Dec 20, 2012

அணு விஞ்சானி கலாமின் உபதேசம் நமக்கு தேவையா?

Dec 21:  "ஏழைகளுக்காக சேவை புரியுங்கள். அவர்களது முகத்தில் புன்சிரிப்பை வரவழையுங்கள்" என மருத்துவ மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (செய்தி: 20/12/2012 தினமலர், தினமணி).
 
சிந்திக்கவும்: ஐயா கலாம் அண்ணா! இயற்க்கை வளங்களையும், விவசாயத்தையும் அழித்து அணு உலைகளை கட்டி கொண்டு போனால் ஏழைகளின் முகத்தில் எப்படி புன்சிரிப்பு வரும்?
 
ஆந்திர – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரக் குறைவால் இறந்து வருகின்றனர். இந்த சாவு எண்ணிக்கை இந்திய அரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்பட்டதை விட மிக அதிகமாகும்.
 
இப்படி பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவி செய்த சமூக நீதி போராளி டாக்டர் பினாய்க்சென் அவர்களை மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைக்கும் போது ஏழைகளின் முகத்தில் எப்படி புன்சிரிப்பு வரும்?
 
தயிர் சாதம் சாப்பிடுகிற, ராமனை காவிய தலைவனாக ஏற்றுக்கொண்ட, ராமாயணத்தில் இருந்து உதாரணங்களை அள்ளி விடுகிற கடப்பாரை கட்சியின் (பாரதிய ஜனதா கட்சியின்) நம்பிக்கைக்கு பாத்திரமான பூணூல் போடாத அப்துல் கலாம் ஐயாவால் இதை தவிர வேறு என்னதான் பேச முடியும்.
 
2020 இல் இந்தியா வல்லரசாக போகிறதாம், இந்தியா ஒளிரப் போகிறதாம் இலஞசர்களே கனவு காணுங்கள் என்று கற்பனையில் பேசி திரிகிறார் நமது கலாம் ஐயா. அடுத்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி பதவிக்கு ஒரு பொம்மை வேண்டுமல்லவா! அந்த பதவிக்கு பொறுத்தமானவர் நம்ம கலாம் ஐயாதான்.
 
இப்படி ஏழைகளின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்க உபதேசம் செய்யும் அபுல்கலாம் ஐயாவே, போபால் விசவாய்வு கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக  நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் என்ன செய்தீர்கள்? தமிழகத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்த நீங்கள் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு நீதி கிடைக்க ஏதாவது செய்தீர்களா?
 
அரசு செலவில், அரசு மற்றும் தனியார் விழாக்களில் இதை பேச (குழந்தைகளை நேசிக்கிற அதே நேரம் அணு குண்டையும் நேசிக்கும் அதிசய பிறவியான) நீங்கள் எங்களுக்கு தேவையில்லை. தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற எத்தனையோ நல்ல ஆசிரிய பெருந்தகைகள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களை விட சிறப்பாக பேசி இலஞசர்களை வழி நடத்த போதுமானவர்கள்.
 
வெற்று உபதேசங்களால் எந்த பயனும் இல்லை. இவர் ஜனாதிபதியாக இருந்தே ஒன்றும் செய்து கிழிக்கவில்லை இப்பொழுது என்ன செய்யப்போகிறார்.
 
நட்புடன் ஆசிரியர்: புதிய தென்றல்.

4 comments:

Anonymous said...

கலாம் பற்றி தோலுரித்து காட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

அவருக்கு என்னா அரசு பணத்தில் ஜாலியா சுத்திகிட்டு திரியிறார்.

Anonymous said...

ungalai jandipathi aakina neenga enna kalattuveergal enru ungalakku theriuma poongada muttalgale

Palani Chamy said...

இவரைப்பற்றிவிமர்சனம்தேவையா???எப்படிஜனாதிபதியா???இருந்தார்???