Jan 24, 2011

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை தெரியுமா??

சுதந்திரமடைந்தப் பன்முக இந்தியா இனவெறி, மதவெறியாளர்களின் கைகளில் சிக்கி குரங்கு கை மாலையாகியது. அறிவையும், நாகரீகத்தையும் விதைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி சுரண்டல் இல்லாத சட்டத்தை இயற்றி வளம்மிக்க இந்தியாவை உருவாக்கிய முஸ்லீம்களை மதவெறிப் பிடித்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு சலுகைளிலிருந்து கட்டம் கட்டுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வளம்மிக்க இந்தியாவை உலக வங்கியில் அடகு வைத்து விட்டனர்.

அரசு கேந்திரங்களில் ஒதுக்கப்பட்ட இடஓதுக்கீடு முதல் தேர்தல் காலத்தில் இருந்த ரிசர்வேஷன் முறையிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை சிறிது சிறிதாக உருவி எடுத்து பிளாட்பாரத்துப் பிச்சைக்காரர்களாகவும், அந்நிய தேசத்து அகதிகளாகவும் ஆக்கினர்.
தேர்தல் நெருங்கியதும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மதச்சார்பின்மை வேடமிடுபவர்கள் நடந்தது எதுவும் தெரியாததுப் போல் அவர்களை மீறி நடந்ததுப் போல் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு மீண்டும் அப்பாவி முஸ்லீம்களின் ஓட்டை அறுவடை செய்வதற்காக நாடகமாடுவர். பாபர் மஸ்ஜிதை இழுத்துப் பூட்டிய நேரு காலத்திலிருந்து நேற்று ஆப்பத்தைப் பிரித்துப் பங்கிட்டக் குரங்குகளின் கதையாய் தீர்ப்பு வழங்கிய சோனியா - மன்மோகன் சிங் வரை இந்த நாடகத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

வேவுப் பார்த்து வேட்டு வைத்தனர்: ராமர் சிலையை பள்ளிவாசலுக்குள் வைத்துவிட்டு ராமபிரான் அவதரித்து விட்டார் என்றுக்கூறி வேவுப் பார்த்தனர் மதச்சாதர்பின்மை அரசு இதைப் பார்த்துக் கொள்ளும் இதன் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அன்றைய முஸ்லீம்கள் அமைதிக்காத்தனர். முஸ்லீம்களிடம் எதிர்ப்பு இல்லாததைக் கண்டு உடனடியாக பள்ளியைப் பூட்டி சீல் வைத்தனர்.

நாளைய முஸ்லீம்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு பூட்டுடைக்கும் போராட்டம் வலுப்பெற்றால் நினைத்ததை சாதிக்க முடியாது என்றுக் கருதியவர்கள் இன்றைய முஸ்லீம்களின் எதிர்ப்பு இல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ராமபிரானை முஸ்லீம்களின் பள்ளிவாசலுக்குள் சிறை வைப்பதா ? என்று ராம பக்தர்கள் சீறிப் பாய்வதாக பொய்கூறி பூட்டைத்திறந்து பூஜைக்கு அனுமதித்தனர் அப்பொழுதும் மதச்சாதர்பின்மை அரசு இதைப் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அப்பாவி முஸ்லீம்கள் அமைதிக் காத்தனர்.

பாபர் மஸ்ஜித் விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்யவில்லை பிஜேபி காரர்களே சதி செய்வதாக பிரச்சாரம் செய்து வந்த மதசார்பின்மை வேடமிட்டு ஓட்டு அரசியல் நடத்திய காங்கிரஸாருக்கு எதிராக ஆம் நாங்கள் தான் செய்கிறோம் என்று மதம் சார்ந்த வேடமிட்டுப் களமிறங்கினர் பிஜேபி காரர்கள். இவர்களும் மதப் பற்றாளர்களோ, தேசப்பற்றாளர்களோ, தெய்வ பக்தியாளர்களோக் கிடையாது அரசியல் ஆதாயத்திற்காக அவர்களுக்கெதிரான வேடம் பூண்டனர்.

