Feb 20, 2013

இலங்கை இந்திய அரசு பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி !

பிப் 21/2013: உலகில் ஹிட்லர், முசோலினி இவர்களை அடுத்து பயங்கரவாத செயல்களின் தலைமையிடமாக  இஸ்ரேல் விளங்கி வந்தது. இப்பொழுது இஸ்ரேலுக்கு கூட்டாளியாக இலங்கை பயாங்கரவாத அரசு சேர்ந்துள்ளது.

இலங்கையில்  நடந்த இறுதி யுத்தத்தில் சுமார் 70 ஆயிரம் பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என்று ஐநாவின் விசாரணை குழு அறிக்கை சமர்பித்தது.  சேனல் 4 செய்தி நிறுவனம் இனப்படுகொலை தொடர்பான அதிர்ச்சியூட்டும் ஆவணங்களை வெளியிட்டது. 

இவற்றை இலங்கை,  இந்திய அரசு பயங்கரவாதத்தின்  துணை கொண்டு பொய்யென்று சொல்லி மறுத்து வந்தது. இந்நிலையில் இலங்கை இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின்  இளைய மகன் பாலசந்திரன் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனால் அது உண்மையல்ல  பொய் என சேனல்  4 ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. 

சிறுவன் பாலசந்திரனை பிடித்து சென்று ராணுவ முகாமில் தங்க வைத்து, அவனுக்கு பிஸ்கட் மற்றும் தின் பண்டங்கள், தண்ணீர் கொடுத்து சிறிது நேரத்தில் சுட்டு கொன்றது அம்பலமாகியுள்ளது. பட்சிளம் பாலகனை உணவு கொடுத்து பின்னர் சுட்டு கொல்லும் இதை போன்ற பயங்கரவாதம் உலகில் எங்கும்  நடந்திருக்க இருக்க முடியாது. யூத இனவாதத்திற்கு நிகராக சிங்கள இனவாதம் விளங்குகிறது.

இதை போன்ற பாசிச பயங்கரவாதம் உலகில் எதுவும் இருக்க முடியாது. ஒரிசாவில் ஹிந்துத்துவாவினர்  ஆஸ்ட்ரேலிய பாதிரியாரையும் அவரது இரு பச்சிளம் குழந்தைகளையும் எரித்து கொன்றதும், குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து சிசுவை எடுத்து தீயில் போட்டு கொன்றது, புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் மகனை உணவூட்டி பின்னர் சுட்டு கொன்றதும் ஒரே மாதரியான பாசிச பயங்கரவாத செயலே. இவர்கள் மனித நேயமே இல்லாத மிருகங்களே!

இவ்வளவு நடந்த பிறகும் இந்தியா மவுனம் காக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருட்டு முழி முழிக்கிறது. இலங்கையின் போர் குற்றம் பன்னாட்டு அளவில் நிரூபிக்கப்பட்டால் அதை நடத்த முழு முதல் காரணமாக இருந்த இந்தியாவும் அதற்க்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். இப்பொழுதுதான் தமிழகத்தில் ஒவ்வொரு தலைவராக வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சிலர் இந்தியாவை அந்நிய நாடு என்று இனி சொல்வோம்  என்று சொல்லி இருக்கிறார்கள். இது வரவேற்க தக்கது விடயம்.

மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குறித்த மற்றொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது. அதில் இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை நடைபெற உத்தரவிட வலியுறுத்தபட உள்ளது. மேலும் பல புதிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட போவதாக சேனல் 4 டி.வி.யின் இயக்குனர் கால்லம் மாக்ரே அறிவித்துள்ளார். 

இலங்கை தீவினிலே! சிங்கள பயங்கரவாத மிருகங்களை காட்டு வேட்டையாடி! தமிழர்களுக்கு ஒரு பூமி அமைப்போம்!.  (புதுமொழி ).

10 comments:

நிலாமகள் said...

தமிழர்களுக்கு ஒரு பூமி அமைப்போம்... இன்றைய அரசியல்வாதிகள் அற்றதாய்...?!

வக்கிரத்தின் எல்லை இப்பிள்ளை மேல் நிகழ்த்திய கொடூரம்.

ruban said...

