Sep 18, 2014

வெறுப்பின் காரணமாக பாயும் இவா!?

சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர். யோகி ஆதித்யாநாத்க்கு அடுத்தபடியாக மற்றொரு பா.ஜ.க எம்.பி சக்ஷி மகாராஜ் சிறுபான்மை மக்களுக்கு  எதிராக கண்டனத்திற்குரிய கருத்தை தெரிவித்திருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ தொகுதி எம்.பி. சக்ஷி மகாராஜ், மதரசா பள்ளிகள் தீவிரவாதத்தை போதிப்பதாக கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்பட்டு வருகிறது. மதரசாக்களிலிருந்து தீவிரவாதிகளும், ஜிகாதிகளும் உருவாக்கப்படுகின்றனர். இது தேசத்திற்கு நல்லதல்ல.

மதப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசியவாதம் பற்றி போதிக்கப்படுவதில்லை. குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தின் போதும் ஒரு மதரசா கூட மூவர்ணக் கொடியை ஏற்றுவதில்லை. தேசியவாதத்துடன் எந்த ஒற்றுமையும் இல்லாத மதரசாக்களுக்கு அரசு நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறது என சக்ஷி மகாராஜ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் மீது அவதூறு புகட்டி அதன் மூலமாக இந்து மக்களிடம் நற்பெயர் வாங்கலாம் என்ற எண்ணம் அறிவார்ந்த இந்து சமூகத்திடம் பலிக்காது அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருப்பான் அவன் செய்வதற்கு அவனை சார்ந்து இருக்கிற மதம் ஒரு பொழுதும் பொறுப்பாகாது. இவர் மீது பாபர் மஸ்ஜிதின் இடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் தேசப் பற்றை சந்தேகிக்கும் வகையிலும், சுதந்திர போராட்டத்தில் இந்திய நாட்டிற்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த, ஆயிரக்கணக்கான உலமாக்களை உருவாக்கிய மதரஸாக்களின் சுதந்திர போராட்டங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் அவதூறாக மதவாதக் கருத்தை தெரிவித்து, தேச ஒற்றுமைக்கு ஊறுவிக்கும் பா.ஜ.க கட்சியின் மத்திய அமைச்சர் சாக்கி மகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் புகார் மனு அளிக்கப்பட்டது. 

நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது. இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான். அடுத்த மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக பாயும் இவர்களும்  பார்பன பயங்கரவாதிகள் என்பது மிகையில்லை.

3 comments:

Anonymous said...

‪#‎பயங்கரவாதிகள்_வன்முறையாளர்கள்_குண்டர்கள்‬ என்று இவர்களை என்னவேண்டும் என்றாலும் சொல்லலாம், அதற்கு தகுதியானவர்கள்.

இந்த காட்டுமிராண்டி ‪#‎காவி_தீவிரவாதிகளை‬ யார் தண்டிப்பது.

இந்த கொடுமை எல்லாம் ஊடகங்களுக்கு ஏன் தெரிவதில்லை.

இந்தியாவில் வடநாட்டு பக்கம் தான் அதிகமாக இதை போன்று வன்முறையாட்டம் ‪#‎காவி_தீவிரவாதிகளால்‬ அரங்கேற்றப்படுகிறது.

‪#‎இறைவன்‬ நின்று கொல்வான்!!

Anonymous said...

மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளன்று விடுமுறை இல்லை.
அநேகமா,விரைவில் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் காணாமல் போய்டும்னு நினைக்கிறேன்.
‪#‎ஆப்_கி_போடி_சர்க்கார்‬.

nistar mohamed said...

மதரசாக்களில் தேசியக் கொடி ஏற்றினால் அது செய்தி அல்ல!