Dec 13, 2015

படகோட்டி MGR போல அண்ணன் சீமான்!

சென்னை மழை நமக்கு நல்லதொரு படிப்பினையை தந்துள்ளது. மத மாச்சாரியங்கள் ஒழிந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது மனித நேயத்தில் தமிழர்களை யாரும் வெல்ல முடியாது என்பதை இந்த உலகிற்கு காட்டியது.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காது மவுனித்து இருந்த மக்களுக்கு தங்கள் படகுடன் வந்து மீனவர்கள் உதவினார்கள்.

மீனவர்களும், முஸ்லிம்களும் தான்  எங்களை காப்பாத்தினார்கள் என்று சென்னை நகர ஏழை முதல் பணக்காரர்கள் வரை ஒரே குரலில் கூறினார்கள்.

எல்லா அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், மழை வெள்ளம் ஓரளவுக்கு வடிந்த பின்னரே நிவாரண பணிக்குள் வந்தார்கள். ஆனால் மழை வெள்ளத்தால் மக்கள் சூழப்பட்டு திக்கு தெரியாது தவித்து கொண்டு இருக்கும் பொழுது சைலேந்திர பாபு தலைமையிலான கடலூர காவல்படையும், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் களத்தில் குதித்தன. மக்களை வீடுகளில் இருந்து படகுகளின் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சொல்ல உதவினர்.

அந்த பகுதி முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும், தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து வெள்ளத்தில் சென்று மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவாசிய பொருட்களை தந்து  மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தனர். முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதி, குண்டு வைப்பவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுபுத்தி தவறு என்பதை இத்தருணத்தில் இந்துக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பது உறுதி.

கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கிய தாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு செய்தனர் முஸ்லிம் அமைப்பினர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் என்ற பிஜேபி ஹிந்துத்துவா வெறியனுக்கு முகநூல் மற்றும் சோசியல் மீடியாக்களில் ஹிந்துக்களே சரியான செருப்படி கொடுத்தனர். 

பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா (PFI), சோசியல் டெமாக்ரடிக் பார்டி (SDPI), தமிழ்நாடு தவ்கீத் ஜமாத், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்கீத் ஜமாஅத், முஸ்லீம் லீக், ஆல் இந்தியா இமாம் கவுன்சில், காம்பஸ் ப்ரண்ட் ஒப் இந்தியா, நேசனல் உமன்ஸ் ப்ரண்ட், சிமி, ஜமாத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா சபை, JAQH, மேலும் சென்னை மசூதிகளின் ஜமாத்கள், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் என்று முஸ்லிம்களின் எண்ணற்ற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சேவை அமைப்புகளும் களத்தில் இறங்கி சென்னை, மற்றும் கடலூர் மக்களுக்கு நிவாரண பணிகளை தொடர்ந்து செய்தது வருகிறார்கள் என்பது இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூறத்தக்கது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படி முஸ்லீம்கள் தங்களது விகிதாசாரத்துக்கு அதிகமாக பங்கு எடுத்தார்களோ அது போல் சென்னை நிவாரண பணிகளில் முஸ்லிம்களின் பங்கு சிறப்புக்குரியதாக இருந்தது. முஸ்லிம்கள் எதிலும் பங்கு பெறமாட்டார்கள், ஒதுங்கி இருப்பார்கள் என்கிற அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி இருக்கிறது இந்த பணிகள். செய்திகளிலும், சோசியல் மீடியாக்களிலும் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்களின் சேவை பற்றிய பேசி பிரமிக்க வைக்கிறது. இதைபார்த்து வயிறு எறிந்த பாரதிய ஜனதா மற்றும் அரை டிரவுசர் ஆர்.எஸ்.எஸ். காரர்களும் தண்ணீர் வடிந்ததும் களத்தில் இறங்கி ஒப்புக்கு படம் காட்டினர்.

பி.ஜே.பி. தலைவர் தமிழ் இசை சவுந்தர் ராஜன் மக்கள் எல்லாம் கரண்டைக்கால் தண்ணீரில் நடந்து வரும்பொழுது இவர் வெறும் கையை வீசிக்கொண்டு படகில் ஒய்யாரமாக பவனி வந்தார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் உடம்பில் அழுக்கு படாமல் ஒப்புக்கு சில நிவாரணங்களை கொடுத்தனர். இந்து முன்னணி ராமகோபால ஐயர், இந்து மக்கள் கட்சி சம்பத், பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் யாரையும் இந்த பணிகளில் காணவில்லை. ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் எல்லோரும் களத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவாசிய பொருட்களை வழங்கி அவர்கள் உயிர்காத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

எல்லோரும் தலைநகர் சென்னையிலேயே கவனம் செலுத்திய பொழுது நம் தமிழர் கட்சி சீமான் மற்றும் அவரது கட்சி தோழர்கள் கடலூரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அண்ணன் சீமான் படகோட்டி எம்.ஜி.ஆர். போல மூங்கில் மரத்தால் செய்த படகில் தானே துடுப்பு போட்டு கொண்டு களத்தில் நின்றார் என்பதை மறக்கவும், மறுக்கவும் முடியாது.

*யாழினி*

1 comment:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/