May 9, 2011

வெளிநாட்டு தீவிரவாதிகளா? உள்நாட்டு பயங்கரவாதிகளா?

May 09, இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி வி. கெ. சிங், ஒசாமா பின்லாதன் கொல்லப்பட்டதை தொடர்ந்து நம்மாலும் அதுபோல் நடவடிக்கையில் ஈடுபட முடியும் என அறிவித்து இருந்தார்.

இது இந்திய மற்றும் உலக அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சில பத்திரிக்கைகளில் பாகிஸ்தானிலிருந்து 800 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டம் என்ற செய்தியை பரப்பி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் ஜனநாயக அடிப்படையில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்த கம்யூனிச கட்சியை இல்லாமலாக்க புரூலியாவில் விமானங்கள் மூலம் ஆயூதம் போடப்பட்டது.

ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆயுத மழையை பொழியச் செய்த இந்தியாவின் மத்திய உளவு அமைப்பான RAW (Research and Analisis Wing )முழுமையாக இந்துத்துவ சிந்தனை கொண்டது.

ரா உளவு அமைப்பிலும், இந்திய ராணுவத்திலும் 80 சதவீதமான ஹிந்த்துதுவா சிந்தனை படைத்தவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

மேலும், இந்தியாவில் தொடர் குண்டுவெடிப்புகளை ஹிந்துத்துவா நடத்த, இதை வேண்டும் என்றே காவல் துறையும், உளவு அமைப்பும் முஸ்லிம்களின் மேல் இட்டுக்கட்டினார்கள்.

பின்னர் அந்த பயங்கரவாதத்திற்கு சொந்தக்காரர்கள் RSS என்கிற சங்கபரிவார் என்பதை தீவிரவாத தடுப்பு படையின் நேர்மையான அதிகாரி கார்கே கண்டுபிடித்தார். பாவிகள் அவரை சதி செய்து கொன்றனர்.

இந்திய தலைமை இராணுவ அதிகாரியின் பேச்சும், RAW உளவு அமைப்பின் ஹிந்த்துதுவா சிந்தனை இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது இதன் பின்னால் பெரும் சதி இருப்பதாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடர் கொண்டு வெடிப்புகளில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் தங்களது சரிந்து போன இமேஜை கட்டி எழுப்ப கலவரங்கள் நடத்த சதித்திட்டம் தீட்டுவதாகவே இதை பார்க்க முடிகிறது.

இவர்கள் அந்நிய தீவிரவாதிகளின் பெயரை சொல்லி ஆங்கங்கே குண்டுகளை வைத்து, அதை வைத்து கலவரம் நடத்தி நாட்டில் அமைதி இல்லை என்ற சிந்தனையை ஏற்படுத்தி தங்கள் ஹிந்து ராஜிய கனவை நினைவாக்க நினைகிரார்களோ என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசு இது விஷயத்தில் தீவிர கண்காணிப்பு செலுத்தவேண்டும். மத்திய, மாநில அரசின் எல்லா நிர்வாகங்களிலும் சிறுபான்மை சமூகங்களுக்கு உரிய விகிதாசாரம் வழங்குவதன் மூலமே இதை தடுக்க முடியும்.

குறிப்பாக ரா போன்ற உளவு அமைப்பில் சிறுபான்மை மக்களுக்கு ஊறிய சதவீத அளவில் இடம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இவர்கள் செய்யும் சதியை முறியடிக்க முடியும்.

இல்லையேல் பெரும்பான்மை என்னும் மமதையும் இடித்துரைக்க யாருமில்லாததால் ஏற்படும் தான்தோன்றித் தனமும் பாபரி பள்ளி இடிப்பு, குஜராத், ஒரிசா இன அழிப்பு போன்ற மாபாதகச்செயல்கள் நடக்க ஏதுவாக்கும்.

1 comment:

vijayan.k.s. said...

nalla kattukkathai.poyyai ithaivida siRappaaga kURamudiyumaa?