Sep 20, 2018

காவிகளுக்கு மிரளும் காக்கி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த செப் 15-ம் தேதி தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளர் H.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச்ச ராஜா. தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை  நாயை விட இழிவாக நடத்துகிறார் ராஜா.
ஸ்டெர்லைட் போராட்டம், சேலம் எட்டுவழிச்சாலை போராட்டம் குறித்து கருத்து சொன்னவர்களை தேடித்தேடி கைது செய்த போலீஸ் ராஜா முன் பயந்து நடுங்குகிறது. சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மேலும் இவரை கைது செய்ய  2 தனிப்படைகள்  அமைக்கப்பட்டிருப்பது வேடிக்கையின் உச்சம். 
எச்ச.ராஜாவுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. அந்தப் போலீசாரை தமிழக போலீசுதான் ஷிப்ட் முறையில் அனுப்புகிறது. ஆக எச்ச எங்கே இருந்தாலும் தமிழக போலீசுக்கு தெரியாமல் இருக்காது. இந்நிலையில் 2 தனிப்படை வேறு எங்கே தண்ணி அடித்து விட்டு தூங்குதோ.  எஸ்.வி.சேகர் போல ராஜாவும் இனி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கும்வரை இப்படி நம்மை ஏமாற்றுவார்கள்.  

Sep 15, 2018

கலவர விநாயகர்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இந்து முன்னணி பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.  போலீசால் அறிவிக்கப்பட்ட ஊர்வல பாதையை விட்டு மாற்று பாதையில் ஊர்வலத்தை கொண்டு சென்று கலவரத்தை நடத்தினர். இது மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகரை கொண்டு காவிகள் கலவரம் செய்தனர். 

வருடம் தோறும் வட இந்திய ஆரிய பார்ப்பனர்களின் இறக்குமதியான பிள்ளையார் தமிழக வீதிகளில் கவர விநாயகராக வலம் வருகிறார். பிள்ளையார் வழிபாடு என்பது எப்படி தோன்றியது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் இயற்கை மற்றும் தங்கள்  முன்னோர்களை வழிபாடுபவர்களாக இருந்தனர். கைபர் போலன் கணவாய் வழியாக இந்திய பிரதேசத்தில் நுழைந்த வந்தேறி ஆரியர்கள் வளமும் செழிப்பும் மிக்க இந்த மக்களை வெல்ல சூழ்ச்சியை பயன்படுத்தினர். 

ஆரிய வந்தேறிகள் புதிய கடவுள் கொள்கையை அறிமுகப்படுத்தினர். அதை  நாளடைவில் மக்களை நம்பவைத்தனர். அந்த கடவுள்களுக்கு தங்களது பாஷையில் மந்திரம் சொன்னால்தான் புரியும் என்றும் சொன்னார்கள்.  கோவில்களில் மந்திரம் சொல்லி பூசை நடத்துகிறோம் என்று கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்கள். கோவில்கள் அவர்கள் வசம் என்பதால் மன்னர்களும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். மேலும் தாங்கள் உண்டாக்கிய கடவுள்கள் பற்றி கதைகளையும், புராணங்களையும் இயற்றினர். அந்த புராண இதிகாச அடிப்படையில் மனிதர்களை பிறப்பினால்  பிரித்தனர். 

பிராமணன் தலையில் இருந்து பிறந்தவன் மற்றவர்கள் மார்பில், வயிற்றில், காலில் இருந்து பிறந்தவர்கள் என்று உருவாக்கினர். இதன் அடிப்படையில் பிராமணன் உயர்ந்தவன் என்றும் அவனுக்கு சேவை செய்யவே மற்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றும் ஆக்கினார். சூத்திரர்கள் வேதம் படிக்ககூடாது, இரட்டை குவளை முறை, உயர்சாதிகாரர்கள் குடிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, அவர்கள் நடக்கும் வீதிகளில் நடக்க கூடாது, தொட்டால் தீட்டு, உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை அணிய கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, சிலைகளை தொட்டால் தீட்டு என்று பிராமணர்கள் அல்லாதோர் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தபட்டனர். இந்நிலையில் புத்தரின் சமத்துவ கொள்கைகள் மக்களிடையே வேகமாக பரவியது. மக்கள் புத்த மதத்தை அதிக அளவில் தழுவ தொடங்கினர். இனி நாம் ஆழ்வதற்கும், நமக்கு சேவை செய்யவும் அடிமைகள் இல்லாத நிலை உருவாகிவிடுமோ என்று பிராமணர்கள் அஞ்சத்தொடங்கினர். 

எப்படியாவது இந்த நிலையை சரிசெய்து வேண்டும் என்று பிள்ளையார் கதையை உண்டாக்கினர். பார்வதி குளிக்கும் போது தனக்கு பாதுகாவலுக்கு தன் உடலில் உள்ள அழுக்குகளை உருட்டி ஒரு படைப்பை உண்டாக்கினார். பிள்ளையாரை யாரும் தொடலாம், வெறும் மண், மாட்டு சாணி இப்படி எந்த பொருளாலும் பிள்ளையார் சிலைகளை யாரும் உருவாக்கலாம். இப்படி பிள்ளையாரை ஜனரஞ்சகம் ஆக்கி இதன் மூலம் மக்கள் மதம் மாறுவதை  தடுத்தனர். அதேநேரம் புத்த பிக்குகளை தூக்கிலிட்டும், எரித்தும் கொலைசெய்தனர். புத்த மடாலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதே பிள்ளையாரை வைத்தே இன்று கிருஸ்தவ, முஸ்லீம் மக்களை கலவரம் செய்து அழித்து ஒழிக்க பயன்படுத்துகின்றனர்.  

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எல்லா உயர்மட்ட தலைவர்களும் பிராமணர்களே! அதேபோல் பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்கள், முதல்வர்கள், கவர்னர்கள்  எல்லோரும் பிராமணர்களே. இனி வர்ணாசிரம கொள்கையை சொல்லி இந்துக்களை ஆள முடியாது என்று முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும்  பொது எதிரியாக்கி இதை கொண்டே அரசியல் நடத்தி ஆட்சியையும் பிடித்து விட்டனர். இதன் மூலம் இலாபம் அடையும் பணக்காரர்கள், உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், எல்லாருமே பிராமணர்கள். பேருக்கு ஒரு சிலரை மோடி போல் மற்றவர்களையும் தங்களோடு இணைத்து வைத்து கொள்வர். இதை புரியாத வரை மக்களாகிய நமக்கு கேடுதான். 

Sep 14, 2018

தமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை!

செப் 15/2018: தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.

தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைதான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. 
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். 

ரங்கசாமி ( ஆண்டனி) எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம். இப்படத்தில் இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நமக்கு இது படம் இல்லை பாடம். இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம். படத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை. தமிழ் சினிமாவுக்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு அற்புத படைப்பு இந்த மேற்கு தொடர்ச்சி மலை. தரமான படத்தை தந்த தமிழன் சேதுபதிக்கு வாழ்த்துக்கள். 
இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. தமிழர்களின் வாழ்வியல் முறையை விளக்கும் பதிவு. 
*மலர் விழி*

Sep 11, 2018

வீரத்தமிழச்சி சோபியா!

செப் 11/2018: தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த சாமி,  மனோகரி தம்பதியினரின் மகள் தான் சோபியா. தந்தை சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும், தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்தும் ஓய்வு பெற்றவர்கள். சோபியா பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்து, ஜெர்மனியில் M.Sc இயற்பியல், கனடாவில் M.Sc கணிதம்  முடித்து, தற்போது கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.
இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். புனேவில் சமூக செயற்பாட்டாளர்கள், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, சமூக போராளி வளர்மதி போன்றோர் பாசிச பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலி தமிழக அரசால் கைது  செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர் எழுப்பிய ஒத்தை குரல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்ததது.  இவரின் பாசிச பாரதிய ஜனதா ஒழிக என்ற குரல் மொத்த இந்திய மக்களும் இந்த அராஜக அக்கிரமகாரா மோடியின் ஹிந்துத்துவா சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சொல்ல நினைத்ததே.  இந்த வீரத்தமிழச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 
நட்புடன்: யாழினி   

விநாயகரே! வினை தீர்ப்பவரே!

பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!
பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!