May 25, 2011

மன்மத லீலையை வென்றார் உண்டோ!!

May 25, தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார்.

இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் விழுந்தால் விழுந்தால் அம்பி சட்னிதான்.

திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம்.

வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.

இத்தனை அம்பலப்பட்ட பிறகும் ஒரு மோசடிக்காரன் தனது காவி சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் எந்தப் பழுதுமில்லாமல் கட்ட முடிகிறது என்பதுதான் நாம் கவலைப்படத்தக்க ஒன்று.

ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம்.

இப்படி சக்தி உள்ள இந்த அம்பி அந்த பலான வீடியோவை அதுவும் படுக்கை அறைக்குள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காமராவை கண்டுபிடிக்க முடியவில்லையே? ஆய் போய்விட்டு கழுவத் தெரியாதவன் சூரியனுக்கு பேன் பார்த்த கதைதான்.

ஆனாலும் இந்த பொறுக்கி சாமியாருக்கு பணக்கார முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் எந்தக் குறையுமில்லை. கோயம்பேட்டில் மூட்டை தூக்கினால்தான் மூன்று வேளை சோறு என்று இந்த ஜன்மத்தை விட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தியிருக்கும்.

அதை விடுத்து இன்னமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாலாட்டு பாடும்போது நித்தியின் திமிர் புடைத்துக் கொண்டுதான் இருக்கும்.

5 comments:

joh said...

supper ungal post. ivanukala ellam nikka vachchu sudanum

Anonymous said...

rendu sengala eduthu apdiye kara karanu.... theichuttaa sariyayidum.

Anonymous said...

THESE CRIMINALS WILL NEVER EXIST IF WISE HINDU BROTHERS TAKE NECESSARY ACTION. BECAUSE THEY ARE CHEATING AND CRIMINALIZING IN THE NAME OF HINDU RELIGION.

BUT WHO WILL CORRECT THE MONEY MONGERING NEWSPAPERS AND MAGAZINES WHO GAVE HUGE FASCINATION TO THESE KIND OF CRIMINALS TO MAKE MONEY.

FAITH SHOULD NOT BLIND THE WISDOM.

இது போன்ற குற்றவாளிகளை துடைத்தெறிய நற்சிந்தனை உள்ள இந்து சகோதரர்கள் முன் வரவேண்டும். ஏனெனில் இவர்கள் மதத்தின் பெயரால் இந்த அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர்.


ஆனால் காசாசை பிடித்த பத்திரிக்கைகளையும், வாரச்சஞ்சிகை நடத்துபவர்களும் இந்த குற்றவாளிகளுக்கு கொடுக்கும் விளம்பரத்தை யாரால் தடுக்க முடியும்?

எப்படியாயினும் நம்பிக்கை அறிவை குருடாக்க அனுமதிக்கக் கூடாது.

MOHAMED THAMEEM

Anonymous said...

This scoundrel has given interview to Aananda Vikadan again and said that he is going to do some miracle (black magic) to fly a matter for 2500 kilor meters.

Please dont advertise this erratic Guru. It is not legitimate and he himself too.

- MOHAMED THAMEEM

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...