Mar 12, 2014

அளிக்கப்பட வேண்டுமா! இல்லை பாதுகாக்கப்பட வேண்டுமா?


பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அநீயாயம் செய்து கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் அநீதிகளை, காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும். 

1.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முஸ்லிம்களை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறை கொலை செய்கின்றது.

2.வெடிகுண்டுகளை தயாரித்து, பதுக்கி வைத்து, அதனை வெடிக்கச் செய்வது ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் கூட அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என காவல்துறை கருப்பு ஆடுகளும், உளவுத்துறை கருப்பு ஆடுகளும் முத்திரை குத்துகின்றன. இதற்காக அவர்களுக்கு மோடியின் பாஜக அரசை போல அதிமுகவின் ஜெ அரசு 10 லட்ச ரூபாய் பரிசும், பதவி உயர்வும் அளித்துள்ளது.

3.வகுப்புவாத கலவரத்தை தூண்டும், வெடிகுண்டு கலாச்சாரத்தை நாடெங்கிலும் பரப்பும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கைது செய்கின்றது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு.

4.காஷ்மீரில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு அங்குள்ள முஸ்லிம் பெண்களை தேவைக்கு கற்பழிக்க இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. உண்மைகள் பல வெளிவந்த போதிலும் முஸ்லிம் பெண்களின் கற்பினை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காங்கிரஸ் அரசு.

5. தீவிர வாத தடுப்பு மையம் அமைத்தால் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மத்திய உளவுத்துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதனால் நான் அதனை எதிர்க்கின்றேன் என கொக்கரித்த தமிழக முதல்வர் கோவையில் அப்பாவி முஸ்லிம்களை வெடிகுண்டு வழக்கில் சிக்க வைப்பதற்காக கர்நாடக போலிஸூடன் இணைந்து முஸ்லிம்களின் வீட்டில் சோதனை என்ற பெயரில் வெடிகுண்டுகளை பதுக்கிய கர்நாடக காவல்துறையினர் மீதும், தமிழ காவல்துறையினர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

6. அத்வானி ரதை யாத்திரை மேற்கொள்ளும்போது மதுரையில் அத்வானி வரும் பாதையில் வெடிகுண்டு வைத்த சிவசங்கரை கைது செய்த போதிலும் போலீஸ் பக்ருதீனை இன்னும் அந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கும் காவல்துறையினரை கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. அதிமுக அரசின் தொடர் முஸ்லிம் விரோதப்போக்கு.

7. பெங்களூர் மல்லேஸ்வரம் வெடிகுண்டு பாஜவினர் தான் இதனை செய்திருப்பார்கள் என்று ஆட்சிக்கு வரும் முன் கூறிய கர்நாடக காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தயக்கம் காட்டுகின்றது.

8. மததுவேஷத்தை பரப்பும் ஹிந்துத்துவ வாதிகளை விட்டுவிட்டு முஸ்லிம்களின் பதிப்பகங்களில் சோதனையிட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிகும் காங்கிரஸ்.

10. மேலப்பாளையம் வெடிபொருட்கள் வழக்கில் காவல்துறையினர்ரின் கட்டுக்கதை என்று உண்மை கண்டறியும் குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரும் அந்த வழக்கை சிபியைகு மாற்ற வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, பாஜக நிர்வாகிகலின் கொலைகளுக்கு சொந்த பிரச்சனைகளும், பெண் விவகாரமும் தான் காரனம் என்று கூறிய தமிழக டி.ஜி.பி. திரு ராமானுஜம் அவர்களின் அறிக்கையை புரந்தள்ளிவிட்டு காவல்துறையின் தொடர் முஸ்லிம் வேட்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமில்லாமல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றாமல் போலி வழக்குகளை புனையும் காவல்துறையினருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசும், பதவி உயர்வும்.

இதன் பிறகும் நீங்கள் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினரை புறக்கணிக்காமல் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினால் பிறகு முஸ்லிம் சமூத்தை அளிக்கும் சங்கப்பரிவாரத்தின் சூழ்ச்சிக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பதாகிவிடும்.

முஸ்லிம்கள் அளிக்கப்பட வேண்டுமா? இல்லை பாதுகாக்கப்பட வேண்டுமா?

நம் கண் முன்னே நமது சகோதரர்களை தீவிரவாதிகளாக்கி அவர்களை சித்ரவதை செய்து, ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அநீயாயம் செய்து கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் அநீதிகளை, காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும், முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்போதென்றால் உங்களுக்கு சரியான களம் SDPI கட்சி தான்.,   நாம் எஸ்.டி.பி.ஐ.க்கு வாக்களிக்க வேண்டும்.

1 comment:

தண்டேல் said...

அளிக்கப்படவேண்டுமா? என்றுள்ளது வாசகம் தவறு என்று நினைக்கிறேன் அழிக்கப்படவேண்டுமா! என்பதே சரி என்று நினைக்கிறேன்.