Jan 23, 2011

தமிழக மீனவர்களுக்கு ஆயூத பயிற்சி அளிக்கப்படுமா? அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சக்தி எது??

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இது இன்று மட்டும் இல்லை காலம் காலமாக இந்த அவலநிலை தொடர்கிறது. எந்த ஒரு தனி மனிதனுக்கோ அரசுக்கோ, இனவெறி, மதவெறி, மொழிவெறி என்பவை கூடாத ஒன்று.. இந்த அம்சம்களை கொண்ட அரசோ, தனி மனிதனோ, இயக்கங்களோ நிச்சயமாக தண்டிக்க படவேண்டியவர்கள், மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்டு ஒடுக்க படவேண்டியவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தகையவர்களுக்கு மக்கள் சிறந்த பாடம் புகட்ட வேண்டும். இந்தியாவில் பார்பன உயர்ஜாதிகாரர்களால் தாழ்தப்பட்ட மக்களும், ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் சிறுபான்மை மக்களும், இந்திய அரசு பயங்கரவாதத்தால் சிறுபான்மை மற்றும், ஏழை மக்கள் அடையும் துயரம்கள் எண்ணில் அடங்காதவை.

இந்த துயர சம்பவங்களை பார்க்கும் பொது மக்கள் தங்களது சொந்த பாதுகாப்பை தாங்களே முடிவு செய்யும் ஒரு காலம் வந்துவிட்டது என்பதையே நம்மால் பார்க்க முடிகிறது. இந்த கையாலாகாத அரசுகளை நம்பி மக்கள் காத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை வாழ் மீனவ மக்கள் தங்களது சொந்த பாதுக்கப்பை தாங்களே உறுதி செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது. இந்த சிங்கள பேரினவாத வெறியர்களை தமிழக மீனவர்கள் வெற்றி கொண்டார்கள் என்ற வரலாறு எழுதப்படும் காலம் தொலைவில் இல்லை. மக்கள் போராட்டத்தின் முன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணை கவ்வி விட்டன. தமிழக கடலோரம் கடல் தொழிலை நம்பி இருக்கும் ஏழை மக்களை கொன்று குவிக்கும் இந்த பயங்கரவாத சிங்கள அரசையும், அதன் ராணுவத்தையும் ஒழித்து கெட்டும் காலம் நெருங்கி விட்டது.

தமிழக மீனவ பெருங்குடி மக்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அவர்கள் வீரம் மிக்கவர்கள், விவேகம் நிறைந்தவர்கள், உடல் ரீதியாக பலம் வாய்ந்தவர்கள். நாம் எல்லாம் அஞ்சி நடுங்கும் கடலில் தினம் தினம் தங்களது உயிரை பயணம் வைத்து மீன்பிடிக்கும் வல்லவர்கள் இவர்கள். தூய்மையாக உழைத்து வாழும் மக்கள், யாரையும் சுரண்டி வாழ விரும்பாத மக்கள். தங்களது உயிரை பணயம் வைத்து உழைத்து பொருளீட்டும் சுத்த வீரர்கள். ஒரு சுனாமியை பார்த்து பயந்து கடல் கரை பக்கமே போகாமல் இருக்கும் மக்கள் நம்மில் எத்தனை பேர் நீங்களே அறிவீர்கள். சுனாமி முடிந்ததும் மறுநாளே கடல் தொழிலுக்கு போன ஒரு வீரம் நிறைந்த மக்கள் தான் மீனவ சமுதாயம். கடல்களில் வரும் பேரழிவு அலைகளை கண்டு அஞ்சாமல் உயிரை துச்சமாக நினைத்து தினம்தோறும் போராடி பொருள் ஈட்டும் இந்த மக்களுக்கு இந்த சிங்கள இனவெறி கூலிகளை எதிர் கொள்வது ஒன்றும் சிரமான காரியம் இல்லை.