"சேனல் 4 தொலைக்காட்சிகு மனம் மார்ந்த நன்றி" மக்களே இது போர் குற்றம் துக்கான அதரங்கள்... ஆனால் ஐ.நா போர் நாடாகும்போது மக்களை கொல்லும் போது என்ன செய்து கொண்டு இருந்தது,30-40 வருஷ போராட்டம் 200000 பேர் உயிர் தியாகம் வீண் ஆக கூடாது, நம் இன மக்களுக்கு நீதி கிடக்க வேண்டும் எண்டால் தப்பு செய்தவன் தண்டிக பட வேண்டும், 200000 பேர் உயிர் தியாகம் துக்கு ஐ.நா பதில் சொல்ல வேண்டும், அப்டை என்டால் தமிழ் ஈழம் தான், அதை ஐ.நா சங்க புடித்து கேக்கவேண்டும், இல்ல விட்டால் ஐ.நா பேச்சை மதி விடுவான்.. தமிழ் மக்கள் நினத்தால் ஈழம் மலர்வது உறுதி,உயர் பலி குடுத்த மக்களுக்கு நாம் செய்ய நினைக்கும் ஒரே உதவி ஈழம் தான், நாம் வைக்கும் கோரிக்கை நல்ல திடமுடன் கேக்க உரிமை இருக்கிறது, இதற்காக தானே 30-40 வருட போராட்டம், 200000 பேர் உயர் தியாகம்.. நாம் நம் கோரிக்கை இஎல் மிக மிக உறுதியுடன் இருந்தால் ஈழம் அடய்வது உறுதி... ஆனால் ஐ.நா இதற்கு சமாதிக்க மாடன்..ஆனால் நாம் நம் உறுதியான கோரிக்கை வைத்தால் அவனால் நிராகரிக முடியாது, அதனால் தமிழ் மக்களே நாம் இன மக்கள் செய்த உயர் தேயகதுகு குரல் கொடுப்போம்... உறுதியுடன் இருப்போம் ஈழம் மலர உதவி செய்வோம்..

Anonymous said...

கண்முன்னே நடந்த அநியாயங்களை மூடிமறைத்த ஐநா இந்தப் படு கொலைகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். இப்படுகொலை புரிந்த சிங்கள அரச பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொணர்ந்து தண்டனை பெற்றுத்தரவேண்டும். எமக்குப் பிரயசித்தமாய் எம் மண்ணை மீட்க உலகம் உதவ வேண்டும்.. உலகிற்கு இப்பொது புரிந்திருக்கும் யார் பயங்கரவாதிகள் என்பது. இனிமேலும் இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் போர்க் குற்றங்கள் உலகின் எப்பாகத்திலும் ஏற்படா வண்ணம் படுகொலை புரிந்தவர்க்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். மற்ற அரச பயங்கரவாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும்.

Anonymous said...

ovvoru secondum iraqil, palestinlul saagiraargaley atdhai enna solvathu?//

Anonymous said...

ovvoru secondum iraqil, palestinlul saagiraargaley atdhai enna solvathu?//

Anonymous said...

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது குண்டு வீச்சினாலோ, சண்டையின் போதோ, குறுக்கு துப்பாக்கிச் சூட்டினாலோ அல்ல. பிடித்து வைத்து, சாப்பிட பிஸ்கட்டும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து உட்கார வைத்து, பிறகு ஈவு இரக்கமின்றி பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கின்றனர் சிங்கள இராணுவ வீரர்கள். அதற்கான உத்தரவை மேலிருந்து பிறப்பித்திருக்கின்றனர் நாட்டை ஆளும் ராஜபக்சே கும்பல்.

Anonymous said...

ஈழப் போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது அமைதி ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக போன அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் “போப் கூட ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் எப்படியாவது போரை நிறுத்தி விடும்படியும் தான் கேட்டதாகவும், அதற்கு ‘நான் ஒன்றும் போப் இல்லை, நட்பு நாடான இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது’ என்று தாதா பிரணாப் பதிலளித்ததாகவும்” போலி கம்யூனிஸ்ட் தா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Anonymous said...

ஈழத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு போப் ஆக இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்திருந்தால் போதும். ஆனால் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி பயிற்சி வழங்கி இன அழிப்புக்குத் துணை போன இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். இலங்கை அரசுடன் நட்புறவு பேண வேண்டும் என்ற கணக்குக்கு முன்பு பல ஆயிரம் ஈழத் தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பொருட்டாக தோன்றியிருக்கவில்லை.

Anonymous said...

இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டால், அந்த நெருக்கடியில் அவர்கள் அவர்களது கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய ஆளும் கும்பல் உடந்தையாக இருந்ததை யாரும் மறைக்க முடியாது. அதனால் இலங்கையை இந்தியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

Anonymous said...

Inaiyath thalangalin moolamaaka Tamil makkal thangal Ilankai ethirppai pathivu seyya vendum.