அன்றைய நரசிம்மராவின் உள்ளத்தில் உண்மையிலேயே காவிசிந்தனை குடிகொண்டிருந்ததால் கடப்பாறை சேவை செய்வதற்கு ர(த்)த யாத்திரையை தொடங்கிய அத்வானியை கைது செய்யவில்லை, அல்லது தடுத்து நிருத்தவில்லை. இதனால் பிஜேபி வளர்ந்தாலும், காங்கிரஸ் வீழ்ந்தாலும் பரவா இல்லை ஹிந்துக்களிடம் ராமஜென்மபூமிக்கான எழுச்சி ஏற்படட்டும் என்று விட்டு விட்டார்.

கடப்பாறை சேவைக்கான தேதி வரை அத்வானி வகையறாக்கள் அறிவித்தப் பின்னரும் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதாகக் கூறி கைது செய்யாமல் இதனால் இந்தியாவேப் பற்றி எரிந்தாலும் பரவா இல்லை பாபர் மஸ்ஜித் உடைந்தால் போதும் என்று மௌனம் காத்ததுடன் கடப்பாறை சேவை முடியும்வரை மாநிலப்போலீஸார் முழுவதையும் காவிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ரகசிய அனுமதி வழங்கினார். நரசிம்ம காவி ராவின் மௌனத்தை அறிந்த சங்பரிவாரங்கள் தடையின்றி பள்ளி நொறுங்கும் என்பதை முன்னமே அறிந்து வைத்திருந்ததால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பள்ளி நொறுங்கியதும் அதன் சூடு மாறுவதற்குள் முஸ்லீம் இனச் சுத்திகரிப்புக்கும், பொருளாதார சூறையாடலுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர்.

பள்ளி முழுவதும் நொறுங்கிய செய்தி அறிந்ததும் முஸ்லீம்கள் எதிர்த்து கலவரம் செய்வதாக பொய் காரணம் கூறி பம்பாய் ரவுடி பால்தாக்கரேயின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், சொத்துகள் சூறையாடப்பட்டன. வடிகட்டிய நரசிம்ம காவி ராவ் அதற்கும் வாய் திறக்க வில்லை. பெட்ரோலையும், ஃபாரின் கரன்ஸியையும் குவித்து உலக அரங்கில் இந்தியாவை இந்திராகாந்தி காலத்திலேயே உயர்த்திப் பிடித்த வளைகுடா நாடுகளின் மன்னர்கள் கடும் கண்டனத்தை எழுப்பியப் பின்னர் அதுவரை எதற்கும் வாய் திறக்காத ஊமைச் சாமி ராவ் சூடு பட்டப் பூனையாய் துடித்தெழுந்து ஐயகோ ! பெட்ரோலை நிருத்தி விடாதீர்கள் ஒரே வருடத்தில் இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித் தந்து விடுகிறோம் என்று கள்ள சத்தியம் செய்து கொடுக்க வெளிஉறவு அமைச்சரை அனைத்து அரபு நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்.

சொன்னது என்னாச்சி சிதையுடன் சேர்த்து எரிச்சாச்சி: அரபு மன்னர்களிடம் கள்ள சத்தியம் செய்த வாய் கோமாவில் வீழ்ந்ததும் எரிக்கப்பட்ட நரசிம்மக் காவி ராவின் சிதையுடன் மீண்டும் பள்ளியைக் கட்டித்தருவோம் என்ற வாக்குறுதியையும் சேர்த்தே எரித்து சாம்பலாக்கினர் காங்கிரஸார். இறுதி வேவு: ஒருப் பங்கு போதும் என்ற மனநிலையில் முஸ்லீம்கள் இருக்கின்றனரா ? என்று வேவு பார்க்கும் படலம் தான் சமீபத்திய அலஹாபாத் நீதிமன்ற குரங்கு ஸ்டைல் பங்கீடு. மேற்காணும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை.

மின்னஞ்சல் செய்தி: அதிரை பாரூக்.

No comments: