Oct 14, 2010

ராமனும் & ராமாயணமும் & அயோத்தியா தீப்பும் : ஒரு பன்முக ஆய்வு.


1) ராமபிரான் தெருவிலா பிறந்தார்???

ராமபிரானின் தந்தை தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதிலே கோசலை என்ற மனைவிக்குப் பிறந்தவர் தான் ராமபிரான். அயோத்தியாவை ஆட்சி செய்த தசரத சக்கரவர்த்தி எப்படியும் அயோத்தி மண்டலம் முழுவதும் பிரம்மாண்டமான அரன்மனையை கட்டித்தான் வாழ்ந்திருப்பார் என அனுமானிக்க முடிகிறது. ஆக கோசலையின் பிரசவம் நிச்சயமாக அரண்மனையின் ஒரு பகுதியில் தான் நடந்திருக்க வேண்டும். ஆக இராமன் பிறந்த இடம் அரண்மனை தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டவேண்டுமானால் அவர் தெருவில் அல்லது திடலில் தான் பிறந்திருந்தால் முடியும். ஒரு மஹா சக்கரவர்த்தியின் பிள்ளை எவ்வாறு தெருவில் அல்லது திடலில் பிறந்திருக்க முடியும்? அப்படி அரண்மனையில் பிறந்திருந்தால் அந்த இடத்தில் எப்படி கோவில் கட்டமுடியும்? அது அரண்மனையாகத் தான் இருந்திருக்கும். ஆனால் நம் நீதியரசர் சர்மா அவர்கள் முன்பு இருந்த பாபர் மசூதியின் நடு ஸ்தூபியின் கீழே தான் பிறந்தார் என தன்னுடைய தீர்ப்பிலே மிக உறுதியாக சொல்லியிருக்கிறார். ஒருவேளை நீதியரசர் சர்மா அவர்கள் ராமன் பிறந்த காலத்தில் அயோத்தியா அரண்மனையில் ஒரு சேவகராக இருந்து இப்போது மறுபிறவி எடுத்து இப்போது நீதிபதியாக வாழ்கிறாரா என யாரும் கேட்டு விடக்கூடாது.காரணம் அவர் தன் தீர்ப்பிலே குறிப்பிடும் விசயம் நாம் மேலே சொன்ன விசயத்தை உறுதிப்படுத்துவது போலத்தான் உள்ளது.

2) ராமபிரான் பிறக்கும் போதே கடவுளா?

ராமபிரான் பிறந்த இடத்தில் ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமானால் அவர் பிறக்கும் போதே கடவுளாக அறிவிப்பு செய்து விட்டுத்தான் பிறந்திருக்க வேண்டும். ஆனால் ராம்பிரானின் வாழ்க்கை முழுக்க முழுக்க சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருந்திருக்கிறது. கைகேயியின் சூழ்ச்சியால் 14 வருடம் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான் அங்கே தன் மனைவியை ஒரு அசுரன் கவர்ந்து செல்லும் விசயத்தை அறியாமல் இருக்கிறார். அதன் பிறகு கடத்தப்பட்ட தன் மனைவி சீதா தேவி இலங்கை அசுரன் ராவணனின் அரண்மனையில் தான் சிறைவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பதைக் கூட அவரது ஞானதிருஷ்டையால் அறிய முடியாமல் தனது மானசீக சீடரான அனுமனை அனுப்பி உலகம் முழுவதும் தேடச்சொல்கிறார். அனுமன் தன்னுடைய சக்தியின் மூலம் வானிலே பறந்து சென்று ஒரு வழியாக் இலங்கையில் இருக்கும் சீதாதேவியைக் கண்டுபிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இந்தச் செய்தியை ராமபிரானிடம் அறிவிக்கிறார்.

உடனே ராமபிரான் இராவணன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறார்.சாதாரண அனுமனால் கடலை பறந்து கடக்க முடிகிறது. ஆனால் ஒரு கடவுளாக கருதப்படும் ராமனால் பறக்க முடியவில்லை. எனவே இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணி இரவு பகலாக நடக்கிறது. இதெல்லாம் என் கற்பனையில் உருவான செய்தி அல்ல. முழுக்க முழுக்க இராமயண காவியத்தில் உள்ளவை தான். ஆக ஒரு சாதாரண அனுமனுக்கு உள்ள சக்தி கூட கடவுளாக கருதப்படும் ஒருவருக்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது.

அடுத்து வாலியின் விவகாரத்தைப் பார்க்கலாம். சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்த வாலியைப் பற்றி இராமனிடம் முறையிட வாலியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தினறுகிறார் இராமன். அதாவது வாலியை யார் நேருக்கு நேர் சந்தித்தாலும் அவருடைய சக்தியின் பாதியை வாலி கவர்ந்து விடுவான் என்பது தான் அது. அதனால் தான் பின்னால் மறைந்திருந்து கொல்ல முடிவெடுக்கிறார் ராமபிரான். முதற்கட்ட போர் துவங்குகிறது. ஆனால் ராமனால் வாலியைக் கொல்ல முடியவில்லை. காரணம் வாலியும் சுக்ரீவனும் ஒரேமாதிரி இருப்பதால் ராமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே இரண்டாவது சுற்றில் சுக்ரீவனின் கழுத்தில் ஒரு மாலையை அடையாளத்திற்கு போட்டு விட்டு வாலியைக் கொல்கிறார் ராமன். இது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும். ஆனால் கடவுளுக்கு எப்படி பொருந்தும்? அதனால் தான் சுக்ரீவனை வாலியோடு போர் செய்யச் சொல்லிவிட்டு மரத்துக்குப் பின்னால் நின்று வாலியைக் கொன்றதாக ராமாயணம் கூறுகிறது.

