May 25, 2011

யாழினியின் கருத்து பதிவாகிறது!!

வணக்கம்,.. நான் யாழினி.. உங்களது ஆக்கம் படையப்பா..படுத்திரியப்பா! நண்பர்களது மின்னஞ்சல் மூலமாக எனக்குக்கிடைத்தது.

எனது மனவேதனைகள், கேள்விகள் அனைத்தையும் அதில் கண்டேன். மிக்க நன்றி!
மே 18 அன்று எத்தனைபேர் ஒரு துளி கண்ணீர் சிந்தியிருப்பார்கள், கொல்லப்பட்ட நம்தமிழ்மக்களுக்காக?

வியர்வைசிந்தி உழைத்த உழைப்புக்கு .... உகந்த கூலி கேட்ட குற்றத்திற்காக பிள்ளை குட்டிகளோடு எரித்துக்கொல்லப்பட்ட வெண்மணி விவசாய தொழிலாளர்கள்.., நினைத்தேனும் பார்த்ததுண்டா?

மக்கள் விட்டில்களாகிப்போயினர்... வெள்ளி த்திரையின் வெளிச்சம் மட்டுமே இவர்கள் கண்ணுக்குப்புலனாகிறது. அங்கும் உழைப்பவர் நிலை உயர்வதில்லை... இதுதான் உண்மை.

மே 18 அன்று ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. இறந்த நம் சொந்தங்களுக்காக ஒரு இரங்கல் தெரிவிக்கக்கூட மனமில்லை யாருக்கும். நாங்கள் செய்த பாவமென்ன? தமிழனாய்ப் பிறந்ததா ?

மனிதப்பிறவி என்றெடுத்தால் தமிழனாய்பிறப்போம்... ஆயிரம்முறை! நான் சில இணைய தளங்களில் எழுதி வருகிறேன். ஈழதமிழர் பிரச்சினைக்காக கையெழுத்து இயக்கம் நடப்பது குறித்தும், அஞ்சலி செலுத்தக்கோரியும் எழுதினேன்.

அதற்க்கு எனக்கு கிடைத்தபதில் புறக்கணிப்பும்,"நீங்க இலங்கை தமிழரா?" என்ற கேள்வியுமே. மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா ஈழப்படுகொலைகள்? எனது மனத்தாங்கலைப் பகிர்ந்து கொண்டேன். நன்றி!

நட்புடன்..யாழினி..
உயிர்வதை பாவமென்ற புத்தனின் மண்ணில்
புதைந்து மடிந்தன பல்லாயிரம் உயிர்கள்..
ஈசலும் உயிர்தானே ...? ஈழவன் உயிரில்லையா ...?
பிஞ்சும் அஞ்சும் பத்தும் ...அம்பதும் அறுவதும் ..ஆணும் பெண்ணும்
பேதம் தெரியவில்லை பிணக்குவியலில்
.
இனம் காக்க இறந்துபட்டீரே எம்உறவுகளே
மிஞ்சினோம் நாங்கள் உங்களின் தியாகத்தால் .
மாவீரர்கள் அஞ்சவில்லை ...சாவைக்கழுத்தில் கட்டிக்கொண்டும் சிரித்தனர்
மக்களே ...வாழ்ந்த பொழுதிலெல்லாம் மானத்திற்கும் மரணத்திற்கும்
அஞ்சியஞ்சிச்செத்தீரே... உங்கள் உயிர்பட்டபாட்டை இப்போதுதான் அறிந்ததாய் அறிவிக்கின்றன ஊடகங்கள்.
கந்தக நெருப்பில் கருகிய எம்மக்களே...
கண்ணீர் சொரிகிறோம் உங்கள் காயங்கள் ஆறுதற்கு.
இனியொரு துயரம் எவர்க்கும் வேண்டாம்...உலகோரே வேண்டுகிறோம்.
உங்களின் ஒவ்வொரு துளிக்கண்ணீரும் கரைக்கக்க்கூடும் அகந்தை மனங்களின் கறைகளை நீங்கள் ஏற்றும் தீபத்தினொளியில் தெரியட்டும்யாவர்க்கும் எங்கள் இனத்தின் துயரம் விடியல் தேடிக்காத்திருக்கிறோம்...விடிவது உங்கள் கையில்.
சிந்திக்கவும்: சகோதரி யாழினி அவர்கள் படையப்பா ...... படுத்திரியப்பா!!என்ற எமது பதிப்பிற்கு மின்னஞ்சல் வழியாக தனது கருத்தை சொல்லியிருந்தார்.

