார்கள். காதல் என்பது ஒரே ஜாதிக்குள் நடந்தால் அது தவறில்லை, ஒரு கீழ்ஜாதிகாரன் எப்படி வன்னிய பெண்ணை கல்யாணம் செய்து கொள்வது, இதுதான் ராமதாஸ் ஐயாவின் வெறி கொண்ட பேச்சிக்கு காராணம்.
 ***************************************
டாக்டர் ராமதாஸ்: *தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்*

பதில்: இதை ராமதாஸ் ஐயாவின் ஜாதி வெறியின் உட்சம் என்று சொல்லலாமா. காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டுமாம், இதுவரை வன்னியர்கள் வேறு ஜாதி பெண்களை காதல் திருமணம் செய்து கொண்டதில்லையா? இனிமேல் எங்கள் ஜாதியினர் வேறுஜாதி பெண்களை காதல் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்பதற்கு டாக்டர் ஐயா ஏதாவது உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
 *****************************************
டாக்டர் ராமதாஸ்:  *கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது* 

பதில்: கலப்பு திருமணங்கள் சாதியை ஒழிக்காதாம், ராமதாஸ் ஐயா எந்த அளவுக்கு ஜாதியை தூக்கி பிடிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமல்லாது இதன் மூலம் தமிழ் தேசியம் வேறு உருவாகாது என்று சொல்கிறார். ஜாதியை கொண்டு தமிழ் தேசியத்தோடு கலக்கிறார். தங்கள் ஜாதி அடிப்படையில்தான் தமிழ் தேசியமும், இல்லை என்றால் அதுவும் தேவையில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

6 comments:

பொற்கோ said...

அவர் அப்படித்தான் ,அதனால் தான் மக்கள் கடந்த தேர்தலில் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் ,ஆகவே தன்னையும்,கட்சியையும் புதுப்பித்துக்கொள்ள கையாளும் ஒரு கீழ்த்தரமான செயல்!

Anand said...

//ஐயா ராமதாஸ் நீங்கள் என்ன ஒழுக்கத்தை கற்று கொடுத்தீர்கள் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு. மரம் வெட்டி கலவரம் செய்து கட்சி நடத்தத்தானே சொல்லி கொடுத்தீர்கள். உங்களது கட்சியின் தோற்றமும் வரலாறும் மறந்து விட்டதா?

தொடர்ந்து மரம் வெட்டிக்கொண்டு இருந்தார்களா? உங்களிடம் இருந்து இப்படி பட்ட பதிலை எதிர்பார்க்கவில்லை.

Anand said...

இதை முழுமையாக படிக்கவும்.http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

Puthiya Thenral said...

//தொடர்ந்து மரம் வெட்டிக்கொண்டு இருந்தார்களா? உங்களிடம் இருந்து இப்படி பட்ட பதிலை எதிர்பார்க்கவில்லை//

வணக்கம் ஆனந்தன் நலமா. ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ் உணர்வாளராக ஐயா ராமதாஸை பார்ப்பதால் வரும் ஆதங்கமே இது. இந்த பதிவில் கொஞ்சம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான். நாடறிந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஒரு ஜாதி சங்க தலைவர் போல் பேட்டி கொடுப்பது முறையல்ல.

அவர் கூறியிருக்கும் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடா? தொடர்ந்து காடு, மரம் வெட்ட வில்லை என்பது உண்மையே அது போல்தான் மற்றைய அரசியல் கட்சிகளும்,. தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் அனைவரையும் இழிவு படுத்துவதாகும்.

Anonymous said...

ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்துள்ளது இந்த நாயக்கன்கொட்டாய் பகுதி இவர்களால் ஆதிக்க சாதி என்று கூறப்படும் சமுதாய இளைஞர்கள் தலித்துகளின் வீட்டில் தங்கி அவர்கள் உணவை உண்டு இயக்கம் நடத்தி இருக்கிறார்கள். பாலன் போன்றவர்களின் நினைவுச் சின்னம் நாயக்கன் கொட்டாயில்தான் இருக்கிறது. தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இந்த பூமி, தவறான எடுத்துக்காட்டாகிப் போனதற்கு காரணம் முன்னாள் எஸ்.பி.சுதாகர் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுத்த வரையற்ற சுதந்திரமும் அதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது. (இந்த சுதாகர் தான் சென்னை, வேளச்சேரியில் வடநாட்டு இளைஞர்களை என்கவுண்டர் செய்தவர்).

ruban said...

இவன் பேசிச்சு எல்லாம் மரியாதையை கொடுத்துட்டு... பேசாம குண்டர் சட்டம் இல்லன encounter தான்...