எங்கு போனார்கள் நம் இன தலைவர்கள்? அரசியல்வாதிகள் யாரிடம் விலை போனார்கள்? தமிழக கடலோர மீனவ மக்களுக்கு தமிழக அரசு பயிற்சி கொடுக்குமா? அவர்களுக்கு ஆயூதம் கொடுக்குமா? என்ற கேள்விகள் நம்மிடம் தொக்கி நிற்கின்றன. இதில் தமிழக அரசு ஏதாவது செய்யும் என்றால் கோழை கருணாநிதிக்கு தனது குடும்ப சொத்தை, தனது பதவியை பாதுகாப்பதிலேயே காலம் முடிந்துவிடும்

நம் மத்திய அரசோ, நம் தேசிய அரசியல் வல்லுனர்களோ ஏதாவது செய்வார்கள் என்றால்? உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏன்? என்றால் கொல்லபடுபவர்கள் உழைக்கும் ஏழை மக்களாச்சே!. இதில் எப்படி அரசியல் பண்ணலாம் என்று தானே அரசும், கட்சிகளும் செயல்படும். நமக்கு ஒரு காவரி பிரச்சனையை , பாபர் மசூதி பிரச்சனை, தெலுங்கான பிரச்சனை, காஸ்மீர் பிரச்சனை, இட ஒதுக்கீடு பிரச்சனை, இதுவரை குப்பை குடைக்குள் போன கண்துடைப்பு கமிசன்கள் ரிப்போர்ட், இதுவெல்லாம் ஒரு படிப்பினை. இன்னும் இந்த பிரச்சனைகளை வைத்து எப்படி? அரசியல் பண்ணி கொண்டிருகிறார்கள் என்பதை வைத்து நீங்கள் இவர்கள் நேர்மையை புரிந்து கொள்ளலாம். சும்மா லாஜிக்க ஜனநாயகம் பேசி பிரோஜனம் இல்லை. இந்த சாககூடியது இந்த போலி ஜனநாயகவாதிகள் இல்லை அப்பாவி மக்கள்.

இவர்களை நம்பி எந்த பிரோஜனமும் இல்லை. இந்த சூழலில் இந்த பிரச்சனையில் மீனவ மக்களுக்கு உதவும் ஒரு சக்தி வேண்டும் அது யார்? நம் கண்முன்னே நிற்கும் கேள்வி? தமிழக கடலோர மீனவர்கள் பிரச்னையை மாவோயிஸ்ட் தோழர்கள் தங்களது கைகளில் எடுப்பார்களா? இதுவும் உழைக்கும் மக்களின் உயிரை குடிக்கும் சிங்கள பேரினவாத அரசின் வேலை தானே. அப்படியானால் மாவோயிஸ்ட் தோழர்கள் செயல்படும் காலம் வந்து விட்டது. அல்லது விடுதலை புலிகள் இதில் செயல்படுவார்களா? பொறுத்திருந்து பாப்போம். இவர்களில் யாராவது இந்த மக்களுக்கு ஆயூத பயிற்ச்சியும், சுயபாதுக்கப்புக்கு ஆயூதங்களும் வழங்கினால் இந்த பிரச்னையை நிரந்தரமாக தீர்வு உதவும். அதைவிட்டு விட்டு நாங்கள் கொலைகார ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி எல்லாம் சரி செய்து விடுவோம் என்று சொல்வதில் எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்கள் ஐ.நா விற்கே தண்ணி காட்டியவர்கள் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு. இந்த கருணாநிதி நீலி கண்ணீர் வடிப்பார், போராட்டம் என்பார், மத்திய அரசு சில அரசியல் மாய்மாலங்கள் செய்யும் இதுவே இனி இதில் மிட்ச்சை இருக்கிறது. கடலோர மீனவர்கள் தங்களுக்கு என ஒரு பாதுகாப்பு படையை அமைப்பதே இதில் சால சிறந்தது.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல் (சிந்திக்கவும்.நெட்).

இந்த பதிவை மக்கள் மன்றத்தில் சேர்க்க நம் தமிழ் இணையதள ஜம்பாவங்கள் உதவிடுவார்கள் என்று நம்புகிறேன். இந்த பதிப்பில் மாற்று கருத்து உடையவர்கள் கருத்து பகுதிக்கு எழுதலாம். உங்களது கருத்துகளுக்கு பதில் அளிக்கப்படும்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல் (சிந்திக்கவும்.நெட்).

No comments: