Jun 4, 2011

சொன்னது நீதானா "சொல்" "சொல்" மகாத்மாவே!!

சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ,

 அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது…  கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ,  திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”

நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின் நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…”

”பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்த விதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்ட மதமாற்றமே”…

”கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்ற வேண்டுமானால்,  ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமான போட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…

"இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல;  அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை.   -  (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி -10).

சிந்திக்கவும்: தலித் மக்களுக்கு எதிராக சொல்லப்பட்ட விவர்சனங்களில் இதுவே மிகவும் கெட்டது. ஆதிக்க உயர்ஜாதிகாரர்களின் எண்ணங்கள் மகாத்மாவையும் ஆட்டிப்படைத்தது என்பதில் இருந்து தலித் மக்கள் இந்தியாவில் அனுபவிக்கும் கொடுமைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. தலித் மக்களை ஐந்தறிவு படைத்த மாட்டோடு ஒப்பிட்டிருப்பது கொடுமையோ! கொடுமை.

3 comments:

Anonymous said...

இவ்வளவு வல்கராக ஆதி இந்தியர்களான திராவிடர்களை, தலித்களை, RSS முழு நேர ஊழியர்போல் காந்தியடிகள் சொல்லி இருக்கிறார், இருந்தும் அவரை ஏன் RSS கொலை செய்தது? இன்றுவரை அவரை கொன்றது சரிதான் என்று விழா எடுப்பதும் அவரை கொலை செய்த RSS நாதுராம் கோட்சேயின் சகோதரர் RSSகோபால் கோட்சே RSS நாதுராம் கோட்சேயின் செத்த தினத்தன்று பூஜைகள் செய்வதும் RSS யின் தேச பக்த கேடிகள் அன்று பெருமளவில் அங்கு கலந்து கொள்வதும் ஏன், ஏன், ஏன்???!!!!!

Anonymous said...

"அதுதான் ஆர்.எஸ்.எஸ்." தங்கள் சொந்த இயக்கத்தவர்களை, தாங்கள் சார்ந்துள்ள மதத்தை சேர்ந்த மக்களை கூட இவர்கள் பல சந்தர்ப்பங்களில் பலி இட்டுள்ளார்கள். இதற்க்கு ஒரு சின்ன உதாரணம் கோத்ரா ரயில் எரிப்பு. கோத்ரா ரயிலில் வந்த "கரசேவை" காரர்களை தாங்களே எரித்து கொன்றுவிட்டு, அதை காரணமாக வைத்து குஜராத் இனகலவரத்தை நடத்தினார்களே.

அதுபோல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி 'பாக்கிஸ்தான் என்று ஒரு நாடு' பிரிய காரணமாக அமைந்தார்களே. ஏன் என்றால் பாகிஸ்தான் என்று ஒரு நாடு இந்தியாவுடன் இருந்தால் முஸ்லிம்கள் இந்தியாவில் அரசியல் மற்றும் எல்லா துறைகளிலும் வந்து விடுவார்கள். அவர்களின் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும். என்ற திட்டத்தின் அடிப்படையிலும். தங்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்ற திட்டத்திலும் செய்த சதிதான் இது.

இப்பொது நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை பாருங்கள் அதில் கொல்லப்பட்டவர்களில் பெரும் பான்மையினர் அப்பாவி ஹிந்துமக்கள். இதை ஏன் அவர் செய்தார்கள். இதை வைத்து ஹிந்து, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சி கட்டில் அமரலாம் என்பதே.

Anonymous said...

காந்தியடிகளை RSS உறுப்பினர் நாதுராம் கோட்சே சுட்டுக்கொல்வதற்கு முன்பே தன் கையில் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டார் என்றும் அதனால் பல்லாயிரம் முஸ்லிம்கள் காந்தி கொல்லப்பட்டவுடன் பழி வாங்கும் நோக்கில் கொல்லப்பட்டார்கள் என்பதும் உண்மையா ?

அது உண்மையானால் ஒரு காந்தி கொல்லப்பட்டதற்கு ஒரு ஆர். எஸ். எஸ். உறுப்பினர் கோட்சே கொல்லப்பட்டார். கோட்சே இன் இந்த RSS சதிகாரச்செயலினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நியாயம் கிடைத்தது?

இதற்கு காரணமான, சிறு பான்மை, மற்றும் தலித்களின் மத்தியில் கலவரங்களை உண்டாக்கி அநியாயமாய் பல உயிர்களை வேட்டையாடும்

இன்றும் பல சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கும், வெடி குண்டுகளை வைத்து அதை சிறு பான்மை மக்களின் தலையில் சுமத்தும் ஆர். எஸ். எஸ் யின் பயங்கரவாத செயல்களை காரணமாக்கி அந்த இயக்கத்தை ஏன் இன்றுவரை நிரந்தரமாக தடை செய்யாமல் இருக்கின்றது இந்த அரசு.

- MOHAMED THAMEEM