அவரது நியாயமான மன ஆதங்கத்தை, கருத்தை, சிந்திக்கவும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அதை ஒரு பதிவாக உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
உங்கள் மின்னஞ்சல் பார்த்து எனது கண்கள் அழுதன, தமிழச்சி புலியை முரசால் அடித்த வரலாறு படித்திருக்கிறேன்
. இப்பொது உங்கள் எழுது வடிவில் அதை பார்கிறேன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தை மக்கள் மத்தியில் கெண்டு சேர்த்து பயங்கரவாதி ராஜபசேக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்ட எம்மால் இயன்ற அளவு இந்த சிந்திக்கவும் இணையதளத்தில் எழுதி வந்துள்ளோம்.
உலகில் பாதிக்கப்படும் மக்களுக்காக, அவர்கள் எந்த மொழியாக இருந்தாலும், எந்த மதமாக, இனமாக இருந்தாலும் அவர்ளது குரலாக SINTHIKKAVUM இணையத்தளம் தொடர்ந்து பதிவுகளை இட்டு வந்துள்ளது.
அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள், உழைக்கும் பாட்டாளி மக்கள், மற்றும் அரசு பயங்கரவாதத்திற்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளது.

கலங்காதே சகோதரியே!! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வுண்டு. இது முடிவல்ல துவக்கம். உலக வரைபடத்தில் ஒரு புல்லிமாதிரி தெரியும் இலங்கை தீவில், அதுவும் சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் இனம், தனது மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை இழந்து நிற்கிறது.
அந்த மக்கள் சிந்திய இரத்தத்திற்கு நிச்சயம் விலை உண்டு. கலங்காதே சகோதரி! நிச்சயம் காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது
. பெரும் பெரும் சாம்ராஜ்யங்கள் எல்லாம் மண்ணை கவ்வி விட்டன. நிச்சயம் சிங்கள பேரினவாதிகள் வரலாற்றின் முன்னே படிப்பினை பெறுவார்கள், தண்டிக்கபடுவார்கள், அல்லது தண்டிப்போம்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

4 comments:

Anonymous said...

சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை. எப்படி துடித்திருக்கும் அம்மக்களின் இதயங்கள்.
கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன.வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின்
சத்தங்கள். தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள். தாயும் தந்தையும் சென்ற இடம் தெரியாமல் யாரிடம் சென்று அபயம் தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சின்னஞ்சிறார்களின் காட்சி. துப்பாக்கிய நீட்டிய துன் மார்க்கர்களின் கையில் கிட்டிய அபலை பெண்கள்.
நீதிக்கு தலைவனே! நீதி செலுத்து.

குஜராத்தில் கொல்லப்பட்டனரே. வீடுகளுக்குள் பூட்டி காஸ் சிலிண்டர்களை திறந்து எரித்து கரிக்கட்டையாக்கினரே அந்த உயிர்கள் எப்படித் துடித்திருக்கும். தனக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத வயிற்றிலிருந்த சிசுவை வயிறு கிழித்து எடுத்து ஈட்டியால் குத்தி நெருப்பில் வாட்டினானே. எப்படி செய்ய முடிந்தது? நடந்த இந்த நிகழ்வை, மிருகங்கள் கூட அதிசயிக்கும் இப்படி இவர்களை வழி நடத்துபவர் யார்? இவர்களுடன் பேசிச்சிரித்து, விருந்துண்டு, விழாக்களில் கலந்துகொண்டு, கூடி, குழவி.... எப்படி முடிகிறது இவர்களால்?

ஒரிசாவிலே பால் மனம் மாறா பாலகர்களிருவரை தந்தையுடன் சேர்த்து வாகனத்தில் எரித்துகொன்றனரே! வாகனத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் வெப்பம் உணர்ந்து சிறு பட்சிகள்போல் பட படத்து வெளியேறத் துடித்த பொழுது, அந்த வாகனத்தினுள்ளே தனக்கும் தன் அன்புக்குழந்தைகளுக்கும் நேரும் பயங்கரத்தை உணர்ந்து உடல் வேதனையும், தன் குழந்தைகளுக்கு நேரும் மரணத்தின் வலியை போக்க வெளியே பாயும் அந்த தகப்பனையும், சிறு குழந்தைகளையும் கோடாரிகளைக் கொண்டு தாக்கி வெளியேறவிடாமல் உள்ளேயே சுட்டுப்போசுக்கிய அந்த பயங்கரவாதிகளைவிடவா வேறு பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் இருக்க முடியும்?

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசுகளும், ஆள்பவர்களும் செய்யும் வன் கொடுமைக்கும், கொலைக்கும், சித்ரவதைக்கும் மனிதமுள்ள மக்கள்தான் முடிவு கட்டவேண்டும். பேரினவாதம் செய்யும் கொடுமைகளை இந்திய செய்தித்துறையும், பத்திரிகைத்துறையும் கண்டுகொள்ளக்கூடாதென்று சத்தியம் செய்துகொண்டதுபோல் தெரிகிறது. சுய உணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அநியாயத்திற்கு பொறுப்பாவான். செய்தி குழுமங்களே! நீங்கள் பன்மையாய் இருக்கும் பட்சத்தில், உங்களின் தனி நபர் பொறுப்பு குறைந்துவிடுமென்று வாலாதிருக்கவேண்டாம். அநியாயத்தை கண்டும், காணாதிருக்கும் உங்களின் அநியாயத்திற்கு துணை போகும் பண்புக்கு பகரமாக உங்களின் குடும்ப வாழ்க்கையில் கூட இறைவன் நிம்மதி இல்லாமலாக்கலாம். அல்லது மற்றவருக்கு நடந்த அதே போன்ற அநியாயங்கள் சோதனையாக உங்கள் குடும்ப நபருக்கே விளைவிக்கப்படலாம்.

அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஓன்று திரட்ட வேண்டும். யாரும் யாரையும் அடக்கியாளக்கூடாது. தீரமிக்க, மனித நேயமிக்க நல்ல அரசுகள் வரவேண்டும். மனிதம் நிலைத்திருக்கவேண்டும்.

அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும்.
- MOHAMED THAMEEM

தன்னால் செய்விக்கப்பட்ட அந்த ஈவிரக்கமற்ற செயலை எப்படி இரசித்து, சிரித்து அசை போட்டு பார்க்க முடிகிறது இவர்களால்? இவர்களின் இந்த ஈனச்செயலால் இவர்கள் கொண்ட மத நம்பிக்கையையும் சந்தேகம் கொள்ள செய்கிறது.

அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். - MOHAMED THAMEEM

Anonymous said...

சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை. எப்படி துடித்திருக்கும் அம்மக்களின் இதயங்கள்.
கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன.வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின்
சத்தங்கள். தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள். தாயும் தந்தையும் சென்ற இடம் தெரியாமல் யாரிடம் சென்று அபயம் தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சின்னஞ்சிறார்களின் காட்சி. துப்பாக்கிய நீட்டிய துன் மார்க்கர்களின் கையில் கிட்டிய அபலை பெண்கள்.
நீதிக்கு தலைவனே! நீதி செலுத்து.

குஜராத்தில் கொல்லப்பட்டனரே. வீடுகளுக்குள் பூட்டி காஸ் சிலிண்டர்களை திறந்து எரித்து கரிக்கட்டையாக்கினரே அந்த உயிர்கள் எப்படித் துடித்திருக்கும். தனக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத வயிற்றிலிருந்த சிசுவை வயிறு கிழித்து எடுத்து ஈட்டியால் குத்தி நெருப்பில் வாட்டினானே. எப்படி செய்ய முடிந்தது? நடந்த இந்த நிகழ்வை, மிருகங்கள் கூட அதிசயிக்கும் இப்படிப்பட்ட இவர்களை வழி நடத்துபவர் யார்? இவர்களுடன் பேசிச்சிரித்து, விருந்துண்டு, விழாக்களில் கலந்துகொண்டு, கூடி, குழவி.... எப்படி முடிகிறது இவர்களால்?

தன்னால் செய்விக்கப்பட்ட அந்த ஈவிரக்கமற்ற செயலை எப்படி இரசித்து, சிரித்து அசை போட்டு பார்க்க முடிகிறது இவர்களால்? இவர்களின் இந்த ஈனச்செயலால் இவர்கள் கொண்ட மத நம்பிக்கையையும் சந்தேகம் கொள்ள செய்கிறது.

ஒரிசாவிலே பால் மனம் மாறா பாலகர்களிருவரை தந்தையுடன் சேர்த்து வாகனத்தில் எரித்துகொன்றனரே! வாகனத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் வெப்பம் உணர்ந்து சிறு பட்சிகள்போல் பட படத்து வெளியேறத் துடித்த பொழுது, அந்த வாகனத்தினுள்ளே தனக்கும் தன் அன்புக்குழந்தைகளுக்கும் நேரும் பயங்கரத்தை உணர்ந்து உடல் வேதனையும், தன் குழந்தைகளுக்கு நேரும் மரணத்தின் வலியை போக்க வெளியே பாயும் அந்த தகப்பனையும், சிறு குழந்தைகளையும் கோடாரிகளைக் கொண்டு தாக்கி வெளியேறவிடாமல் உள்ளேயே சுட்டுப்போசுக்கிய அந்த பயங்கரவாதிகளைவிடவா வேறு பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் இருக்க முடியும்?

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசுகளும், ஆள்பவர்களும் செய்யும் வன் கொடுமைக்கும், கொலைக்கும், சித்ரவதைக்கும் மனிதமுள்ள மக்கள்தான் முடிவு கட்டவேண்டும். பேரினவாதம் செய்யும் கொடுமைகளை இந்திய செய்தித்துறையும், பத்திரிகைத்துறையும் கண்டுகொள்ளக்கூடாதென்று சத்தியம் செய்துகொண்டதுபோல் தெரிகிறது. சுய உணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அநியாயத்திற்கு பொறுப்பாவான். செய்தி குழுமங்களே! நீங்கள் பன்மையாய் இருக்கும் பட்சத்தில், உங்களின் தனி நபர் பொறுப்பு குறைந்துவிடுமென்று வாலாதிருக்கவேண்டாம். அநியாயத்தை கண்டும், காணாதிருக்கும் உங்களின் அநியாயத்திற்கு துணை போகும் பண்புக்கு பகரமாக உங்களின் குடும்ப வாழ்க்கையில் கூட இறைவன் நிம்மதி இல்லாமலாக்கலாம். அல்லது மற்றவருக்கு நடந்த அதே போன்ற அநியாயங்கள் சோதனையாக உங்கள் குடும்ப நபருக்கே விளைவிக்கப்படலாம்.

அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஓன்று திரட்ட வேண்டும். யாரும் யாரையும் அடக்கியாளக்கூடாது. தீரமிக்க, மனித நேயமிக்க நல்ல அரசுகள் வரவேண்டும். மனிதம் நிலைத்திருக்கவேண்டும்.

அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும்.

- MOHAMED THAMEEM

Anonymous said...

யாழினியின் உருக்கமான படைப்பு படித்த என் உள்ளம் படும் வேதனை சொல்லி மாளாது. இந்த சிங்கள காட்டேரிகளை கூண்டில் ஏற்றவேண்டும்.