Oct 28, 2014

நெஞ்சு பதறல காரணம் வீடியோ கேசட் வெளிவரல!?


பத்திரிகையாளர்களின் தலையை துண்டித்த தீவிரவாதிகளின் வீடியோவை பார்த்தவுடன் நெஞ்சு பதறுகிறது நமக்கு... காரணம் அவன் தீவிரவாதி.உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் ஒருபெண் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறாள். பிறப்புறுப்பில் கைகள் நுழைக்கப்படுகின்றன.

நமக்கு பதறவே இல்லை. காரணம் வீடியோ பிடிக்கப்படவில்லை. அவர்கள் தீவிரவாதிகளல்ல காவலர்கள்.

இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக இருக்கும் போதே என்கவுண்டர் என்கிற பெயரில் காவல்துறையால் கொலை செய்யப்பட்டார்கள்.

நமக்கு பதறவே இல்லை. காரணம் வீடியோ வெளியாகவில்லை.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர்குல பெண்கள் கற்பழிப்பு.

நமக்கு பதறல. காரணம் வீடியோ கேசட் வெளிவரல.

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஒரு முதியவரை ஒரு காக்கி முரட்டு ஜென்மம் முதுகில் தொடர்ந்து தாக்கும் கேசட் வெளியானது.

வீடியோ கேசட் வெளியாகியும் நமக்கு பதறல. காரணம் நாம் உயர்ந்த சாதி.

தினசரி விசாரணை கைதிகள் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்படுகிறார்கள்.

நமக்கு பதறல. காரணம் வீடியோ கேசட் வெளிவரல.

கூடங்குளம் போராட்டத்தை அடக்க துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அங்கிருந்த தேவாலயத்தை சூறையாடியது.

நமக்கு பதறவே இல்ல.காரணம் அது கிறிஸ்தவ ஆலயம்.

வீரப்பன் வேட்டையில் மலையோர கிராமங்கள் சீரழிக்கப்பட்டன. கொலைகளும் பலாத்காரங்களும் பகிரங்கமாக நடந்தது.


2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தலைவிரித்தாடிய குஜராத் இனப்படுகொலை. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது.கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.

நமக்கு பதறவே இல்ல காரணம் வீடியோ கேசட் வெளி வரவில்லை..

இன்னும் நிறைய இருக்கு.... தீவிரவாதம் ஆபத்தானது.அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது சீருடை பயங்கரவாதம். கா(வி)வல்துறை.

ஒரு உயிரை எண்ணி நெஞ்சம் பதறுவதாக இருந்தால் தீவிரவாதியா போலீஸ்காரனா என பாகுபாடில்லாமல் பதற வேண்டும்.

சிடி வந்தால்தான் வருத்தப்படுவாய் என்றால் உங்கள் உள்நோக்கம்தான் என்ன?

இசைப்பிரியா சிடி வருகிறவரை ஈழத்தை குறித்து ஒன்றும் தெரியாதென்றால் நீ மனுசனா...

தீவிரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதை கண்டிக்கும் யோக்யதை இங்கு எத்தனை பேரிடம் இருக்கிறது..

ஆனால் நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு ஒரு சிறுபான்மை சமூக மக்களை கட்டம் கட்டி ஒதுக்கும் அயோக்கியத்தனம் எப்படி சரியாகும்?

குஜராத்திலும், மலேகானிலும்  இன்னும் பல மாநிலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தியதை நினைவில் கொள்க. முதலில் உன்னை திருத்திக்கொள் (இரண்டுவிதமாக பார்க்காதீர்கள்) உலகம் தானாகவே சரியாகும்.

No comments: