May 7, 2011

நரேந்திர மோடியின் ஆட்சி நல்லாட்சியா? ஒரு ஆய்வு!!

May 8, நரேந்திர மோடி இவர்தான் இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன் பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேக்கு சமமானவன்.

குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.

இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன்.

அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்தது, ஆர்.எஸ். எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கையால் உருவாக்கபட்டவன்.

குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நல்ல நிர்வாகமும் கிடைக்கிறதாம். நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம் இப்படி சிலர் கூறி திரிகிறார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் ஏதேனில், எது நல்ல நிர்வாகம்? ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?

தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?

அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?

மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் எத்தனை பேருக்கு தெரியும். ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான்.

மேலும் குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகம்.

கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். மத்திய அரசு அறிவித்த கல்வி உதவித்தொகை மோடி அரசு முஸ்லிம்களுக்கு புறக்கணித்து வருகிறது.

குஜராத் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தபடுபவர்கள் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யவேண்டி உள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.

குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.

இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?
மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள்.

மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் 'செய்தி' யாக்குகின்றனர்.

நாடு முழுவதும் மோடியின் புகழைப்பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளான். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறான்.

4 comments:

vijayan.k.s. said...

narenthira mOdiyai vimarsikka thaguthi vEndum

iniyan said...

fasism thantha sella pillai modiyai patri sariyaana vimarsanam ayiram murai unmaiyai urakka koorinaalum vijayan pondra hitlarin vaarisugalukku puriyaadhu ivargalukku puriyum ore mozhi avargal kaiyil vaithirukkum ayuthame gujarathil baathikkappatta muslimgal matrum dalithgal viraivil aayutham eduppaargal varalaatrai utru nokkinaal idhai unara mudiyum

மர்மயோகி said...

மிகவும் சரியாக சொன்னீர்கள்..
இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்கள் மட்டும்தான் மனித இனம் போலவும், குஜராத்தில் இந்த பயங்கவாத மிருகம் மோடியினால் அழிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல எனபது போலவும் இங்குள்ள சில தேச துரோகிகள் ராஜபக்சேயை மட்டுமே சாடி வருகின்றனர்.
உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க வக்கில்லாத கூட்டம் இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து வருகின்றன..

மோடியின் புகழ்பாட அரசியல் கோமாளி சோ இருக்கிறான். அவனது வழிகாட்டுதலின் பேரில் ஜெயலலிதாவும் அந்த மிருகத்தை பதவியேற்ப்பு விழாவுக்கு அழைத்திருக்கிறது.
ஒரு அரசு விழாவில் ஒரு பயங்கவாதி கலந்துகொள்ளலாமா?
ராஜபக்ஷே கலந்து கொண்டால் இங்குள்ள தேச துரோகிகள் எவ்வளவு போராட்டம் நடத்தி இருக்கும்..?

சோழன் said...

தம்பி மர்மயொகி நீ சொல்றதல்லாம் சரி மொதல்ல நீங்க எங்கவாழ்ந்தழும் மொழிபற்று இனபற்றோடு வாழபழகுங்குக தமிழன்,இந்தியன்,என்று சொல்ல உங்க நாக்கல்லம் கூசுதே ஏன் தம்பி ....