Jun 28, 2011

தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம்! மமக!

JUNE 29, சென்னை : ""மனிதநேய மக்கள் கட்சியை வலுப்படுத்துங்கள் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

மத, இன பாகுபாடுகளை ஒழித்து தமிழக மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்க பட்ட கட்சிதான் ம.ம.க. என்றார் அவர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்.

எல்லா தரப்பு மக்களுக்கும் வேண்டி இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் நடத்தி வருகிறோம். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.

பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம்.  இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம்.

4 comments:

ஜாபர்,அபுதாபி said...

பணதிமிரும்,பதவியும் ஆலுங்கட்சியின் ஆதரவும் இருக்கிறது என்ற ஆணவத்தில் அடுத்தவன் சொத்துக்களுக்கெல்லாம்( உணர்வு அலுவலகம் ஆக்கிரமிப்பு) ஆசைப்பட்டு ஆக்கிரமிக்கும் இவர்களுக்கெல்லாம் நீங்கள் ஆதரவு தெரிவிப்பதும் அதை எதிர்த்து களம் கானும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் போராட்டங்களை வெளியிடாததும்,ஒரு சார்பு நிலையாகும்.தாங்கள் நடுநிலையுடன் செயல்பட இறைவணிடம். பிரார்த்திக்கிறோம்.

Niyas said...

"இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்" என்று இந்த ஆள் பொய் சொல்வதற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்தியாவிலே அதிக அளவில் ரத்ததானம் செய்த முஸ்லிம் அமைப்பும்,தமிழ் நாட்டிலே அதிக அளவில் ரத்ததானம் செய்த முதன்மை அமைப்பும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது சகல சுயமாக சிந்திக்க கூடிய ஒவ்வொருத்தருக்கும் தனியார்,அரச நிறுவனக்களுக்கு தெரியும் அதற்காக அவர்கள் பெற்று கொண்ட சான்றுகளும் உள்ளது.

தலைத்தனையன் said...

Brother Jafar, I am always pleased with Moulavi P.J's religious definition on any given matter. But when the issue comes on integrity he goes to a lower level than any laymen in our community.

I am not brainy like Moulavi P.J but as a normal a deep well wisher of this society and also having a concern over P.J. I wish that he could use his brilliance to bring all other associations together. Let them be under their own names.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர் ஜாபருக்கு வணக்கம், உங்கள் இஸ்லாமியா சமூக உள்கட்சி பிரச்சனைகளை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நாங்கள் யாருடைய விசயத்தையும் இருட்டடிப்பு செய்யவில்லை. tntj என்ற தலைப்பில் ஒரு போல்டர் உள்ளது பார்க்கவும் உங்கள் அமைப்பு அரசியல் சாராததால் நிறைய செய்திகள் வரவில்லை என நம்புகிறேன். ஒரு மதம் சார்ந்து நடத்தப்படாத பொது செய்திகள் இருந்தால் நீங்களும் அனுப்பலாம் பரிசீலனைக்கு பின்னால் வெளியிடப்படும். நன்றி வணக்கம். அன்புடன் ஆசிரியர் புதியதென்றல். மின்னஞ்சல் முகவரி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.