ஆக இந்த இடத்திலும் கடவுள் தன்மை அற்றுப்போய் விடுகிறது.

3) லவனும், குசனும் கடவுள்களா?

ராமன் 14 வருட வனவாசம், சீதை மீட்பு மற்றும் இராவணனின் சம்ஹாரம் ஆகியவற்றை முடித்து விட்டு மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறார் ராமன். ராமனின் பட்டாபிஷேகத் துடனேயே ராமாயணம் முடிவடைகிறது. அதன் பின்னர் தான் ராமனுக்கும் சீதா தேவிக்கும் லவனும் குசனும் பிறக்கிறார்கள். ஆக ராமன் கடவுளாக இருக்கும் பட்சத்தில் லவனும் குசனும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதுபோல எந்த ஒரு செய்தியுமே இல்லை.அதேபோல லவனும் குசனும் தன் தந்தையின் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் எந்த செய்தியுமே இல்லை.

4) முகலாயர்கள் குறித்து சில விசயங்கள்:

இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் 800 வருடம் ஆட்சி செய்தார்கள். அவர்களில் யாருமே இஸ்லாமிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள் என எந்த ஆதாரமும் இல்லை. முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னரே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தது. உதாரணமாக சேர நாட்டினை ஆட்சி செய்த சேரமான் பெருமாள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பும் வழியில் ஏமனில் உள்ள சலாலா என்ற இடத்தில் மரணம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் சேரமான் பெருமாள் ஹஜ்பயணம் மேற்கொள்ள செல்லும் வழியிலேயே மரணமடைந்தார் என்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டும் முரணாக இருந்தாலும் இஸ்லாம் மார்க்கத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்பது உண்மையே! ஆனால் அதன்பின்னர் இந்தியாவைக் கைப்பற்றிய முகலாய சாம்ராஜ்யத்தினர் யாருமே ஹஜ் பயணம் மேற்கொண்டதாக எவ்வித குறிப்பும் இல்லை. ஆக யாருமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. ஆக அவர்களின் நோக்கம் இஸ்லாத்தினை பரப்புவதை விட‌ முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம் மற்றும் சுகபோக வாழ்க்கையிலேயே இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

அதுமட்டுமின்றி முகலாய மன்னர் அக்பர் தனக்கென தனி மதத்தையே உருவாக்கினார். அந்த நேரத்தில் அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த விகடகவி பீர்பால் மன்னருக்கு மிக நெருக்கமாகவே இருந்தார். இந்த நிலையில் பாபர் ஒரு கோவிலை இடித்து விட்டு அதன் மீது மசூதி கட்டியிருந்தாலும் கூட அதை அக்பரிடம் எடுத்துச் சொல்லி அப்போதே நீதி கேட்டிருப்பார். அப்போது மன்னர் அக்பர் இஸ்லாத்திற்கு எதிராகத்தான் இருந்தார்.
அதன்பிறகு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிடம் முழுக்க முழுக்க பிராமண சமுதாயம் தான் அரசு அலுவலர்களாக இருந்தார்கள். அப்போதும் கூட அவர்கள் யாரும் இது போன்ற ஒரு வழக்கை வெள்ளையர்களிடம் கொண்டுவரவில்லை.

5) தீர்ப்பு குறித்து சில வரிகள்:

குறிப்பிட்ட இடத்தில் இருந்த மசூதியின் முக்கிய ஸ்தூபிக்கு கீழே தான் இராமர் பிறந்தார் என நீதியரசர் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார். கோவிலை இடித்து விட்டுத்தான் அதன் மீது மசூதியை கட்டினார்கள், எனவே அது மசூதிக்கு தகுதியானது அல்ல என இஸ்லாமிய அறிஞர்களை மிஞ்சும் அளவிற்கு பத்வா(சட்ட தீர்ப்பு) கொடுத்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக, தான் 3 வருடங்கள் கடுமையாக உழைத்தாகவும் தெரிவித்து இருக்கிகிறார். அதாவது சாமானியர்களாகிய நம்மாளேயே இவ்வளவு விசயங்களை ஆராயமுடிகிறது என்றால், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் நீதிபதிகள் இதை ஆராயாமல் எப்படி முடிவெடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. இதற்காகவா 60 ஆண்டுகள் காத்திருந்தார்கள். இப்படியான சமாதானம் அப்போதே ஆகியிருக்குமே என திணமனியின் தலையங்கள் தெளிவாக தெரிவிக்கிறது.

ஆனால் என்ன நிலை வந்தாலும் இஸ்லாமியர்கள் பொருமையாக அமைதி காப்பார்களேயன்றி எந்த நிலையிலும் தன் நிலை மறந்து மோசமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்க வேண்டும். அப்படியே உயர்நீதிமன்றமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தாலும் அதையும் மனதார ஏற்றுக்கொண்டு சகோதர சமுதாயத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் மீண்டும் இது போன்ற ஒரு நிலை வந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: எதிரொலி

No comments: