May 20, 2010

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள். இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப் பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை.

இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள், ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் கைடுலைன் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. இத்தனைக்கு மேல் தொலைபேசி எண் தேவையில்லை என்பது வேறு விசயம்.

ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இந்தியா டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போட்டு தன் பார்பன உயர்ஜாதி புத்தியை வெளிபடுத்தி இருக்கிறது. இது போல் பெண்களை இழிவுபடுத்தி தான் பத்திரிக்கை விபச்சாரத்தை (வியாபரத்தை) பெருக்க இப்படி இழிபிழைப்பு நடாத்திவருகிறது.

வி.பி. சிங் இறந்தபோதும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் வி.பி. சிங்கின் உடலை எரித்து விட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி. சிங்குக்கே இந்த கதி என்றால் சோவியத் நாட்டு பெண்கள் விசயத்தில் கேட்கவா வேண்டும்.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்,திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் கொல்லப்பட்டார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இவர்களது பார்பன உர்ஜாதி ஹிந்த்துதுவா கிறுக்கர்கள் இந்தியாவை காட்டி கொடுத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள். தங்கள் தலைவர்களை போல் இந்த இந்தியா டுடே காரர்கள் பணத்துக்காக புகழுக்காக இதையும் செய்ய தயங்காதவர்கள்.

No comments: