Dec 26, 2012

இந்திய அரசு திருந்தி விட்டது! நம்பினால் நம்புங்கள்!

Dec 27: சில தினங்களுக்கு முன்பு  டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவம் பயிலும் மாணவி 6  காம   கொடூரர்களால்  கற்பழிக்கப்பட்டார் .
 
இந்தியாவையே உலுக்கியது இந்த மாணவியின் கற்பழிப்பு சம்பவம். இந்த சம்பவத்தை கண்டித்து டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை போலீசார் ஒடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
 
இந்நிலையில் டில்லி சப்தர்ஜங் மருத்துவம‌னையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி , பலத்த பாதுகாப்புடன் ‌ஆம்புலன்ஸ் வாயிலாக வெளியே கொண்டுவரப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மேல் சிகிச்சை அளிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை கூடி ஆலோசித்து அவரை சிறப்பு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்போவதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
 
சிந்திக்கவும்: சிலதினங்களுக்கு முன்னர்தான் மாணவியின் உடல்நிலை தேறிவருவதாகவும் அவர் ஆப்பில், ஆரஞ்ச் ஜூஸ் குடிக்கிறார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரை சிங்கபூருக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நோக்கம் என்ன? இந்தியாவில் இல்லாத மருத்துவமனையா? வெளிநாடுகளில் இருந்து கூட பெரும் செல்வந்தர்கள் இந்தியாவில் வந்து சிகிச்சை செய்கின்றனரே.
 
டெல்லியில் ஏற்ப்பட்ட மிகபெரிய மக்கள் புரட்சியை கண்டு நடுங்கிய மத்திய அரசு அதை பரவ விடாமல் தடுக்க தங்களது போலீஸ் குண்டர்களை ஏவி விட்டது. இருந்தும் போராட்டம் இந்தியா முழுவதும்  வலுபெற ஆரம்பித்தது. மாணவிக்கு தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை  கொடுத்தால் மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவிவிடும் என்று அஞ்சிய மத்திய கோழை அரசு உடனே மாணவியை சிங்கபூருக்கு சிகிச்சை என்கிற பெயரில் அனுப்புகிறது.

 இந்திய அரசு, " மக்கள் போராட்டங்களை"  போலீஸ் குண்டர்களை வைத்து அடக்குகிறது அல்லது இதுமாதிரி குள்ளநரித்தனம் செய்கிறது. மற்றபடி வெளிநாட்டில் கொண்டு போய் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மனிதாபிமானம் கொண்ட நாடு என்று இந்தியாவை எண்ணிவிட வேண்டாம். இந்தியாவில் இதை மாதிரி அல்லது இதைவிட மோசமான கொடூரமான கற்பழிப்புகள்
பல்லாயிரக்கணக்கில் நடந்திருக்கிறது அதற்க்கு எல்லாம் இந்த அளவு நடவடிக்கைகளும் இல்லை, வெளிநாட்டு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.

ஈழத்து பெண்களை கற்பழித்து கொன்ற அமைதிபடைக்கு பதவியும், பரிசும் கொடுத்து கவுரவித்த இந்திய ஆட்சியாளர்கள் டெல்லி மாணவி விசயத்தில் மனம் திருந்தி விட்டார்களா என்ன?

*மலர் விழி*

6 comments:

Anonymous said...

எங்கள் இந்தியாவை நாங்கள் பாத்து கொள்றோம் யாழ்பாணத்துகாரி எங்களை பற்றி சொல்ல வேண்டா

புலவர் சா இராமாநுசம் said...

நானும் என்வலையில் இச்சம்பவம் பற்றி கவிதை ஒன்று எழுதியுள்ளேன் படித்துப் பாருங்கள்!

Anonymous said...

தலைப்பை பார்த்ததும் இந்தியா திருந்தி விட்டதோ என்று நினைத்து

hummmmm

சந்தோசப்பட்டேன் உள்ளே படித்தாலோ வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவது தெரிந்தது.

தமிழ் காமெடி உலகம் said...

அது தானே பார்த்தேன் நம் அரசாவது திருந்துவதாவது ! அப்படி ஒன்று நடந்தால் கண்டிப்பா உலகம் அழிந்துவிடும்! இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உலகம் ஒரு நாளும் அழியாது என தோன்றுகிறது......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Akbar said...

நாளிரவில் ஆட்சி மாற்றமும் சட்டங்களையும் கைதுகளும் அறிவிக்கும் அரசாணையை போல் இந்தியா நள்ளிரவில் திருந்தி விட்டதோ என்று ஆவலுடன் படித்ததால்தான் தெரிகிறது...
இந்தியாவின் நிலை இன்னும் இருளில்ன் உட்சத்தில் உள்ளது என்று...

Anonymous said...

எங்கள் இந்தியாவை நாங்கள் பாத்து கொள்றோம்///////
எப்படி பார்த்து கொள்வாய்
பார்த்து கொண்டே இரு நீ பார்க்கும் நேரத்தில் இதுதான் இந்தியாவின் நிலை..
உன்னை போன்ற விஸகிருமிகளை அளித்தாலே போதும் இந்தியா திருந்தி விடும்...