Mar 10, 2013

நிர்வாணமாக நடிக்க நாங்கள் ரெடி!

மார்ச் 11/2014: பிரபல நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி இவர்கள் தாங்கள் நடிக்கும் சினிமா காட்சிகளில் அரை நிர்வாணமாக நடிப்பதால் இந்த காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதுடன், கெட்டுப்போக வகை செய்யும்.

எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநிலம் மங்கள் ஹாட் பகுதியை சேர்ந்த வக்கீலும், சமூக சேவகருமான எல்.சுபுதி என்பவர் ஐதராபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சினிமாவில் ஆபாசமாக நடித்த நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் மீது 2 நாட்களில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.  

சிந்திக்கவும்: பணம் அதிகமாக கொடுத்தால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் நிலையில் இருக்கிறார்கள் இன்றைய நடிகர், நடிகைகள். நடிகர் பிரகாஷ் ராஜ் நிர்வாணமாக நடித்தார், கமலஹாசன் மற்றும் சில நடிகர்கள் முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளனர். கூடுதல் பணமும், புகழும் கிடைக்குமேயானால் முழு நிர்வாணமாக நடிக்கவும் அவர்கள் தயார்.

இதுதான் இன்றைய சினிமாவின் லட்சணம், சினிமா என்கிற வெகுஜன ஊடகம் பொழுது போக்காகவும், அதே நேரம் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கலாசார விழுமங்களை பாதுகாக்கும் விதத்தில் தரவேண்டும். அதை விட்டு முழுக்க முழுக்க ஆபாசத்தை மட்டுமே நம்பி எடுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

ஈரான் நாட்டு சினிமாக்கள் உலக அரங்கில் பல்வேறு பரிசுகளை தட்டி செல்கின்றன. அந்த படங்களில் வரும் பெண்கள் அந்த நாட்டு கலாசார உடைகளை அணிந்து ஆபாசம் இல்லாமல் நடித்த அந்த படங்கள் உலக அரங்கில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு பரிசுகளை தட்டி செல்கின்றன. ஆனால் நமது தமிழ் படங்களோ நமது கலாசார விழுமங்களை தாண்டி வன்முறையையும், ஆபாசத்தையும் நம்பியே கதைகளை எடுக்கிறார்கள்.

இந்நிலையில், ஹைதராபாத் 10வது அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி இந்தியாவின் நீதி துறைக்கே பெரும் இலக்கணமான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளார். இந்த நிர்வாண நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுத்ததன் மூலம் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்ப்படுத்தி உள்ளார். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது போன்று, தமிழகத்திலும் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூக சிந்தனையாளர்கள், பெண்கள் அமைப்பினர் பெண்மையை இழிவுபடுத்தும் விதத்தில் நிர்வாண கோலத்தில் நடிக்கும் இது போன்ற நடிகைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முன்வர வேண்டும். சினிமா என்கிற வெகுஜன ஊடகம் ஆபாசத்தை தவிர்த்து பொழுதுபோக்கோடு மக்கள் பிரச்சனைகளையும் பேச வேண்டும் என்பதே நமது ஆவல். 

*மலர் விழி*

6 comments:

indrayavanam.blogspot.com said...

பொழுதுபோக்கோடு மக்கள் பிரச்சனைகளையும் பேச வேண்டும் என்பதே நமது ஆவல்.... நல்ல எதிப்பார்ப்பு

Anonymous said...

நீங்கள் கருப்பா பெயிண்ட் அடித்த படமே இப்படி ஆபாசமா இருக்கே....... ஹும் ...... ரொம்பத்தான் காட்டுராலுக..... அலைபாயுதே கண்ணா....... மனம் அலைபாயுதே..... இவர்கள் வேனுகனாம்.... தன்னில் அலைபாயுதே கண்ணா........... ஹும் ..... என்னத்த சொல்ல...

Anonymous said...

பெண்களை போகப்பொருளாக்கி, கவர்ச்சி, ஆபாசத்தை விற்பனை செய்து பாலியல் வன்முறையைத் தூண்டிவிடும் ஊடக, சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் தமது தொழில்தான் வன்புணர்ச்சிக்கு அடிப்படை என்பதை ஏற்பதோ அப்படி ஏற்றுவிட்டு குற்ற உணர்வு அடைவதோ சாத்தியமே இல்லை

Anonymous said...

இந்த காலத்துல குடும்பத்தோட பார்க்குற மாதிரி ஒரு படமாவது இருக்கா?
காதல் பாடலுக்கு எதுக்குயா அரைகுறை ஆடை?

maharavi said...

maharavi said...

இதெல்லாம் சினிமாவே இல்லங்க!