Jul 23, 2010

கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் உடந்தையாக செயல்பட்டவர்களை பணி நிக்கம் செய்யவேண்டும்: PFI.

கடந்த ஜூலை 22, 2006ல் கோவை நுண்ணறிவுப் பிரிவு உதவி இணையர் ரத்தினசபாபதி மற்றும் காவல்நிலைய அதிகாரிகள் பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர் இணைந்து, "கோவையை தகர்க்க சதி, வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைது'' என திட்டமிட்டு வெடிகுண்டு நாடகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதும், மனித நீதிப்பாசறையின் மீதும் வெடிகுண்டுப் பழி சுமத்தப்பட்டது. மனித நீதிப்பாசறை அன்றே இதை மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த அநீதிக்கெதிராக போராடவும் களம் கண்டது. மனித நீதிப்பாசறையின் வீரியமிக்க ஸ்திரமான எதிர்ப்புக்குரலாலும், ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டத்தினாலும், சமூக நலனிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுத்துறை (எஸ்.ஒ.டி)க்கு மாற்றியது.

ஒரு வருட காலமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை மண்புமிகு நீதித்துறை நடுவர் மன்றம் எண் 7ல் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாலன் அவர்கள் இப்படிக்குறிப்பிடுகிறார். "பி13 போத்தனுர் காவல்நிலையத்தில் குற்ற எண் 1067/2006ல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (பி) உ/இ வெடிபொருட்கள் சட்டம் 1908 பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (F.I.R) வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவையாவும் ஜோடிக்கப்பட்டவை, மற்றும் பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெளிவாகத் தெரிய வருகின்றது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் மேற்கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கின்றேன்''.

சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்குழு ஒரு வருடகாலமாக விசாரித்து இவ்வளவு தெளிவாக இறுதி அறிக்கை அளித்த பின்பும், ஏ.சி. ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்படட மக்கள் சார்பாக நீதியை வேண்டியும் மனித நீதிப்பாசறை(தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தொடர்ந்து போராடி வருகிறது. முறைப்படி இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவையில் SIT அறிக்கையை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. 1172009 முதல் 2472009 வரை கோவை மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றோம். ஆனாலும் நீதி, அதிகார வலைபின்னலுக்குள் அமிழ்ந்து மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றது. ஏ.சி. ரத்தின சபாபதியோ அதே கோவை மாநகரில் பதவி உயர்வும் பெற்று அதிகாரியாக தொடர்ந்து வலம் வருகிறார்.

எந்த விசாரனையும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது எளிதாக ஒரு தீவிரவாத முத்திரையை குத்தமுடியும் என்ற நிலை தற்போது உள்ளது. எந்த தீவிரவாத செயல்களுக்கும் விசாரனை ஏதுமின்றி முஸ்லீம்களை குற்றப்பரம்பரையாக சித்திரிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. தேசிய அளவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளான மாலேகான், அஜ்மிர், சம்ஜவ்தா ரயில், கோவா, கான்பூர் போன்ற ஒரு நீண்ட பட்டியலில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனே முஸ்லிம்களை குற்றம் சாட்டி கைது நடவடிக்கைகளை காவல்துறை நிகழ்த்தியது. ஊடகங்களும் செய்திகளுக்கு காவல்துறையை மட்டுமே நம்பியிருந்தது. பின்னர் விசாரனையில் சங்க பரிவார் கும்பல் அனைத்து குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழகத்திலும் தென்காசியில் RSS அலுவலகத்தில் குண்டு வெடித்த போது முதலில் முஸ்லிம்களே குற்றவாளிகளாக பார்க்கப்பட்டு பின்னர் RSSதான் தன் அலுவலகத்தில் குண்டுவைத்ததாக விசாரனையில் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையை தான் ரத்னசபாபதி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். தெளிவாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்பும் அரசு இன்றுவரை ரத்னசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மிது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது என்று விளக்கம் தரவேண்டும்.

மேலும் எந்த தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லிம்களை உடனடியாக குற்றாவாறிகளாக பார்க்கும் காவல் துறையின் மனோபாவம் மாறவேண்டும். தீவரவாத செயல்களின் பின்னனியாக உள்ள காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஊடகங்கள் காவல்துறையினர் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்காமல் நடந்த சம்பவங்களை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பத்திரிக்கை தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் கேட்டு கொள்கிறது.
எமது கோரிக்கை

அரசு நியமித்த SIT-யின் அறிக்கையின் அடிப்படையில் வெடிகுண்டு நாடகம் நிகழ்த்திய ரத்னசபாபதியையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்ட அப்பாவிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று (ஜீலை 22) ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது. மேலும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களை ஒருங்கிணைத்து வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளோம். நீதிக்கான இப்போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களாகிய தாங்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து நீதிக்கான குரலை ஒங்கீ ஒலிக்கச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பத்திரிக்கை சந்திப்பில் கலந்து கொண்டோர்.

* மாநிலத் தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா
* மாநில பொது செயலாளர் அ.ஃபக்ரூதீன்
* மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப்
* மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஸிம்
* மாவட்ட செயலாளர் ஷாஹித்

No comments: