Jun 16, 2011

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர்!

கன்னிகா தானமாம்!
பேர் தான் தானம் ..
செய்ததென்னவோ கடன்வாங்கிக்
கல்யாணம்...

குருதட்சணை கேட்டவனே
கட்டைவிரல் மட்டும் கேட்டான் ,
வரதட்சணை வாங்கியவனோ ,
கற்றவித்தையோடு காலம் முழுதையும்
தனக்கென வாங்கிக்கொண்டான் !

எத்துணை தான் கற்றாலும் பெற்றாலும் ,
தானத்திலும் தட்சணையிலும் தன்னையிழந்த
ஏகலைவன் பரம்பரையின்
ஏக்கப்பெருமூச்சு...

வேர்கள் எவ்வழியோ ..
விழுதுகள் நாங்களும் அவ்வழியே !!!
புண்பட்டாலும் பண்பாட்டிற்காய்
பக்குவப்படுத்திக் கொள்கிறோம்.

“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”,

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்காக இங்கே தருகிறேன்.

எட்டுவயது பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்துவிட்டது என்றேனே.. மநு எப்படி விளையாடும்?...

மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண்குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!... என்ன சொல்கிறார் இவர்?... என்ற கேள்வி எழுகிறதா?...

ஆமாம்... விளையாடிய குழந்தையை சீவி சிங்கரித்து அம்மா கூப்பிடுகிறாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை... பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?

கிடையவே கிடையாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளை யெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கிறார்களே... அதற்காகவா?...முற்றிலும் கிடையாது... மணப் பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.

என்னது... எட்டு வயதுப் பெண்தான் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? இதுதான் மநுவின் விளையாட்டு மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கிறது.

-யாழினி-

4 comments:

vignaani said...

மனுவிற்குப் பிறகு எவ்வளவோ சிந்தனையாளர்கள் வந்து, பழைய சிந்தனைகளை மாற்றி
புதிய வழக்கங்களை, விதிமுறைகளை, வழக்கில் கொண்டு வந்து விட்டன. உதாரணத்திற்கு திருமண வயது இப்போது தொண்ணூற்று ஒன்பது
விழுக்காடு பதினெட்டிற்கு மேலேயே நடக்கின்றன; ராஜஸ்தானில், உத்தர் பிரதேசத்தில் ஓரிரு திருமணங்கள்
பதினைந்து வயதில் நடக்கலாம். அதே போல் தான் விதவை மறு மணமும் .
நாம் பதிய வேண்டியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு கூறிய அபத்தங்கள் என்ன
என்பது அல்ல; பின் வந்த காலங்களில் இந்துக்கள் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தம் செயல்களை, நடை முறைகளை
மாற்றிக் கொண்டார்கள் என்பதே. இன்னும் பல மாற்றங்கள் வரவேண்டும்
என்றிருக்கலாம். அதற்கு முயல்வோம்.
எனினும், குர்ஆனில் சொன்னது தான் இறுதி விதி,
இடைப்பட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் அறிவியலிலும், சமூகவியலிலும், மாற்றங்கள் வந்துவிட்டாலும், குரான் அந்த கால கட்டத்த்ற்கு ஏற்றபடி சொன்னவற்றை இந்த கால கட்டத்தில்
மீள் பார்வை செய்வது தவறு;
அதில் சொன்ன படியே இப்போதும் செய்வோம் என்று சொல்லும்
இஸ்லாமியர்களை விட இந்துக்கள் மேல்
என்ற உண்மையைக் கூறுங்கள்.
இல்லை பகுத்தறிவுப்பாசறை இந்துக்களிடையே ஒரு காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களை மீண்டும் மீண்டும் அலுக்காமல் சொல்லுமே தவிர, இஸ்லாமிலும், கிருத்தவர்களிலும் இன்றும் உள்ள மூட அணுகுமுறைகளைப் பற்றி சொல்லக் கூடாதா?

மதுரை சரவணன் said...

sinthikka thoondum pathivu thaan... vaalththukkal

Anonymous said...

தோழரே மநு என்பதை கொண்டுவரவே ஹிந்துத்துவா விரும்புகிறது. இங்கு என்னபதிவு எழுதப்பட்டுள்ளதோ அது குறித்து உங்கள் விளக்கத்தை கொடுத்தால் நல்லது. யாழினி மனுதர்மம் குறித்து எழுதி உள்ளார். நீங்கள் அப்படி மனுதர்மத்தில் இல்லை என்று ஆதாரத்தோடு வாதிடுங்கள் அதை விட்டு விட்டு இஸ்லாத்தை, கிறிஸ்துவத்தை பற்றி நீங்கள் உங்கள் காழ்புணர்வை சொல்வது பொருத்தமாக இல்லை. மநூதர்மத்தை குறித்து சொன்னால் நீங்கள் அதற்க்கு பதில் சொல்லவதை விட்டு விட்டு ஏன் இஸ்லாத்திற்கும், கிரிஸ்தவத்திற்கும் போகிறீர்கள். இது உங்கள் தனிப்பட்ட கால்புனர்வையே காட்டுகிறது.

vignaani said...

மனுவை தூக்கி எறிந்தும் பல மைல் தூரம் வந்து விட்டார்கள் இந்துக்கள் என்பதே நான் சொல்வது.
எட்டு வயது பெண்ணுக்கு திருமணம் என்று மனுவை சுட்டுவது பதிவு. அதை நூற்றாண்டு காலமாக நிறுத்தி விட்டார்களே; அதை என் எழுதுகிறீர்கள்
என்று தான் கேட்கிறேன். விதவை மறுமணம் கூட அதே போல் தான்; மனுவை தூக்கி எறிந்தாயிற்று. எனக்கென்னவோ ஆர் எஸ் எஸ் தூக்கி எறிந்தாலும், (அவர்கள் செய்ய மாட்டார்கள்; ஆனால் பல மாற்றங்களை மெளனமாக அங்கீகாரம் வழங்கி விட்டார்கள் ) பகுத்தறிவு வாதிகள் அதை பேசி பேசியே காலத்தை ஓட்டுவதில் இருந்து மாற மாட்டார்கள். (இஸ்லாமியத்தையும் கிருஸ்தவத்தையும் சுட்டிக் காட்டியதும் அவர்கள் தம் மனுவிடமிருந்து மாற விரும்பவில்லையே என்பதால் தான்)