Dec 28, 2012

நடுத்தர வர்க்க நகரவாசிகள் ஆபத்தானவர்களா?

Dec 29: நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பணக்காரர்களையும் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும்  ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களை பார்த்து ஒருவித மோகம்.

பணக்காரர்கள் பயன்படுத்தும் கார், பங்களாக்கள் அவர்கள் உடுத்தும் உடைகள் வரை எப்படியாவது நாமும் இந்த மேட்டுக்குடி வாழ்க்கைக்கு மாறிவிட வேண்டும் என்கிற தீராத வெறி.

இதனால் தவணைக்கு வீட்டு உபயோக பொருட்கள், கார்கள்  வாங்குவது முதல்  நுனிநாக்கில் ஆங்கிலத்தை வரவழைப்பது வரை என்று அயராது பாடுபடுகிறார்கள். மேலும் குழந்தைகளை இங்கிலீஷ் கான்வென்ட்களில் சேர்க்க வட்டிகடை சேட்டு வீட்டுக்கு நடையாய் நடக்கிறார்கள்.

சென்னையில் வாழ்வதால் "தங்கள் மேட்டுகுடிகள்" என்கிற மனோபாவத்தை இவர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்கிறார்கள். இதன் விளைவு இவர்களை கடன் வாங்கியாவது கார், பைக்குகள் வாங்குகிறார்கள். வாரத்தில் ஒரு முறை ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களில் பொருள்கள் வாங்கவில்லை என்றால் தங்கள் கவுரவம் சரிந்து விடும் என்கிற மனோநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த மனோபாவத்தால், வரவுக்கு மீறிய செலவு என்கிற நிலைக்கு ஆளாகி பெரும் கடன் சுமைக்குள் சிக்கித்தவிக்கிறது சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கம். இதனால் நகரங்களில் வாழும் பல இலட்சம் குடும்பங்கள் வட்டிகடனில் மூழ்கி தவிக்கிறது. இந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு ஆசைபடுவதால் கலாச்சார மற்றும் ஒழுக்க கேடுகளும், தற்கொலைகள் மற்றும் குற்றங்களும் பெருகிய இடமாக நகரங்கள் மாறிவருகின்றன.

சென்னை போன்ற பெரும் நகரங்களில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் தாங்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இவர்கள் அந்த கிராமங்களில், டவுன் பஞ்சாயத்களில் வசிக்கும்போது எப்படி இருந்தார்கள் என்பதை மறந்து நகரங்களில் உள்ள மேட்டு குடிகளை பார்த்து அதைபோல் தாங்களும் ஆகவேண்டும் என்கிற ஒருவித வெறி அவர்களை தங்களுக்கு கீழே உள்ள அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின்  உயர்வை பற்றி எண்ணுவோ அல்லது அவர்களுடைய பிரச்சனனைகளை பற்றி பேசவோ தடையாக அமைகிறது.

இந்த நடுத்தரவர்க்க பணக்கார நோய் பிடித்த சமூகம் பல்வேறு தருணங்களில் ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுகின்றது கூடங்குளம் அணு உலையால் அடையப் போகும் பாதிப்புகளை எதிர்த்து  அப்பகுதி மக்கள் போராடினால் இந்த நோய் பிடித்த சமூகம் அதை எதிர்த்து நையாண்டி செய்கிறது அல்லது எதிர்த்து களம் ஆடுகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நமதூர் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று போராடினால் இவர்கள் வால்மார்ட் வரவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

வால்மார்ட் வந்தால் இந்தியா அமெரிக்காவாக மாறிவிடும் என்று நம்புகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத ஒரு நாட்டில், குடிசைகளில், தெரு ஓரங்களில் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் முதல் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் நடத்தரவர்கத்தில் பெரும்பான்மையினர் மவுனமே காக்கின்றனர். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி, பிள்ளைகளை இங்கிலீஷ் கான்வென்ட்யில் படிக்க வைத்து சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்குவது எப்படி என்பதே இவர்களது முக்கிய கவலை.

நடுத்தர வர்க்கம் மேட்டுக்குடி பணக்கார மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எங்களின் ஆவல்.
 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

5 comments:

விமலன் said...

இதுதான் நம்மில் பெரும்பாலானோரின் த்ற்போதைய அடையாலமாக இருக்கிறது,மேட்டுக்குடி வாழ்க்கைக்கு வாழ்க்கைப்பட்ட ம்னோநிலை நம்மில் புகுந்து நாட்கள் வெகுவாகிப்போனது.
இப்படியான சிந்தனையை நம்மில் விதைத்தவர்களின் வெற்றிதான் இன்று இமாலயமாய் உயர்ந்து நிற்கிறது.

தமிழ் காமெடி உலகம் said...

நம் நாட்டின் இன்னொரு நிலை இதுதான்.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Anonymous said...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RMPbejStfh0#t=0s
நம் நாட்டின் இன்றைய நிலை இது
வால்மார்ட் வந்தால் இந்தியாவின் இந்த நிலை மாறுமா? இல்லை அதிகமாகுமா?

Anonymous said...

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RMPbejStfh0

நிலாமகள் said...

வரவுக்குள் செலவு செய்து இருப்பதில் திருப்தியாக வாழ்ந்த நம் மூதாதையர்களை நினைவில் கொள்வது நலம்.