Dec 6, 2012

மறுக்கப்பட்ட நீதி! கருப்பு தினம்!


DEC 06: பாபர் மசூதி என்ற முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை ஹிந்து பயங்கரவாதிகள் 1992 டிசம்பர் 6 தேதி உடைத்து தரைமட்டம் ஆக்கினர். இது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகி போனது.

பயங்கரவாதி அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்ற பெயரில் ஒரு ரத்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை போன இடமெல்லாம் முஸ்லிம்களின் இரத்தமும் ஒட்டப்பட்டது.

இறுதியாக முஸ்லிம்களின் 450 வருட பாரம்பரிய மிக்க மசூதி, ஆயிரக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் ஹிந்து தீவிரவாத இயக்கங்களால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அத்தோடு இந்தியாவின் மதச்சார்பின்மையும் உடைந்து போனது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 20 வருடங்கள் முடிந்து விட்டது.

இதை செய்ய அவர்கள் சுமார் 80 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இவர்கள் பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. பாபர் மசூதி தொடங்கி இந்தியா முழுவதும் 3600 க்கும் அதிகமான பள்ளிகளை உரிமை கொண்டாடுகிறார்கள்.

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்தியாவின் நீதி மன்றங்களில் நிறைந்திருக்கும் காவி நீதிபதிகள் உலகமே பார்க்க உடைக்கப்பட்ட ஒரு மசூதியை சர்ச்சை கூறிய இடம் என்று பெயரிட்டனர். பின்னர் ஹிந்துக்களின் நம்பிக்கை அடிப்படையாக கொண்டு குரங்கின் கையில் கிடைத்த பூமலை போல் ஒரு தீர்ப்பை கொடுத்தது அலகாபாத் நீதி (காவி) மன்றம்.

இப்பொழுது முஸ்லிம்கள் உச்ச நீதி மன்றத்தை எதிர் நோக்கி உள்ளனர். பாவம் அவர்களுக்கு தெரியாது காவரி நதி நீர் பிரச்சனை தொடங்கி போபால் விசவாய்வு கசிவு வரை மறுக்கப்பட்ட நீதி பாபர் மசூதி விசயத்தில் மட்டும் எப்படி கிடைக்க போகிறது?  சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் விசயத்தில் நீதி ஒரு சார்புடையதாகவே
இருக்கிறது.


பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து நடந்த கலவரத்தில் இந்தியா முழுவதற்கும் சுமார் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதற்க்கு காரணமான மோடி, அத்வானி கூட்டம் இன்றுவரை தண்டிக்கப் படவில்லை. குஜராத் கலவரத்தை நடத்திய மோடியை வெட்கம் இல்லாமல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பிரச்சாரம் செய்கிறது ஒரு கூட்டம்.

இந்நிலையில் 2002 இல் மிக மோசனமான கலவரத்துக்கு காரணமானவர் நரேந்திர மோடி என்றும், இவருக்கு விதிமுறைகளைத் தளர்த்தி விசா வழங்கினால் அது மோசமான முன் உதாரணத்தை உண்டாக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 20 பேர் வெளிவுரவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதை பார்த்தாவாது மோடியை தூக்கி பிடிப்பவர்கள் வெட்கப்படுவார்களா?

*மலர் விழி*

3 comments:

Anonymous said...

மத சார்பின்மை என்பது வெறும் வாய் வார்த்தை.

Anonymous said...

நீதி மன்றங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கண்பார்வைக்கு இயங்கும் ஒரு அரசு இயந்திரம்.

Anonymous said...

புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக்கோரியும், அதனை இடித்தவர்களை தண்டிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(டிசம்பர் 6) தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் ஆற்றிய உரையில் கூறியது: “பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று யார் முயற்சித்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை வரும் தலைமுறையினருக்கு பாபரியின் நினைவையும், எதிர்ப்புணர்வையும் பகிர்ந்து அளித்துக்கொண்டே இருப்போம்.

பாபரி முஸ்லிம்களுக்கும் மட்டுமான பிரச்சனை அல்ல. இது ஒரு தேசிய பிரச்சனை. பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று மதசார்பற்ற கட்சிகள் என்று கூறுவோர் மனதால் விரும்புகின்ற சூழல் கீழ் தரமானது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் பத்திரிகைகள் அனைத்தும் தலையங்கம் எழுதின. எல்லோரும் ஒரே குரலில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பாபரி மஸ்ஜிதை இடிக்கும் வேளையில் பூஜை அறையில் இருந்த அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கூட பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று வாக்குறுதியளித்தார்.

AZAD- NELLAI